உள்ளடக்கத்துக்குச் செல்

ஷார்ஜா தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஷார்ஜா தேசியப் பூங்கா, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் உள்ளது. இது ஷார்ஜாவிலுள்ள பெரிய பூங்காவாகும். இது 630,000 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.

குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ப சறுக்கு மரம், விளையாட்டுத் திடல்கள், குளம், மிதிவண்டித் திடல் ஆகியவை உள்ளன. ஷார்ஜா நகராட்சியின் நிர்வாகத்தில் உள்ள இப்பூங்காவில் உணவுக் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. சிறு விளையாட்டு சாதனங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஷார்ஜா நகரத்தை மாதிரியாகக் கொண்ட சிறு கட்டிடங்களும், குளமும் கூட உண்டு. இந்த சிறு கட்டிடங்களுக்கு இடையில் ரிமோட் கார்களை இயக்கி குழந்தைகள் விளையாட வசதி செய்யப்பட்டுள்ளது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷார்ஜா_தேசியப்_பூங்கா&oldid=3229617" இலிருந்து மீள்விக்கப்பட்டது