ஷேய்க் அப்துர் ரஹ்மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஷேய்க் அப்துர் ரஹ்மான் (Shaykh Abdur Rahman) வங்காளதேசத்தின் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான ஜகார்தா முஸ்லிம் ஜனதா வங்காளதேசத்தின் தலைவன் ஆவான். இவனை அப்துர் ரஹ்மான் ஷேய்க் (Abdur Rahman Shaykh) என்றும் அழைப்பர்.2001 ஆம் ஆண்டு தினஜ்பூர் மாவட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பிற்குப் பின்னரே இவ்வியக்கத்தைப் பற்றி தெரிய ஆரம்பித்தது[1]. இந்த இயக்கமானது வங்காளதேச அரசால் தீவிரவாத இயக்கம் என அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு தன்னார்வ நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நடந்த கண்காணிப்பில் வங்காளதேசம் முழுவம் 300 இடங்களில் 500 வெடிகுண்டுகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் இவ்வியக்கம் தடை செய்யப்பட்டது[2]. 2005 ஆம் ஆண்டு வங்காளதேசம் முழுவதும் நடந்த தொடர் குண்டு வெடிப்பின்[3] பின்னான தேடுதலில் 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.[4] 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தியதி இவருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.[5]

இதையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]