ஷீர்மல்
ஈரானில் வழங்கப்படும் ஷீர்மல் | |
மாற்றுப் பெயர்கள் | ஷீர்மல் |
---|---|
தொடங்கிய இடம் | ஈரான், இந்தியா, பாக்கித்தான் |
பகுதி | ஈரான், இந்தியா துணைகண்டம் |
முக்கிய சேர்பொருட்கள் | மைதா, பால், நெய், குங்குமப்பூ |
ஷீர்மல் (பாரசீக/உருது: شیرمال, இந்தி: शीरमल), ஷீர்மால் அல்லது ஷிர்மல் என்றும் உச்சரிக்கப்படுவது, ஈரானிலும் இந்தியத் துணைக்கண்டத்திலும் உண்ணப்படும் குங்குமப்பூச் சுவையினைக் கொண்ட பாரம்பரிய ரொட்டி ஆகும். ஷீர்மல் என்ற சொல் ஷீர் மற்றும் மாலீதன் என்ற பாரசீகச் சொற்களிலிருந்து பெறப்பட்டதாகும். ஷீர் (شیر) என்ற பாரசீகச் சொல்லுக்கு பால் என்பதும் மாலீதன் (مالیدن) என்ற சொல்லுக்குத் தேய்த்தல் என்பதும் பொருள். நேரடி மொழிபெயர்ப்பில் ஷீர்மல் என்றால் தேய்க்கப்பட்ட பால் என்பதாகும். பாரசீகத்தில் தோன்றிய இந்த உணவு இடைக்காலத்தில் முகலாயர்களால் வட இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. லக்னோ, ஹைதராபாத் மற்றும் ஓளரங்காபாத்தின் அருஞ்சுவை உணவுப்பொருளானது.[1] அவதி சமையலில் ஒரு பகுதியான இது பழைய போபாலிலும் பாகிஸ்தானிலும் விரும்பப்படும் உணவாகும்.[2]
தயாரிப்பு
[தொகு]ஷீர்மல் என்பது ஈஸ்ட் சேர்த்துப் புளித்த மைதாவில் தந்தூரிலோ அடுப்பிலோ செய்யப்படுகிற சற்றே இனிப்பான நான் (ரொட்டி) ஆகும். பாரம்பரியமாக ரொட்டியைப் போல் செய்யப்பட்டுவந்த ஷீர்மல், தற்காலத்தில் நானைப் போலத் தயாரிக்கப்படுகிறது. நானைச் செய்யப் பயன்படுத்தப்படும் வெதுவெதுப்பான நீருக்கு மாற்றாக குங்குமப்பூவும் ஏலக்காயும் சேர்க்கப்பட்டு சர்க்கரையால் இனிப்பூட்டப்பட்ட வெதுவெதுப்பான பால் பயன்படுத்தப்படுகிறது. செய்துமுடிக்கப்பட்ட ஷீர்ம்ல், டேனிய மாப்பண்டத்தை ஒத்துள்ளது.
ஷீர்மல் தயாரிப்பதில் ஈரானில், மண்டலங்களுக்கிடையே சிறிய வேறுபாடுகள் உள்ளன. சில நேரங்களில் இது மண்டலங்களுக்கிடையே பயணம் செய்கையில் ஒரு நினைவுப் பொருளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் குறிப்பாக லக்னோ நகரில், சில வேளைகளில் கபாப்கள், டிக்கா அல்லது நிஹாரியுடன் ஷீர்மல் பரிமாறப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "A nawabi affair". தி இந்து. Archived from the original on 23 October 2010. பார்க்கப்பட்ட நாள் 5 October 2014.
- ↑ "A slice of the Awadh exotica". தி இந்து. Archived from the original on 5 November 2011. பார்க்கப்பட்ட நாள் 5 October 2014.