ஷாபானோ பில்கிராமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஷாபானோ பில்கிராமி ( Shahbano Bilgrami) பாக்கித்தானைச் சேர்ந்த ஒரு எழுத்தாளரும், ஆசிரியரும், கவிஞரும் புத்தகம்/திரைப்பட விமர்சகரும் ஆவார். [1]

பாக்கித்தானின் இராவல்பிண்டியில் பிறந்தாலும், ஷாபானோ தனது ஆரம்பகால வாழ்க்கையை கனடாவின் கியூபெக்கில் உள்ள மொண்ட்ரியாலில் கழித்தார். இலக்கியத்தின் மீதான இவரது ஆர்வத்தின் காரணமாக, உயர்நிலைப் பள்ளி முழுவதும் கட்டுரை மற்றும் படைப்பாற்றல்-எழுத்து போட்டிகளில் பல்வேறு பரிசுகள் இவருக்கு வழங்கப்பட்டன. 1991 ஆம் ஆண்டில்,இவரும் இவரது குடும்பத்தினரும் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பிச் சென்றனர். அங்கு இவர் தனது கல்வியை முடித்தார். பின்னர் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலை இளநிலைப் பட்டம் மற்றும் இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற லண்டன் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். 2002 முதல் தனது கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் மேற்கு வர்ஜீனியாவின் மோர்கன்டவுனில் வசித்து வருகிறார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகத்தின் கராச்சி கிளையில் எட்டு ஆண்டுகள் பணியாற்றிய போது, இவர் கல்விப் பிரிவின் ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் இருந்தார். அங்கு பணிபுரியும் போது, குழந்தைகளை இலக்காகக் கொண்ட பல பாடப்புத்தகங்களை எழுதி பங்களித்தார்.

1997 இல், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகத்தால் இவரது கவிதைகள் ஆன் ஆந்தாலஜியில் வெளியிடப்பட்டது.A book review by Shahbano Bilgrami இது பாக்கித்தான் வம்சாவளி கவிஞர்களால் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு. கனவுகள் இல்லாமல், ஷாபானோவின் முதல் முழு நீள புதினம், மான் ஆசிய இலக்கியப் பரிசு 2007க்கான நீண்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளது.[2]

சான்றுகள்[தொகு]

  1. https://web.archive.org/web/20070928082510/http://www.manasianliteraryprize.org/ShahbanoBilgrami.html Man Asia Literary Prize Biography]
  2. "2007 Man Asian Literary Prize". www.manasianliteraryprize.org. Archived from the original on 14 August 2007. பார்க்கப்பட்ட நாள் 14 January 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாபானோ_பில்கிராமி&oldid=3685811" இலிருந்து மீள்விக்கப்பட்டது