உள்ளடக்கத்துக்குச் செல்

ஷாமா ஜைதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷாமா செக்ரா ஜைதி
பிறப்பு25 செப்டம்பர் 1938 (1938-09-25) (அகவை 87)
இராம்பூர், ராம்பூர் சமஸ்தானம், பிரித்தானிய இந்தியா
பணி
வாழ்க்கைத்
துணை
மை. சி. சத்யூ

ஷாமா ஜைதி (Shama Zaidi, பிறப்பு: செப்டம்பர் 25,1938) ஓர் இந்தியத் திரைக்கதை ஆசிரியரும், ஆடைகலன் வடிவமைப்பாளரும், கலை இயக்குனரும், நாடக நபரும், கலை விமர்சகரும் மற்றும் ஆவணப்பட தயாரிப்பாளரும் ஆவார்.[1][2] இவர் கலை இயக்குநரும் , திரைப்பட இயக்குநருமான மை. சி. சத்யூவை மணந்தார். 2021 ஆம் ஆண்டில் சர்வதேச கலாச்சார கலைத் திரைப்பட விழாவில் ஷாமா ஜைதிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

பின்னணி

[தொகு]

ஷாமா ஜைதி ஒரு அரசியல்வாதியும் கல்வியாளருமான பஷீர் உசேன் ஜைதி மற்றும் அவரது மனைவி குத்ஸியா ஜைதி ஆகியோரின் மகள் ஆவார். இவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இவரின் பெற்றோர் இருவரும் பொதுவுடைமை இயக்கத்துடன் நெருக்கமாக தொடர்புடையவர்கள். மேலும் ஷாமா வலுவான இடதுசாரி சூழலில் வளர்ந்தார். இவர், முசோரியிலுள்ள உட்ஸ்டாக் பள்ளியிலும், பின்னர் புது தில்லியிலுள்ள மிராண்டா ஹவுஸிலும் கல்வி பயின்றார். தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டமும், இலண்டனின் சிலேட் கலைப்பள்ளியில் மேடை வடிவமைப்பில் சான்றிதழும் பெற்றுள்ளார். "பாரத் ஏக் கோஜ்" என்ற தொலைக்காட்சி தொடரில் தனது சிறந்த திரைக்கதைக்காக இவர் பாராட்டப்படுகிறார்.  

சத்யஜித் ராய், சியாம் பெனகல், மை. சி. சத்யூ மற்றும் பிறருடன் ஆவணப்படங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு திரைக்கதை/உரையாடல்களை எழுதியுள்ளார். இவர் ஆடை வடிவமைப்பாளராகவும் மற்றும் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

இசுமத் சுகதாயின் சூகார்ம் ஹவா என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு, இவர் திரைகதையை எழுதினார். அதே பெயரில் வெளியான இது சிறந்த திரைக்கதைக்கான பிலிம்பேர் விருதை வென்றது. (கைபி ஆசுமியுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது) [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shama Zaidi filmography த நியூயார்க் டைம்ஸ்.
  2. "Music in her lines". The Hindu. 1 October 2011. http://www.thehindu.com/features/friday-review/theatre/music-in-her-lines/article2503835.ece. பார்த்த நாள்: 6 June 2013.
  3. "Best Screenplay Award". Filmfare Award Official Listings, Indiatimes. Retrieved 28 April 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாமா_ஜைதி&oldid=4474760" இலிருந்து மீள்விக்கப்பட்டது