உள்ளடக்கத்துக்குச் செல்

ஷீனா வர்க்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என்.வி. ஷீனா
2017 மகளிர் மும்முறைத் தாண்டுதலில் தனது வெண்கலப் பதக்கத்துடன் என்.வி. ஷீனா.
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியன்
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
பதக்கத் தகவல்கள்
தடகளம்
நாடு  இந்தியா
ஆசிய சாம்பியன்ஷிப்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2017 புவனேசுவரம் மும்முறைத் தாண்டுதல்
ஆசிய உள்ளரங்கப் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்2018 தெஹ்ரான்மும்முறைத் தாண்டுதல்

ஷீனா நெல்லிக்கல் வர்க்கி (Sheena Nellickal Varkey) அல்லது என். வி. ஷீனா, 1992 ஆம் ஆண்டு நவம்பர் 22 அன்று பிறந்த இந்திய தடகள வீராங்கனை.இவர் மும்முறைத் தாண்டுதல் போட்டியில் பங்கேற்கிறார்.கேரளத்தைச் சேர்ந்த இவர், 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் மும்முறைத் தாண்டுதல் பிரிவில் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். அந்தப் போட்டி ஹாங்சோ நகரில் நடைபெற்றது.[1] மேலும், அவர் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய உட்புற தடகளப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.[2]

விளையாட்டு வாழ்க்கை

[தொகு]
  • 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்திய தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். இந்தப் போட்டி கலிங்கா விளையாட்டரங்கில் புவனேஸ்வரில் நடைபெற்றது.
  • 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில்,10வது ஆசிய உட்புற தடகளப் போட்டியில் பங்கேற்றார். அந்தப் போட்டி அஸ்தானாவில் நடைபெற்றது.[3][4]
  • 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில்,2018 ஆசிய உட்புற தடகளப் போட்டியில் மகளிர் மும்முறைத் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அந்தப் போட்டி தெஹ்ரானில் நடைபெற்றது.[5][6]
  • 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், ஆசிய தடகளப் போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்றார். அந்தப் போட்டி புவனேஸ்வரில் நடைபெற்றது.[7][8][9]
  • 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்,இந்திய திறந்த தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். அந்தப் போட்டி லக்னோவில் நடைபெற்றது.
  • 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், 2014 ஆசிய உட்புற தடகளப் போட்டியில் ஏழாவது இடத்தைப் பெற்றார். அந்தப் போட்டி ஹாங்சோவில் நடைபெற்றது.
  • 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், தேசிய இளையோர் தடகளப் போட்டியில் பெரிய வெற்றி பெற்று ஷீனா முதன்முறையாக கவனம் பெற்றார். அந்தப் போட்டி லக்னோவில் நடைபெற்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Full list of Indian athletes for Asian Games 2023". Firstpost (in ஆங்கிலம்). 2023-08-26. Retrieved 2023-10-03.
  2. "Asian Indoor Athletics Championships: Indian triple-jumper Sheena Nellckal Varkey bags silver medal". DNA India (in ஆங்கிலம்). Retrieved 2023-10-03.
  3. "Nellickal Verkay SHEENA | Profile | World Athletics". worldathletics.org. Retrieved 2023-10-03.
  4. Sudarshan, M (2023-02-12). "Asian Indoor Athletics Championships 2023: India clinch silver, bronze in women's pole vault". Khel Now (in English). Retrieved 2023-10-04.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "Triple jumper Sheena wins silver in Asian Indoor Athletics". The Times of India. 2018-02-01. https://timesofindia.indiatimes.com/sports/more-sports/athletics/triple-jumper-sheena-wins-silver-in-asian-indoor-athletics/articleshow/62746538.cms.
  6. Scroll Staff (2018-02-01). "Asian Indoor Athletics: Sheena Nellckal Varkey bags silver in triple jump on day one". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-10-03.
  7. "2017 Asian Athletics Championships: India creates history, tops medal tally". JagranJosh. 11 July 2017. Retrieved 19 July 2021.
  8. Navneet Singh (8 July 2021). "Sudha Singh wins gold in Asian Athletics Championships steeplechase". Hindustan Times. Retrieved 19 July 2021.
  9. Jonathan Selvaraj (8 July 2017). "Asian Athletics Championships: Sudha Singh wins gold, Dutee bags her second medal on day 3". ESPN. Retrieved 19 July 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷீனா_வர்க்கி&oldid=4544937" இலிருந்து மீள்விக்கப்பட்டது