ஷா சுஜா துராணி
| சுஜா ஷ துராணி | |||||
|---|---|---|---|---|---|
| ஆப்கானித்தானின் ஆட்சியாளர் | |||||
| துராணிப் பேரரசர் | |||||
| ஆட்சி | 13 ஜூலை 1803 – 3 மே 1809 (முதல் ஆட்சிக்காலம்) 7 ஆகஸ்ட் 1839 – 5 ஏப்ரல் 1842இரண்டாம் ஆட்சிக்காலம்) | ||||
| முடிசூட்டு விழா | 13 ஜூலை 1803 | ||||
| முன்னிருந்தவர் | மஹ்மூத் ஷா துராணி | ||||
| பின்வந்தவர் | மஹ்மூத் ஷா துராணி தோஸ்த் மஹ்மூத் கான் | ||||
| மனைவிகள் |
| ||||
| வாரிசு(கள்) | அப்துல் சமத் கான் தைமூர் மிர்சா | ||||
| |||||
| அரச குலம் | துராணி | ||||
| தந்தை | தைமூர் ஷா துராணி | ||||
| தாய் | சதோசாய் | ||||
| பிறப்பு | 4 நவம்பர் 1785 | ||||
| இறப்பு | 5 ஏப்ரல் 1842 (அகவை 56) காபுல், துராணிப் பேரரசு, நவீன ஆப்கானித்தான் | ||||
| அரச முத்திரை | |||||
'தடித்த எழுத்துக்கள்'சுஜா ஷா துராணி (Shah Shuja Durrani) (நவம்பர் 1785-ஏப்ரல் 5,1842) 1803 முதல் 1809 வரை துராணிப் பேரரசின் ஆட்சியாளராக இருந்தார். பின்னர் 1839 முதல் 1842 இல் இறக்கும் வரை ஆட்சி செய்தார். தைமூர் ஷா துராணியின் மகனான சுஜா, பஷ்தூன் அப்தாலி குலத்தின் சதோசாய் வம்சாவளியைச் சேர்ந்தவர். மேலும், துராணிப் பேரரசின் ஐந்தாவது மன்னராவார்.[1]
வாழ்க்கை
[தொகு]1798 முதல் 1801 வரை ஹெராத் மற்றும் பெசாவரின் ஆளுநராக சுஜா இருந்தார். 1801 அக்டோபரில் (இவரது சகோதரர் ஜமான் ஷா பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர்) ஆப்கானித்தானின் மன்னராக தன்னை அறிவித்துக் கொண்டார். 1803 ஜூலை 13 அன்று முறையாக அரியணை ஏறினார். ஆப்கானித்தானில், பாரம்பரியமாக ஒரு பார்வையற்றவர் அமீராக இருக்க முடியாது, எனவே சுஜாவின் மாற்றாந்தாய் சகோதரர் மஹ்மூத் ஷா ஜமானைக் குருடாக்கினார், ஆனால் கொல்லப்படவில்லை.[2] 1803இல் ஆட்சிக்கு வந்த பிறகு, சக்திவாய்ந்த பராக்சாய் குடும்பத்துடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவந்தார். அவர்களுடன் ஒரு கூட்டணியை உருவாக்க, சுஜா அவர்களின் சகோதரி வஃபா பேகத்தை மணந்தார்.[3]
1809 ஆம் ஆண்டில், பிரான்சின் ஆப்கானித்தான் மற்றும் பஞ்சாப் பகுதியின் மீதான படையெடுப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளும் ஒரு வழிமுறையாக, சுஜா ஆப்கானித்தானை பிரித்தானிய இந்தியாவுடன் சேர்த்தார்.[4] 1809 ஆம் ஆண்டில், ஆப்கானித்தானில் ஒரு பிரித்தானிய தூதுகுழு ஆப்கானித்தானுக்கு அனுப்பப்பட்டது.
ஜூன் 1809 இல், சுஜா மஹ்மூத் ஷா துராணியால் நிம்லா போரில் தோற்கடிக்கப்பட்டு பஞ்சாபிற்கு நாடுகடத்தப்பட்டார். [5] அங்கு ஜஹாந்தாத் கான் பமிசாயால் கைது செய்யப்பட்டு அட்டோக்கில் (1811–1812) சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அட்டா முகமது கானால் காஷ்மீருக்கு (1812–1813) அழைத்துச் செல்லப்பட்டார். மஹ்மூத் ஷாவின் மந்திரியான பதேகான் இரஞ்சித் சிங்கின் இராணுவத்துடன் இணைந்து காஷ்மீரை ஆக்கிரமித்தபோது, சுஜா சீக்கிய இராணுவத்துடன் வெளியேற முடிவு செய்தார். 1813 முதல் 1814 வரை இலாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தியாவில் இருந்த காலத்தில், தன்னிடமிருந்த கோகினூர் வரைத்தைப் போல புகழ் பெற்ற தரியா-இ-நூர் (ஒளியின் கடல்) என்ற வைரத்தை இரஞ்சித் சிங்கிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[6] இலாகூரில் இரஞ்சித் சிங்கின் காவலில் இருந்து சுஜா லூதியானாவிற்குச் சென்று பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் தஞ்சமைடைந்தார்.[7]
1818 முதல், சுஜா கிழக்கிந்திய நிறுவனத்திடமிருந்து ஓய்வூதியம் பெற்று தனது குடும்பத்துடன் ஆடம்பரமான பாணியில் வாழ்ந்தார். [8] சுஜா முதலில் லூதியானாவில் தங்கியிருந்தார். லூதியானாவில் இவர் தங்கியிருந்த மாதா ராணி சௌக் பிரதான அஞ்சல் நிலையமாக செயல்படுகிறது. இங்கு இவர் தங்கியிருந்ததை நினைவுகூரும் வகையில் ஒரு வெள்ளை பளிங்கு கல் வைக்கப்பட்டது.[9]
1833 ஆம் ஆண்டில், பஞ்சாபின் இரஞ்சித் சிங்குடன் சுஜா ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார். ஒப்பந்தம் மூலம் இவர் தனது படைகளை பஞ்சாப் வழியாக ஆப்கானித்தானுக்கு அணிவகுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு, சீக்கியப் படைகளுடன் சேர்ந்து காந்தகார் மீது போர் தொடுத்தார். அரி சிங் நல்வா தலைமையிலான சீக்கியர்கள் பெசாவரைத் தாக்கினர். காந்தகார் போரில் தோற்கடிக்கப்பட்ட சுஜா தப்பி ஓடினார். சீக்கியர்கள் தங்கள் பங்கிற்கு பெசாவரை மீட்டெடுத்தனர். [10]
அதிகாரத்தை மீட்டெடுத்தல்
[தொகு]1838 ஆம் ஆண்டில், தோஸ்த் முகமது கானிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக சுஜா ஆங்கிலேயர்கள் மற்றும் இரஞ்சித் சிங்கின் ஆதரக் கோரினார். பெரும்பாலான ஆப்கானியர்கள் தன்னை ஆட்சியாளராக திரும்புவதை வரவேற்பார்கள் என்று நம்பினார். ஆனால் உண்மையில், 1838 வாக்கில், ஆப்கானித்தானில் உள்ள பெரும்பாலான மக்கள் இவரை நினைவில் கொள்ள முடியவில்லை. இவரை ஒரு கொடூரமான, கொடுங்கோன்மை ஆட்சியாளராக முற்றிலும் வெறுத்தனர்.[11]
சுஜா பதவி நீக்கம் செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆகஸ்ட் 7,1839 அன்று சீக்கியர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் உதவியுடன் மீண்டும் சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டார்.[12] இருப்பினும், ஆங்கிலேயர்களும் சீக்கியர்களும் வெளியேறியபோது இவர் நீண்ட காலம் ஆட்சியில் இருக்க முடியவில்லை. அதிகாரத்துக்கு வந்ததும் தனது சொந்த மக்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்தினார். பொதுவாக கோட்டையிலேயே தங்கியிருந்தார். மேலும் தனக்கு துரோகம் இழைத்ததாக நம்பிய ஆப்கானியர்களை பழிவாங்குவதில் தனது நேரத்தை செலவிட்டார், இதனால் சுஜா தனது மக்ளிடையே மிகவும் பிரபலமற்றவராக ஆனார்.[13]
படுகொலை
[தொகு]மத அழுத்தத்தால் நிர்ப்பந்திக்கப்பட்ட சுஜா, 1842 ஏப்ரல் 4 அன்று காபூலுக்கு அருகே ஒரு இராணுவத்தை திரட்டி, ஆங்கிலேயர்கள் மீது தாக்குதல் நடத்தினார். இந்தப் பயணத்தில் நவாப் முகமது ஜமான் கானின் மகன் சுஜா உத்-தௌலா தலைமையில் ஒரு குழு சுஜாவை படுகொலை செய்தது.[14][15][16]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் – Shah Shoja
- ↑ Husain 2018, ப. 16.
- ↑ Dalrymple 2012, ப. 23.
- ↑ Husain 2018, ப. 7.
- ↑ Dalrymple 2012, ப. 27.
- ↑ Husain 2018, ப. 23.
- ↑ Husain 2018, ப. 25.
- ↑ Perry 2005, ப. 111.
- ↑ Husain 2018, ப. 386.
- ↑ Husain 2018, ப. 35.
- ↑ Perry 2005, ப. 112.
- ↑ Moon 1989, ப. 515.
- ↑ Perry 2005, ப. 121.
- ↑ Husain 2018, ப. 304–306.
- ↑ Moon 1989, ப. 552.
- ↑ Buckland, C. E. (1968). Dictionary of Indian Biography. Haskell House Publishers ltd. p. 385. ISBN 978-0838302774.
நூல் ஆதாரங்கள்
[தொகு]- Dalrymple, William (2012). Return of a King: The Battle for Afghanistan. Bloomsbury. ISBN 978-1408818305.
- Husain, Farrukh (2018). Afghanistan in the Age of Empires. Silk Road Books. ISBN 978-1527216334.
- Macintyre, Ben (2002). The Man Who Would Be King. New York: Farrar, Straus, Giroux. ISBN 978-0374529574.
- Moon, Penderel (1989). The British Conquest and Dominion of India. London: Duckworth. ISBN 978-0253338365.
- Perry, James M. (2005). Arrogant Armies. Edison, New Jersey: CastleBooks. ISBN 978-0471119760.
மேலும் வாசிக்க
[தொகு]- Divan-i-Shuja (1825)
- Autobiography (1826), described in Zimmermann, Carl (1842), "Anhang: Schach Schuja" [Appendix: Shah Shujah], Der Kriegs-Schauplatz in Inner-Asien, oder, Bemerkungen zu der Uebersichts-Karte von Afghanistan, dem Penjab und dem Lande am untern Indus... [The Theater of War in Inner Asia, or, Remarks on the General Map of Afghanistan, the Punjab, and the Land on the Lower Indus] (in ஜெர்மன்), Berlin: E. H. Schroeder, pp. 181–201.
