ஷியாம் நந்தன் சஹாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷியாம் நந்தன் சஹாய்
பிறப்புபீகார், இந்தியா
இறப்புஇந்தியா
கல்லறைமுசாபர்பூர்
மற்ற பெயர்கள்இராவ் பகதூர் ஷியாம் நந்தன் சஹாய்
பணிகல்வியாளர்
நில உரிமையாளர்
மக்களவை உறுப்பினர்
அறியப்படுவதுகல்விச் செயல்பாடுகள்
விருதுகள்பத்ம பூசண்

ஷியாம் நந்தன் சஹாய் (Shyam Nandan Sahay) ஓர் இந்திய நில உரிமையாளரும், கல்வியாளரும், மக்களவை உறுப்பினரும், பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் துணைவேந்தரும் ஆவார்.[1] இந்திய மாநிலமான பீகாரில் பிறந்த இவர் பாட்னா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.[2] இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக முசாப்பர்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து முதலாவது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இவர் 1957இல் மீண்டும் முசாபர்பூரிலிருந்து வென்றார். ஆனால் அதே ஆண்டில் இறந்தார். கல்விக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக 1957ஆம் ஆண்டில் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை கௌரவமான பத்ம பூசண் விருதை இந்திய அரசு இவருக்கு வழங்கியது.[4] முசாபர்பூரில் ஒரு சாலைக்கு இவரது பெயரிடப்பட்டது.

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "About the University" (PDF). Babasaheb Bhimrao Ambedkar Bihar University. 2016. பார்க்கப்பட்ட நாள் 5 July 2016.
  2. Forty Years of Indian Police. Concept Publishing Company. 1 January 1981. https://books.google.com/books?id=oIP8rj00g8EC&pg=PA21. 
  3. "List of winner and runner MPs in 1951 General Elections". Elections.in. 2016. Archived from the original on 17 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 July 2016.
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016. {{cite web}}: Unknown parameter |https://www.webcitation.org/6U68ulwpb?url= ignored (help)

வெளி இணைப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷியாம்_நந்தன்_சஹாய்&oldid=3607038" இலிருந்து மீள்விக்கப்பட்டது