உள்ளடக்கத்துக்குச் செல்

ஷிவ் குமார் சரின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவ குமார் சரின்
பிறப்பு20 ஆகத்து 1952 (1952-08-20) (அகவை 74)
இந்தியா
பணிஇரைப்பை-குடல் மற்றும் கல்லீரல் சிறப்பு மருத்துவர், கல்லீரல் மற்றும் பித்த நாள அறிவியல் நிறுவனத்தின் (டெல்லி) வேந்தர்
விருதுகள்பத்ம பூஷண்
சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது
TWAS (உலக அறிவியல் அகாடமி) சர்வதேச விருது
G-Files விருதுகள்
ஓம் பிரகாஷ் பாசின் விருது

ஷிவ் குமார் சரின் ஒர் இந்திய மருத்துவர்; இவர் கல்லீரல் , இரைப்பை-குடல் சார்ந்த நோய்களில் நிபுணத்துவம் பெற்றவர். டெல்லி அரசின் கீழ், டெல்லியின் வசந்த் குஞ்சில் 'கல்லீரல் , பித்த நாள அறிவியல் நிறுவனம்' (ஐ.எல்.பி.எஸ்.) எனும் மிகப்பெரிய கல்லீரல் மருத்துவமனையையும், கல்லீரல் சார்ந்த சிறப்புப் பல்கலைக்கழகத்தையும் , அத்துடன் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்ற மையத்தையும் இவர் நிறுவினார். இவர் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, 'தி வேர்ல்ட் அகாடமி ஆஃப் சயின்ஸ்' விருது , 2007-இல் பத்ம பூஷண் விருது[1] ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.[2] இந்திய மருத்துவக் கவுன்சிலின் ஆளுநர்கள் குழுவின் தலைவராகப் பணியாற்றிய இவர், நீட் தேர்வுகள் உள்ளிட்ட புதிய மருத்துவக் கல்விக்கான தொலைநோக்குத் திட்டத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றினார். அறிவியல் துறையில் ஒர் முன்னோடியாகத் திகழும் இவர், 'ஆசிய பசிபிக் கல்லீரல் ஆய்வுச் சங்கத்தின்' தலைவராகப் பணியாற்றியுள்ளார்; தற்போது இந்தியாவின் 'தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின்' தலைவராக (2021-2024) உள்ளார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

கல்லீரல் , பித்தப்பை அறிவியல் நிறுவனத்தின் வேந்தரான பேராசிரியர் சிவ குமார் சரின், ஒர் இந்திய மருத்துவர்; கல்லீரல் நிபுணர், இரைப்பைக் குடல் நிபுணர் , பொது சுகாதார ஆர்வலர் ஆவார். இவர் டெல்லி அரசின் கீழ், டெல்லியின் வசந்த் குஞ்சில் கல்லீரல் பல்கலைக்கழகமான கல்லீரல் , பித்தப்பை அறிவியல் நிறுவனத்தை ) நிறுவினார். டாக்டர் சரின் தற்போது தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் (இந்தியா) தலைவராக உள்ளார்.[3] இவர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு மருத்துவத்தின் துணைப் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.[4]

தன்வந்திரி மருத்துவ அறக்கட்டளை ஏற்பாடு செய்த “41வது தன்வந்திரி விருது 2013” ​​மூலம் டாக்டர் ஷிவ்குமார் சரினை மத்திய உள்துறை அமைச்சர் கே.சங்கர்நாராயணன், ஸ்ரீ சுஷில்குமார் ஷிண்டே மற்றும் பத்மவிபூஷன் டாக்டர் பி.கே.கோயல் ஆகியோர் பாராட்டினர்.

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

[தொகு]

தன்வந்திரி மருத்துவ அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் திரு. சுஷில்குமார் ஷிண்டே ,பத்மவிபூஷன் டாக்டர் பி. கே. கோயல் ஆகியோர் டாக்டர் சிவகுமார் சரின் அவர்களுக்கு "41-வது தன்வந்திரி விருது 2013"-ஐ வழங்கி கௌரவித்தனர்.

டாக்டர் சரின் 1986-ல் ஜப்பானிய ஆராய்ச்சி அறிவியல் விருதையும்[5], 1987-ல் ஹோக்ஸ்ட் ஓம் பிரகாஷ் நினைவு விருதையும்[6] பெற்றார். 1994-ல் மருத்துவ அறிவியலுக்கான ரன்பாக்ஸி ஆராய்ச்சி அறிவியல் விருதைப் பெற்ற இவர், தொடர்ந்து 1996-ல் அறிவியல் பிரிவில் இந்தியாவின் மிக உயரிய விருதான அறிவியல் ,தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதைப் பெற்றார்[7]. இந்திய மருத்துவர்கள் சங்கம் 1999-ல் இவருக்கு 'கிஃப்டட் டீச்சர்' (சிறந்த ஆசிரியர்) விருதை வழங்கியது; மேலும் 2003-ல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அம்ருத் மோடி யூனிசெம் விருது இவருக்கு வழங்கப்பட்டது[8]. இவர் 2004-ல் உலக அறிவியல் அகாடமியின் பரிசையும், அதே ஆண்டில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் வெள்ளி விழா விருதையும், 2005-ல் இந்திய வர்த்தக தொழில்துறை கூட்டமைப்பின் விருதையும் பெற்றார்[9]. 2007-ல் ஓம் பிரகாஷ் பாசின் விருதைப்[10] பெற்ற அதே ஆண்டில், இந்திய அரசு குடியரசு தின கௌரவப் பட்டியலில் இவருக்கு 'பத்ம பூஷன்' குடிமக்கள் விருதை அறிவித்தது; மேலும் 2008-ல் பகவான் மகாவீர் அறக்கட்டளையின் மகாவீர் விருதைப் பெற்றார்[11]. தன்வந்திரி மருத்துவ விருது, ராஷ்ட்ரிய சம்மான் புரஸ்கார், டெல்லி அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது, மலேசியா கல்லீரல் அறக்கட்டளை விருது , டெல்லி மருத்துவ சங்கத்தின் வசிஷ்ட் சிகிச்சை ரத்னா விருது ஆகியவற்றையும் அவர் பெற்றுள்ளார்[12].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Awardee Details: Shanti Swarup Bhatnagar Prize". ssbprize.gov.in. Retrieved 2024-02-05.
  2. "List of Padma Bhushan award recipients (2000–2009)", Wikipedia (in ஆங்கிலம்), 2023-11-03, archived from the original on 8 October 2024, retrieved 2024-02-05
  3. "National Academy of Medical Sciences", Wikipedia (in ஆங்கிலம்), 2023-11-03, retrieved 2024-02-05
  4. "Adjunct Faculty | Welcome to Jawaharlal Nehru University". www.jnu.ac.in. Retrieved 2024-02-05.
  5. "Indian Fellow". Indian National Science Academy. 2016. Archived from the original on 13 May 2021. Retrieved 16 June 2016.
  6. "NAMS Fellow" (PDF). National Academy of Medical Sciences. 2016. Archived (PDF) from the original on 4 March 2016. Retrieved 16 June 2016.
  7. "Brief Profile of the Awardee". Council of Scientific and Industrial Research. 2016. Retrieved 16 June 2016.
  8. "NAMS Fellow" (PDF). National Academy of Medical Sciences. 2016. Archived (PDF) from the original on 4 March 2016. Retrieved 16 June 2016.
  9. "NAMS Fellow" (PDF). National Academy of Medical Sciences. 2016. Archived (PDF) from the original on 4 March 2016. Retrieved 16 June 2016.
  10. "Om Prakash Bhasin Award". Om Prakash Bhasin Foundation. 2016. Archived from the original on 18 February 2022. Retrieved 18 June 2016.
  11. "Indian Fellow". Indian National Science Academy. 2016. Archived from the original on 13 May 2021. Retrieved 16 June 2016.
  12. "S K Sarin on APASL-ACLF Research Consortium". APASL-ACLF Research Consortium. 2016. Archived from the original on 18 August 2016. Retrieved 17 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷிவ்_குமார்_சரின்&oldid=4615668" இலிருந்து மீள்விக்கப்பட்டது