ஷாநவாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷாநவாஸ்
பிறப்புஅபிராமம், தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சிங்கப்பூர்
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்முகம்மது காசிம் ஷாநவாஸ்
அறியப்படுவதுஉணவகத்தின் உரிமையாளர், கதையாசிரியர், பத்தி எழுத்தாளர், கட்டுரையாளர்,கவிஞர்
வலைத்தளம்
https://shaanavas.wordpress.com/

ஷாநவாஸ் என்றழைக்கப்படும் முகம்மது காசிம் ஷாநவாஸ் இராமநாதபுரம் மாவட்டம், நத்தம் (அபிராமம்) என்ற ஊரில் 1959 ல் பிறந்தவர். தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகிறார். உணவகத்தின் உரிமையாளர், கதையாசிரியர், பத்தி எழுத்தாளர், கட்டுரையாளர்,கவிஞர் என்ற பன்முகத்தன்மையுடன் சிங்கப்பூர் இலக்கிய வெளியில் செயல்படும் இவர் இந்திய, சீன, மலாய் உணவுக் கலாச்சாரம் சார்ந்த கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருவதோடு சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின்[1] ஒருங்கிணைப்பாளராகவும்,சிங்கப்பூர் மாத இதழ் சிராங்கூன் டைம்ஸின் முதன்மை ஆசிரியராகவும் உள்ளார்.

கல்வி[தொகு]

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் வேதியியல் பிரிவில் இளங்கலைப் பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறையில் முதுகலைப்பட்டமும் பெற்றவர்.

எழுத்துப்பணி[தொகு]

மத்திய அரசுத்துறையில் பணியாற்றிய போது கலை இலக்கியப் பணிமன்றம் மூலம் ஆரம்பித்த எழுத்துப் பணியைத் தொடர்ந்து வருகிறார். உயிரோசை, சிங்கப்பூர் கிளிஷே ஆகியவைகளில் பத்திக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். வாதினி மாத இதழ், தங்கமீன் இணைய இதழ், சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசு நாளிதழ், ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் தமிழ்முரசு வார இதழ் ஆகியவைகளில் இவரின் படைப்புகள் வெளிவந்துள்ளன.

சிங்கப்பூரைக் களமாகக் கொண்டு வெளிவரும் தி சிராங்கூன் டைம்ஸ் மாத இதழின் முதன்மை ஆசிரியர்.

இவர் உயிரோசை இணைய இதழில் தொடராக எழுதிய “அயல்பசி”[2] பத்தி எழுத்துகளை 2012 ம் ஆண்டுக்கான சிறந்த பண்பாட்டுக் கட்டுரையாக எஸ். ராமகிருஷ்ணன் தேர்வு செய்தார்.[3]

சிங்கப்பூர் வாசகர் வட்டம் 2017 ம் ஆண்டு வெளியிட்ட “இடமும் இருப்பும்” என்ற சிறுகதைத் தொகுப்பின் தொகுப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.[4]

வெளிவந்துள்ள நூல்கள்[தொகு]

கட்டுரைத் தொகுப்புகள்[தொகு]

  • ஒரு முட்டை புரோட்டாவும், சாதா புரோட்டாவும்[5]
  • துண்டு மீனும், வன்முறைக் கலாச்சாரமும்
  • அயல்பசி[6]
  • நனவு தேசம்[7]
  • காலச்சிறகு

சிறுகதைத் தொகுப்பு[தொகு]

  • மூன்றாவது கை[8]
  • ஒலி மூங்கில்

கவிதைத் தொகுப்பு[தொகு]

  • சுவை பொருட்டன்று[9]

பெற்றுள்ள விருதுகள்[தொகு]

  • சிங்கப்பூர் இலக்கிய விருது 2014[10]
  • கரிகாலன் விருது 2015[11]
  • மு.கு.இராமச்சந்திரா நினைவுப்பரிசு
  • சிங்கப்பூர் இலக்கிய விருது 2016 [12]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://singaporecliche.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%81/[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=6131[தொடர்பிழந்த இணைப்பு]
  3. http://www.sramakrishnan.com/?p=3186
  4. https://www.nlb.gov.sg/biblio/202900240
  5. http://www.sramakrishnan.com/?p=2801
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-10-25. பார்க்கப்பட்ட நாள் 2015-09-24.
  7. http://solvanam.com/?p=39055
  8. http://www.writerimayam.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A/[தொடர்பிழந்த இணைப்பு]
  9. https://puthu.thinnai.com/?p=31976
  10. "சிங்கப்பூர் இலக்கிய விருதுகள்". தமிழ் முரசு. 5 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 23 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  11. http://musthafatamiltrust.com/news-detailed.php?cid=103&type=&countryId=1
  12. https://en.wikipedia.org/wiki/Singapore_Literature_Prize

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாநவாஸ்&oldid=3630035" இலிருந்து மீள்விக்கப்பட்டது