உள்ளடக்கத்துக்குச் செல்

ஷெர்லின் சோப்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஷெர்லின் சோப்ரா
ஷெர்லின் சோப்ரா 2019
பிறப்பு11 பெப்ரவரி 1984 (1984-02-11) (அகவை 40)
ஐதராபாத்து (இந்தியா), இந்தியா
இனம்பஞ்சாபி
பணிதயாரிப்பாளர்[3] விளம்பர அழகி, நடிகை, பாடகி
உயரம்5 அடி 7 அங் (1.70 m)[2]
எடை48 கிலோ
அழகுப் போட்டி வாகையாளர்
பட்டம்மிஸ் ஆந்திரா[1]
தலைமுடி வண்ணம்கறுப்பு[2]
விழிமணி வண்ணம்பழுப்பு[2]
வலைத்தளம்
sherlynchopra.com
ஷெர்லின் சோப்ரா

ஷெர்லின் சோப்ரா பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளராகவும், நடிகையாகவும் மற்றும் விளம்பர உலகில் அலங்கார அழகியாகவும் உள்ளார்.[4][5][6][7] ஜுலை 2012 இல் , பிளேபாய் " பத்திரிக்கையில் தான் தோன்றும் படம் வெளிவருவதாகக் கூறினார்.[8][9] பிளேபாய் பத்திரிக்கையில் ஆடையின்றி தோன்றிய முதல் இந்தியப் பெண்ணாக இவர் அறியப்படுகிறார்.[4][5][10][11] பின்னர் எம்டிவி நடத்திய ஸ்பிலிட்ஸ் வில்லா என்ற நிகழ்ச்சியில் ஆறாவது பகுதியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.[12] "பேட் கேர்ல் " என்ற இசைத் தொகுப்பினை 2013 டிசம்பரில் வெளியிட்டார்.[13]

இளமைக் காலம்[தொகு]

ஷெர்லின் சோப்ராவின் தந்தை ஒரு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.[14] இளமையில் ஸ்டான்லி மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற இவர் பின்னர், சிக்கந்தராபாத் செயின்ட் அன்னா மகளிர் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றுள்ளார். 1999 இல் "மிஸ் ஆந்திரா " பட்டம் பெற்றுள்ளார்.[1][15]

திரை வாழ்க்கை[தொகு]

இவர் ஆரம்ப காலங்களில் பாலிவுட் திரையுலகில் டைம்பாஸ், ரெட்ஸ் ஸ்வத்திக் மற்றும் கேம் போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பின்னர்ஆந்திரத் திரைப்படத் துறையில் "எ பிலிம் பை அரவிந்த் " என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.[16] "பிக்பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பகுதி 3 ல் போட்டியாளராக பங்கேற்றார்.[17] பின்னர்,அந்த நிகழ்ச்சியிலிருந்து 27 ஆம் நாளில் வெளியேற்றப்பட்டார்.[18] 2013இல் ரூபேஷ் பால் இயக்கத்தில் காமசூத்ரா 3டி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 2013 இல் நடந்த 66வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படத்தின் திரையிடலின் போது பங்கேற்றார்.[19][20] அதற்குப் பின்னர் 2016 வரை சில காலம் எதிலும் பங்கேற்காமல் அமைதியாகவே இருப்பதாக ஷெர்லின் அறிவித்தார்.[21]

திரைப்பட வரலாறு[தொகு]

வருடம் பெயர் பாத்திரம் மொழி குறிப்பு
2002 வெண்டி மப்பு திவ்யா தெலுங்கு
2002 யுனிவர்சிட்டி தமிழ்
2002 பீப்பர் ஆங்கிலம்
2005 எ பிலிம் பை அரவிந்த் நிருபமா தெலுங்கு தெலுங்கில் அறிமுகம்
2005 டைம் பாஸ் ஜென்னி இந்தி
2005 தோஸ்தி லீனா பஞ்சா இந்தி
2006 ஜவானி திவானி மோனா இந்தி
2006 சம்திங் ஸ்பெஷல் மோனா தெலுங்கு
2006 நாட்டி பாய் சோனியா இந்தி
2007 கேம் டினா இந்தி
2007 ரக்கீப் இந்தி
2007 ரெட் ஸ்வஸ்திக் அனாமிகா /ஜீனத் இந்தி
2009 தில் போலே ஹாப்பா! சோனியா சலூஜா இந்தி
2014 காமசூத்ரா 3டி காம தேவி ஆங்கிலம் முடிக்கப்படவில்லை [21]
2016 வாஜா தும் கோ இந்தி ரஜனீஷ் துகலுடன் "தில்மேன் சுப்பா லோங்கா" என்ற பாடலில் சிறப்புத் தோற்றம்"
2017 மாயா மாயா இந்தி குறும்படம். இவரே எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளார்.[22]

தொலைக்காட்சி[தொகு]

வருடம் பெயர் பணி
2009 பிக் பாஸ் -3 பங்கேற்பாளர்[23]
2013 எம்டிவி ஸ்பிலிட்ஸ்வில்லா - பகுதி 6 நிகழ்ச்சியாளர்.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Sherlyn won a beauty contest, she added as a caption "When I waz crowned Miss Andhra Pradesh.....'".
 2. 2.0 2.1 2.2 2.3 "Sherlyn Chopra on Playboy". Archived from the original on 19 மார்ச்சு 2018. பார்க்கப்பட்ட நாள் 10 பெப்பிரவரி 2019.
 3. https://m.hindustantimes.com/bollywood/sherlyn-chopra-turns-writer-producer-and-director-for-her-short-film/story-0Zj3xAbL3EMbAYJCtOilgP.html
 4. 4.0 4.1 "Sherlyn Chopra - First Indian Woman Nude for Playboy". snadgy.
 5. 5.0 5.1 "Sherlyn Chopra Hot Playboy Model 32 Sexy Pics Semi-Nude HD Photos". in.sfwfun.com.
 6. "15 Nude PLAYBOY Photos of Hot Bollywood Star Sherlyn Chopra - UNCENSORED & Sexy Indian Part-2". Reckon Talk. Archived from the original on 23 மார்ச்சு 2018. பார்க்கப்பட்ட நாள் 10 பெப்பிரவரி 2019.
 7. "The Official Facebook Sherlyn Chopra site". Sherlyn Chopra. பார்க்கப்பட்ட நாள் 8 சூலை 2011.
 8. "Sherlyn Chopra shoots for Playboy". NDTV. 17 July 2013. Archived from the original on 6 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 10 பிப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
 9. "Sherlyn Chopra's Playboy photoshoot pics finally out". இந்தியா டுடே. 14 August 2014.
 10. "Sherlyn Chopra nude pics released by Playboy on 15th August; Sunny Leone has competition? : MagnaMags". magnamags.com. Archived from the original on 15 மார்ச்சு 2015. பார்க்கப்பட்ட நாள் 10 பெப்பிரவரி 2019.
 11. "Sherlyn Chopra goes Naked to ride on Horseback". Bihar Prabda. 20 September 2013. Archived from the original on 13 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 10 பிப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
 12. "Sherlyn Chopra to host the sixth season of MTV Splitsvilla". IBN Live. 23 April 2013 இம் மூலத்தில் இருந்து 13 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130413230653/http://ibnlive.in.com/news/sherlyn-chopra-to-host-the-sixth-season-of-mtv-splitsvilla/384755-44-124.html. பார்த்த நாள்: 23 April 2013. 
 13. "Sherlyn Chopra's new Music Video Bad Girl goes Viral". Biharprabha News. பார்க்கப்பட்ட நாள் 4 சனவரி 2014.
 14. Staff Reporter (23 July 2012). "Bollywood insult? Playboy calls Sherlyn Chopra a legend". emirates247.com. Archived from the original on 16 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 23 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 15. Madhumitha (18 திசம்பர் 2008). "Confessions of a diva". Go-nxg.com. Archived from the original on 5 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 8 சூலை 2011.
 16. "A film by Aravind". idlebrain.com.
 17. "Rakhi's mom on Bigg Boss". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Indiatimes. 6 அக்டோபர் 2009.
 18. Sherlyn Chopra at 55th Idea Filmfare Awards in Mumbai. Photogallery.indiatimes.com (27 February 2010). Retrieved on 30 April 2013.
 19. "Sherlyn Chopra to do Kama Sutra film in 3D, after Playboy stint". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 29 October 2012. Archived from the original on 10 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 20 April 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
 20. "Indian @ Cannes 'Kamasutra 3D' icing up the cake of 66th CIFF". indiaglitz.com. 17 May 2013. Archived from the original on 23 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 1 June 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 21. 21.0 21.1 "Kamasutra 3D is not my film: Sherlyn Chopra". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 16 ஆகத்து 2016. பார்க்கப்பட்ட நாள் 19 அக்டோபர் 2016.
 22. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 15 செப்டெம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 11 பெப்பிரவரி 2019.
 23. "Sherlyn Chopra". biggboss.org. Bigg Boss Nau. Archived from the original on 11 செப்டெம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 3 ஆகத்து 2017.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷெர்லின்_சோப்ரா&oldid=3682325" இலிருந்து மீள்விக்கப்பட்டது