ஷா வாலி கோட் மாவட்டம்
தோற்றம்

ஷா வாலி கோட் மாவட்டம் (Shah Wali Kot District), ஆப்கானித்தான் நாட்டின் கந்தகார் மாகாணத்தின் 14 மாவட்டங்களில் ஒன்றாகும். 2006ல் இதன் மக்கள் தொகை 38,400 ஆகும். 2001-2021 ஆப்கானித்தான் போரின் போது இம்மாவட்டம் தாலிபான்களின் கோட்டையாக விளங்கியது.
அமைவிடம்
[தொகு]கந்தகார் மாகாணத்தின் வடக்கில் அமைந்த ஷா வாலி கோட் மாவட்டத்தின் மேற்கில் காக்ரேஸ் மாவட்டம், வடக்கில் நெஷ் மாவட்டம் , கிழக்கில் ஒரூஸ்கான் மாகாணம், தெற்கில் தாமன் மாவட்டம் மற்றும் அர்கந்தாப் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
