ஷாஜஹான் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஷாஜஹான் திருச்சியிலிருந்து 1951ம் ஆண்டு மாதமிரு வெளிவந்த ஒரு இசுலாமிய இதழாகும். ஷாஜஹான், மும்தாஜ், தாஜ்மகால் ஆகிய மூன்று பெயர்களிலும் இதழ்கள் வெளிவந்திருப்பது ஒரு அவதானிக்கத்தக்க ஒன்றாகும்.

ஆசிரியர்[தொகு]

  • இரசூல் மதனி.

இவர் குறிப்பிடத்தக்க இஸ்லாமிய சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'ஈத்முபாரக்", 'இரு எலும்புக் கூடுகள்", ' பாழடைந்த பள்ளிவாசல்" ஆகிய சிறுகதை தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார்.

பொருள்[தொகு]

'ஷாஜஹான்' என்றால் ' உலகப் பேரரசன்" என்று பொருள்படும்.

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் தரமான இலக்கிய ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக இஸ்லாமியச் சிறுகதைகள் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு மிகத் தெளிவான விளக்கத்தை வழங்கும் ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாஜஹான்_(சிற்றிதழ்)&oldid=747872" இலிருந்து மீள்விக்கப்பட்டது