ஷாபூர் (பாகிஸ்தான்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஷாபூர் (Shahpur) பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள சார்கோதா மாவட்டத்திலுள்ள நகரம் ஆகும். இது ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ளது. 2004 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இதன் மக்கட்தொகை 274,000 , பெரும்பான்மையோர் முஸ்லீம்கள் . இவர்களின் மொழி பஞ்சாபி ஆகும். இந்நகரத்தின் பழைய பெயர் ராம்பூர் ஆகும். 17 ஆம் நூற்றாண்டுவரை இந்து மக்கள் அதிக அளவில் வசித்து வந்தனர். இந்நகரத்தின் பெயர் சுஃபி ஞானியால் மாற்றப்பட்டது. 1893 -ல் ஷாபூர் மாவட்டமாக மாற்றப்பட்டது. பின்னர் 1914 -ல் மாவட்டத் தலைநகர் இங்கிருந்து சார்கோதாவிற்கு மாற்றப்பட்டது. இங்கு 18 ஆம் நூற்றாண்டிலுள்ள இந்து மதக் கோவில்கள் உள்ளன. இந்நகரத்தின் முக்கிய நுழைவாயில் 1863 -ல் இந்நகரத்தின் பெயர் ராம்பூர் என இருக்கும் போது கட்டப்பட்டது. இதன் தொடர்வண்டி நிலையம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்த நகரத்தின் மக்கள் கடும் உழைப்பாளிகள். [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாபூர்_(பாகிஸ்தான்)&oldid=1776700" இருந்து மீள்விக்கப்பட்டது