ஷார்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி ஷார்டு
Shard London Bridge May 2012.JPG
மே 2012இல் தி ஷார்டு
பதிவு உயரம்
Tallest in ஐரோப்பா since 2012[I]
முந்தியதுகொமர்சுபாங்க் கோபுரம்
பொதுவான தகவல்கள்
நிலைமைமுழுமை (உள்ளக அலங்கார வேலைகள் நடைபெறுகின்றன)
இடம்32 இலண்டன் பிரிட்ஜ் சாலை, சௌத்வாக், இலண்டன், ஐக்கிய இராச்சியம்
கட்டுமான ஆரம்பம்மார்ச்சு 2009
நிறைவுற்றதுசூலை 2012 (திறப்பு பெப்ரவரி 2013)
செலவு~ £450 மில்லியன்
உயரம்
அலைக்கம்ப கோபுரம்309.6 m (1,016 ft)
கூரை304.1 m (998 ft)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை95 (இயந்திரங்களுடைத் தளங்கள் உட்பட), 72 (வசிக்கத்தக்கன)
தளப்பரப்பு1,200,000 sq ft (110,000 m2)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)ரென்சோ பியானோ
மேம்பாட்டாளர்செல்லர் பிராபர்ட்டி குழுமம்
அமைப்புப் பொறியாளர்டர்னர் & டவுன்சென்டு (திட்ட மேலாண்மை), டபுள்யூஎஸ்பி கன்டர் செய்நுக் (அமைப்புப் பொறியாளர்கள்), இராபர்டு பேர்டு குழுமம் (கான்கிரீத்து வேலைகள்) இசெபெக் டைட்டன் 40+ தளங்களிலும் காங்கிரீத்தும்
சேவைகள் பொறியாளர்அரூப்
முதன்மை ஒப்பந்தகாரர்மேசு நிறுவனம்
மேற்கோள்கள்
[1]

தி ஷார்டு (The Shard, முன்னதாக ஷார்டு இலண்டன் பிரிட்ஜ், இலண்டன் பாலம் கோபுரம்[2][3] அல்லது கண்ணாடிச் சில்லு)[4][5] ஐக்கிய இராச்சியத்தின் இலண்டனில் உள்ள ஓர் வானளாவி ஆகும். தரைமட்டத்திற்கு மேலே 309.6 மீட்டர்கள் (1,016 ft) உயரமுடைய இது சூலை 2012இல் கட்டி முடிக்கப்பட்டது. [6] இதுவே ஐரோப்பாவிலுள்ள மிக உயரமான கட்டிடங்களில் முதல்நிலையில் உள்ளதாகும். ஐக்கிய இராச்சியத்தில் மிக உயரமான கட்டுமானமாக இரண்டாம்நிலையில் உள்ளது; முதலாவதாக 330-மீட்டர் (1,083 ft) உயரமுடைய எம்லி மூர் ஒலிபரப்புக் கோபுரம் விளங்குகிறது.

1975ஆம் ஆண்டில் சௌத்வாக்கில் கட்டப்பட்டிருந்த 24 தளக் கட்டிடம்,சௌத்வாக் கோபுரத்தை இடித்து அங்கு இது கட்டப்பட்டுள்ளது. இதனை கட்டிடக் கலைஞர் ரென்சோ பியானோ திட்டமிட்டு வடிவமைத்துள்ளார். இந்தக் கட்டிடத்தில் 72 தளங்கள் வசிக்கத்தக்கன; 245 மீட்டர்கள் (804 ft) உயரத்திலுள்ள 72வது தளத்தில் பார்வையாளர் அரங்கமும் திறந்தவெளி அவதானிப்பு மேல்தட்டும் உள்ளன.[7] கீழிருந்து மேல்வரை ஓர் ஒழுங்கற்ற பிரமிடு வடிவத்தில் முழுமையும் கண்ணாடியால் போர்த்தப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே இக்கட்டிடம் சில்லு எனப்பொருள்பட ஷார்டு எனப் பெயரிடப்பட்டது. இந்தக் கட்டிடம் சூலை 5, 2012 அன்று திறக்கப்பட்டது. பொதுமக்களுக்கு பெப்ரவரி, 2013இல் திறந்துவிடத் திட்டமிடப்பட்டுள்ளது.[8][9]

மேற்கோள்களும் குறிப்புக்களும்[தொகு]

  1. ஷார்டு at Emporis
  2. "London Bridge Tower, London". Designbuild-network.com. 2011-06-15. 2012-07-06 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Shard funding crisis: Tower finances cast shadow over project". World Architecture News. 10 September 2007. Archived from the original on 29 மார்ச் 2012. https://web.archive.org/web/20120329042927/http://www.worldarchitecturenews.com/index.php?fuseaction=wanappln.projectview&upload_id=1387. பார்த்த நாள்: 7 July 2010. 
  4. Bar-Hillel, Mira (24 February 2009). "£28bn Shard of Glass to start its ascent". London Evening Standard. Archived from the original on 27 மே 2010. https://web.archive.org/web/20100527082453/http://www.thisislondon.co.uk/standard/article-23651085-28bn-shard-of-glass-to-start-its-ascent.do. பார்த்த நாள்: 7 July 2010. 
  5. "Work starts on Shard of Glass". New Civil Engineer. 2 April 2009. http://www.nce.co.uk/news/structures/work-starts-on-shard-of-glass/1996445.article. பார்த்த நாள்: 7 July 2010. 
  6. "Shard London Bridge". SkyscraperNews.com. 2 April 2012 அன்று பார்க்கப்பட்டது.
  7. Whitten, Nick (2009-05-20). ""Shard observation deck to be Europe's highest"". Cnplus.co.uk. 2012-04-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-07-06 அன்று பார்க்கப்பட்டது.
  8. ""Prince Andrew and Qatari prime minister to open Shard on 5 July"". London-se1.co.uk. 2012-07-06 அன்று பார்க்கப்பட்டது.
  9. ""Qatar's Shard the tallest building in Europe now"". Gulf-times.com. 2012-01-03. 2012-07-06 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Shard London Bridge
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷார்டு&oldid=3578869" இருந்து மீள்விக்கப்பட்டது