ஷெகான் மதுசங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேவபுரேஜ் ஷெஹான் மதுஷங்க குமாரா (Devapurage Shehan Madushanka Kumara பிறப்பு:மே 10, 1995) பொதுவாக ஷெஹான் மனுஷங்க என அறியப்படும் இவர் இலங்கை துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார் இவர் இலங்கை துடுப்பாட்ட அணி சார்பாக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது 20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார். வலது கை மட்டையாளர் மற்றும் வலது கை மித வேகப்பந்து வீச்சாளரான இவர் ஜோசப் வாஸ் கல்லூரியில் பயின்றார்.

உள்ளூர் போட்டிகள்[தொகு]

ஜிம்பாப்வே டெவலப்மென்ட் லெவன் அணிக்கு எதிராக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார் [1] இவர் 15 மார்ச் 2017 அன்று 2016–17 மாவட்ட ஒருநாள் போட்டித் தொடரில் இவர் கிலினோச்சி மாவட்ட துடுப்பாட்ட அணிக்காக பட்டியல் அ துடுப்பாட்ட போட்டிகளில் அறிமுகமானார்.[2] மார்ச் 2018 இல், இவர் 2017–18 சூப்பர் ஃபோர் மாகாணத் துடுப்பாட்ட தொடரில் இவர் தம்புல்லா அணியில் இடம் பெற்றார் .[3][4] அடுத்த மாதம் அறிவிக்கப்பட்ட 2018 சூப்பர் மாகாண ஒருநாள் போட்டிக்கான தம்புல்லா அணியிலும் இவர் இடம் பெற்றார் .[5]

2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற எஸ்.எல்.சி இருபது20 துடுப்பாட்ட லீக்கில் தம்புல்லா துடுப்பாட்ட அணியில் இவர் இடம் பெற்றார். மார்ச் 2019 இல், 2019 சூப்பர் மாகாண ஒருநாள் போட்டிக்கான தொடரில் இவர் காலி துடுப்பாட்ட அணியில் இடம் பெற்றார் .[6]

சர்வதேச வாழ்க்கை[தொகு]

வங்காளதேச துடுப்பாட்ட அணி இலங்கை துடுப்பாட்ட அணி மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி ஆகிய மூன்று அணிகள் கலந்து கொண்ட முத்தரப்பு தொடருக்கான இலங்கையின் ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) அணியில் இவர் இடம் பெற்றார்.[7] 27 ஜனவரி 2018 அன்று நடந்த முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இலங்கைக்காக ஒருநாள் போட்டியில் இவர் அறிமுகமானார்.[8] இந்த போட்டியில், இவர் ஹாட்ரிக் இலக்குகளை வீழ்த்தினார் இதன்மூலம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகப் போட்டியில் ஹாட்ரிக் இலக்குகளை வீழ்த்திய நான்காவது சர்வதேச வீரர் மற்றும் இரண்டாவது இலங்கை வீரர் எனும் சாதனை படைத்தார்.[9]

பிப்ரவரி 2018 இல், வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடருக்கான இலங்கையின் பன்னாட்டு இருபது20 அணியில் இவர் இடம் பெற்றார்.[10] இவர் பிப்ரவரி 15, 2018 அன்று வங்காளதேச துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார்.

[11] இரண்டாவது டி 20 போட்டியில், மதுஷங்கா ஒரு ஓவரில் இரண்டு ஆரம்ப விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு உதவிகரமாக இருந்தார்.[12] இருப்பினும், அவரது காயத்தால், இவர் மார்ச் மாதம் நடைபெற இருந்த நிதாகஸ் கோப்பைத் தொடர் மற்றும் சில இரு தரப்பு போட்டிகளில் விளையாட இயலாமல் போனது.

மே 2018 இல், 2018–19 இல் இலங்கை துடுப்பாட்ட வாரியத்தால் தேசிய ஒப்பந்தம் வழங்கப்பட்ட 33 கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருந்தார்.[13][14] டிசம்பர் 2018 இல், 2018 ஏ.சி.சி வளர்ந்து வரும் ஆசிய அணிகள் கோப்பைக்கான இலங்கை அணியில் இடம் பெற்றார்.[15]

குறிப்புகள்[தொகு]

 1. "Sri Lanka Development Emerging Team tour of South Africa and Zimbabwe, Zimbabwe Development XI v Sri Lanka Development Emerging Team at Harare, Aug 28-31, 2016".
 2. "Districts One Day Tournament, Northern Group: Jaffna District v Kilinochchi District at Colombo (Moors), Mar 15, 2017".
 3. "Cricket: Mixed opinions on Provincial tournament". Sunday Times (Sri Lanka). 26 March 2018. http://www.sundaytimes.lk/article/1041112/cricket-mixed-opinions-on-provincial-tournament. பார்த்த நாள்: 27 March 2018. 
 4. "All you need to know about the SL Super Provincial Tournament". Daily Sports. 26 March 2018. https://dailysports.lk/all-you-need-to-know-about-the-sl-super-provincial-tournament/. பார்த்த நாள்: 27 March 2018. 
 5. "SLC Super Provincial 50 over tournament squads and fixtures". http://www.thepapare.com/slc-super-provincial-50-tournament-squads-fixtures/. பார்த்த நாள்: 27 April 2018. 
 6. "Squads, Fixtures announced for SLC Provincial 50 Overs Tournament".
 7. "Rookie fast bowler Shehan Madushanka in SL squad for tri-series".
 8. "Final (D/N), Bangladesh Tri-Nation Series at Dhaka, Jan 27 2018".
 9. "Madushanka's debut hat-trick seals tri-series title".
 10. "Sri Lanka pick Asitha for T20 series, Jeevan Mendis returns". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/ci/content/story/1135802.html. பார்த்த நாள்: 7 February 2018. 
 11. "1st T20I (N), Sri Lanka Tour of Bangladesh at Dhaka, Feb 15 2018". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/ci/engine/match/1130746.html. பார்த்த நாள்: 15 February 2018. 
 12. "Mendis stars in thumping win as SL sweep tour". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/bangladesh/content/story/1137076.html. பார்த்த நாள்: 15 February 2018. 
 13. "Sri Lanka assign 33 national contracts with pay hike".
 14. "Sri Lankan players to receive pay hike".
 15. "Sri Lanka Squad for the ACC Emerging Teams Cup 2018".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷெகான்_மதுசங்கா&oldid=2867755" இருந்து மீள்விக்கப்பட்டது