ஷாஜியா குஷ்க்
ஷாஜியா குஷ்க் | |
---|---|
இயற்பெயர் | شازیہ خشک |
இயற்பெயர் | ஷாஜியா குஷ்க் |
பிறப்பு | செப்டம்பர் 1970 ஜாம்ஷோரோ, சிந்து மாகாணம், பாக்கித்தான் |
இசை வடிவங்கள் | நாட்டுப்புற இசை |
தொழில்(கள்) | பாடகி |
ஷாஜியா குஷ்க் ( உருது: شازیہ خشک , சிந்தி : شازيه خشڪ ) (பிறப்பு செப்டம்பர் 1970 ஜாம்ஷோரோ ), ஒரு பாகிஸ்தானிய முன்னாள் நாட்டுப்புற பாடகி ஆவார். [1] இவர் சிந்தி, பலூச்சி, சைராய்கி, உருது, காஷ்மீரி, பிராகுய் மற்றும் பஞ்சாபி மொழிகளில் பாடியுள்ளார்.
சுயசரிதை
[தொகு]ஷாஜியா குஷ்க் ஜாம்ஷோரோவில் பிறந்தார். அவர் 1992 இல் தனது கணவரின் ஊக்கத்தின் பேரில் ஒரு நிகழ்ச்சியில் அறிமுகமானார், அவரைப் பற்றி ஷாஜியா கூறுகிறார், "என் கணவர் என்னை அடிக்கடி குரல் ராணி என்று அழைத்தார்". இவர் இரண்டு முக்கிய மொழிகளான சிந்தி மற்றும் பலூச்சியின் பாடகியாக உருவெடுத்தார். இவரது முதல் பாடல் மாரா உதேதா பாக்கியாரா கடி ஆவோ நா மாரே தேஸ் இவரது பெயரை நாடு முழுவதும் பிரபலப்படுத்தியது. [2]
மரபு
[தொகு]ஷாஜியா குஷ்க் தனது தொழில் வாழ்க்கையில் 500 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். உலகம் முழுவதும் 45 நாடுகளில், தன் பாடல் நிகழ்ச்சிகளை நடத்தினார். அமெரிக்க துணைத் தூதரகம், கராச்சி ஷாஜியாவை 'நல்லெண்ணத் தூதராக' தேர்ந்தெடுத்தது. சிந்து பல்கலைக்கழகம், ஜாம்ஷோரோ அவருக்கு, 'சூஃபிசம் - நாட்டுப்புற இசை'க்கான கவுரவ பெல்லோஷிப்பை வழங்கியது. உஸ்பெகிஸ்தான் அரசிடம் இருந்து 'ஜனாதிபதி விருது' பெற்றார்
விருதுகள்
[தொகு]- ஷாஜியா குஷ்க் சிந்து பல்கலைக்கழகத்தில் இருந்து சூஃபிசம் மற்றும் நாட்டுப்புற இசையில் கெளரவ பெல்லோஷிப்பைப் பெற்றார். [3]
- அவரது பாடலைப் பாராட்டி உஸ்பெகிஸ்தான் அரசு அவருக்கு ஜனாதிபதி விருது வழங்கியது. [2]
இசைத்துறையில் வெளிநடப்பு
[தொகு]2019 ஆம் ஆண்டில், ஷாஜியா குஷ்க் இசைத் துறையில் இருந்து பிரிந்து செல்ல முடிவு செய்ததாக அறிவித்தார். மேலும், இவர் தன் மீதி வாழ்நாள் முழுவதையும் இஸ்லாத்தின் சேவையில் செலவிடுவேன் என்று தெரிவித்துள்ளார். [4]
பாடல்கள்
[தொகு]அவரது பிரபலமான பாடல்களில் சில:
- ரூபரோ-இ-யார்
- தேரா நாம் லியா
- லால் மேரி பாட் ரக்யோ
- நியானி நிமானி
- மேதா ரஞ்சனா
- மட உத்தா பாகியா கே அயோ நா மாரே தேஷ்
- ஏலே முஹிஞ்சா மாரோரா
சான்றுகள்
[தொகு]- ↑ "Singer Shazia Khushk calls it quits owing to 'religious obligations'". 3 October 2019.
- ↑ 2.0 2.1 "Eighteen years later, singer Shazia Khushk still enthrals". The Express Tribune (in ஆங்கிலம்). 2010-12-07. பார்க்கப்பட்ட நாள் 2020-11-09.
- ↑ "Eighteen years later, singer Shazia Khushk still enthrals". The Express Tribune (in ஆங்கிலம்). 2010-12-07. பார்க்கப்பட்ட நாள் 2020-11-09."Eighteen years later, singer Shazia Khushk still enthrals". The Express Tribune. 2010-12-07. Retrieved 2020-11-09.
- ↑ "Singer Shazia Khushk calls it quits owing to 'religious obligations'". The Express Tribune (in ஆங்கிலம்). 2019-10-03. பார்க்கப்பட்ட நாள் 2020-11-09.