உள்ளடக்கத்துக்குச் செல்

ஷேர் இட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷேர் இட்
உருவாக்குனர்ஷேர் இட் தொழில்நுட்ப நிறுவனம்
தொடக்க வெளியீடு2015
அண்மை வெளியீடுவார்ப்புரு:Multiple releases
இயக்கு முறைமைஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், மேக் ஓ எஸ், விண்டோசு
கிடைக்கும் மொழிஆங்கிலம் உள்ளிட்ட 39 மொழிகள்
உரிமம்கட்டணமில்லை
இணையத்தளம்www.ushareit.com

ஷேர் இட் (SHAREit) என்பது ஏப்ரல் 2017 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட ஷேர் இட் லிமிடெட் தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் மென்பொருள் ஆகும். மைக்கேல் கியு இதன் தலைமை செயற்குழு அதிகாரியாவார்.[1] இந்த நிறுவனத்தின் மென்பொருளின் மூலம் படங்கள், நிகழ்படங்கள், ஒலி , தொடர்புகள், செயலி போன்றவற்றை திறன்பேசி மற்றும் கனிணி மூலமாக மற்றொரு திறன்பேசி மற்றும் கனிணிகளுக்கு அனுப்ப இயலும். மேலும் இதனை விண்டோசு இயங்குதளம், விண்டோசு திறன்பேசி, ஆண்ட்ராய்டு இயங்குதளம், ஐஓஎஸ் போன்ற இயங்குதளங்களில் பயன்படுத்தலாம்.[2] தற்போது ஆங்கிலம், இந்தி, இசுப்பானியம், பிரஞ்சு,உருசிய மொழி, அரேபியம் மற்றும் சீன மொழி உள்ளிட்ட 39 மொழிகளில் இந்த மென்பொருள் தற்போது பயன்படுத்தப்படுகிறது.[3]

விவரங்கள்

[தொகு]

சர்வதேச அளவில் 1.5 பில்லியன் பயனாளர்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர்.[4] மேலும் கடந்த பத்து ஆண்டுகளாக கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கமாகும் மென்பொருட்களின் முதல் பத்து இடங்களுக்குள் இது உள்ளதாக அப்பன்னி தெரிவித்துள்ளது. [5]

மே 8, 208 இல் இந்த நிறுவனம் பாஸ்ட்பிலிம்ஸ் எனும் செயலியினை கையகப்படுத்தி அதன் நிறுவனரை இந்தியாவிற்கான தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்தது.[6]

சான்றுகள்

[தொகு]
  1. "SHAREit Technologies Co.Ltd". GWC இம் மூலத்தில் இருந்து 2018-03-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180328151834/http://en.gwc.net/members/shareit/. 
  2. Ahaskar, Abhijit (2016-04-07). "Lenovo SHAREit: File sharing further improved". livemint.com/. http://www.livemint.com/Leisure/3kdnLJrIrdR4RWb1V5vp2K/Lenovo-SHAREit-File-sharing-fu-improved.html. 
  3. "SHAREit Launches New Upgrade of its Market-leading P2P Transfer App". The Jakarta Post. Archived from the original on 2015-10-01.
  4. Kohli-Khandekar, Vanita (2018-09-10). "Of our 1.5 bn users globally, India No. 1 market for SHAREit: MD Jason Wang". Business Standard India. https://www.business-standard.com/article/companies/of-our-1-5-bn-users-globally-india-no-1-market-for-shareit-md-jason-wang-118091001327_1.html. 
  5. "The Most Popular Google Play Apps of All Time". App Annie Content. https://www.appannie.com/en/insights/market-data/google-play-all-time/. 
  6. "SHAREit Acquires Fastfilmz To Increase Video Content, Regional Users". Inc42 Media. 2018-05-08. https://inc42.com/buzz/shareit-acquires-fastfilmz-to-increase-video-content-regional-users/. 

வெளியிணைப்புகள்

[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷேர்_இட்&oldid=3588305" இலிருந்து மீள்விக்கப்பட்டது