உள்ளடக்கத்துக்குச் செல்

ஷைபால் குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷைபால் குப்தா
பிறப்பு1953/1954
இறப்பு(2021-01-28)28 சனவரி 2021 (aged 67)
இந்திய ஒன்றியம், பீகார், பட்னா
பணிSசமூக அறிவியலாளர் மற்றும் பொருளியலாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்Bihar, Stagnation Or Growth (1987)

ஷைபால் குப்தா (Shaibal Gupta, 1953/1954 - 28 சனவரி 2021) என்பவர் ஒரு இந்திய சமூக அறிவியலாளர் மற்றும் அரசியல் பொருளாதார நிபுணர் ஆவார். இவரது பணிகளானது இந்திய ஒன்றியத்தின் மாநிலமான பீகாரின் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டிருந்தன. இவர் பீகாரின் பட்னாவில் உள்ள ஆசிய மேம்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உறுப்பினர் செயலாளராக இருந்தார். இவரது ஆராய்ச்சி பல்வேறு மாநில அரசுகளின் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் மாநிலத்தில் பொருளாதார சீர்திருத்தங்களுக்கான பங்களிப்பாக இருந்தது.

கல்வி

[தொகு]

குப்தா 1977 ஆம் ஆண்டில் பாட்னா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் 1981 இல் பொருளாதாரத்தில் முனைவர் பட்டப்படிப்பை முடித்தார்.[1] முனைவர் பட்டம் பெற்ற இவர், பாட்னாவில் உள்ள ஏ. என். சின்கா சமூக ஆய்வு நிறுவனத்தில் கல்வியியல் உறுப்பினராக இருந்தார்.

தொழில் மற்றும் ஆராய்ச்சி

[தொகு]

குப்தா பாட்னாவில் உள்ள ஆசிய மேம்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உறுப்பினர் செயலாளராக இருந்தார். இது சமூக அறிவியல் ஆராய்ச்சியை மையமாகக் கொண்டு 1991 இல் நிறுவப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். பீகார் அரசால் நிறுவப்பட்டு ஆசிய மேம்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டுவரும் பொருளியல் கொள்கை மற்றும் பொது நிதிக்கான மையத்தின் இயக்குநராகவும் இருந்தார்.[2] பிராந்தியங்களுக்கு இடையில் பொருளியல் சமநிலையற்ற இந்திய போன்ற ஒரு நாட்டில் பொருளியல் ஆய்வுகளும், கலந்துரையாடல்களும் பொத்தாம் பொதுவானதாக இல்லாமல் குறிப்பிட்ட பிராந்தியல்களை முன்னுறுத்தி நடக்கவேண்டும் என்று வலியுறுத்திய இவர் தன் ஆய்வை பீகாரை மைய்யமாக கொண்டே மேற்கொண்டார்.[3]

குப்தாவின் ஆராய்ச்சியானது பீகாரின் பொருளாதாரத்தின் கட்டமைப்பு மற்றும் அரசியல் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பீகாரின் வளர்ச்சியில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தியது.[1]

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் இறப்பு

[தொகு]

குப்தா சமூக சேவகரும், மருத்துவ பயிற்சியாளரும், கலை வரலாற்றாசிரியர் பியுஷெண்டு குப்தாவின் மகன் ஆவார்.[4][5] இவரது குடும்பம் பீகாரில் உள்ள பேகூகசராயைச் சேர்ந்தது. அங்கு அவரது தந்தை பாட்னாவுக்குச் செல்வதற்கு முன்பு மருத்துவப் பயிற்சி மேற்கொண்டார்.[6]

குப்தாவுக்கு திருமணமாகி, தம்பதியருக்கு ஒரு மகள் உண்டு.[7] இவர் 2021 சனவரி 28 அன்று பாட்னாவில் பல உறுப்பு செயலிழப்பால் இறந்தார்.[8] இவருக்கு வயது 67. பீகாருக்கு இவர் ஆற்றிய பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, இவரது தகனம் அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்தது.

வெளியிடப்பட்ட படைப்புகள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷைபால்_குப்தா&oldid=3628090" இலிருந்து மீள்விக்கப்பட்டது