ஷர்ஜீல் கான்
ஷர்ஜீல் கான் (Sharjeel Khan (உருது: شرجیل خان; பிறப்பு:ஆகஸ்டு 14, 1989 ஐதராபாத் ,சிந்து மாகாணம் )[1] பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் துடுப்பாட்ட சூதாட்டத்தில் ஈடுபட்டதால் இவருக்கு ஐந்து ஆண்டுகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டது.இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். வலதுகை மட்டையாளரான இவர் இடதுகை மித வேகப் பந்து வீச்சாளர் ஆவார். இவர் ஐதராபாத்து (பாக்கித்தான்) ஹாக்ஸ், இஸ்லாமாபாத் யுனைட்டட், பாகித்தான் அ அணி, 19 வயதிற்கு உட்பட்ட பாகித்தான் அணி, தெ ரெஸ்ட், யுனைட்டட் பாங்க் லிமிடட், மற்றும் சராய் தராகியாத்தி பாங்க் லிமிடட் ஆகிய அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். துவக்க வீரரான இவர் 2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம் வென்ற பாக்கித்தான் அணியில் இடம்பெற்றார். 2013 ஆம் ஆண்டில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார். அதே ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானர். அந்தப் போட்டியில் 61 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்தார். 2016 ஐசிசி உலக இருபது20 போட்டியில் அதிக ஓட்டங்களடித்த பாக்கித்தான் வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். 2017 ஆம் ஆண்டில் பாக்கித்தான் சூப்பர் லீக்கில் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் இவருக்கு ஐந்தாண்டுகள் தடை விதிக்கப்பட்டது.[2]
2016 பாக்கித்தான் சூப்பர் லீக்
[தொகு]2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாக்கித்தான் சூப்பர் லீக் தொடரில் இஸ்லாமாபாத் யுனைட்டட் அணிக்காக இவர் விளையாடினார். இந்தப் போட்டியில் பலம் வாய்ந்ததாகக் கருதக்கூடிய பேஷ்வர் ஷல்மி அணிக்கு எதிராக நூறு ஓட்டங்களை அடித்தார். அந்தத் தொடரில் அடிக்கப்பட்ட முதல் நூறு ஓட்டங்கள் இதுவாகும். 62 பந்துகளில் இவர் 117 ஓட்டங்கள் எடுத்து அனியின் வெற்றிக்கு உதவினார். மேலும் இறுதிப் போட்டியில் குவெத்தா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 6 இலக்குகளில் இஸ்லாமாபாத் அணி வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் 300 ஓட்டங்களை 149.25 எனும் சராசரியோடு எடுத்தார். இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் உமர் அக்மல் மற்றும் இரவி போபரா ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாம் இடம்பிடித்தார்.
அயர்லாந்து (2016)
[தொகு]2016 ஆம் ஆண்டில் ஆகஸ்டு, 18 இல் அயர்லாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். 34 பந்துகளில் ஐம்பது ஓட்டங்களையும் 61 பந்துகளில் நூறு ஓட்டங்களையும் பதிவு செய்தார். இதன் மூலம் அதிக ஓட்டங்கள் அடித்த பாக்கித்தான் வீரர்கள் வரிசையில்ஃபகார் சமான் (210*) சாயிட் அன்வர் (194) மற்றும் இம்ரான நசீர் (160) ஆகியோருக்கு அடுத்தபடியாக நான்காவது அதிகபட்ச ஓட்டம் எடுத்தவர் எனும் சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் 150 ஓட்டங்கள் அடித்தார். இதன்மூலம் குறைந்த பந்துகளில் 150 ஓட்டங்கள் அடித்த வீரர்கள் வரிசையில் ஏ பி டி வில்லியர்ஸ் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.
சான்றுகள்
[தொகு]- ↑ Biography cricinfo. Retrieved 28 November 2010
- ↑ "Sharjeel, Latif provisionally suspended by PCB". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 February 2017.
வெளியிணைப்புகள்
[தொகு]- கிரிக் இன்ஃபோ
- ஆசியக் கிண்னம் ,2018 பரணிடப்பட்டது 2018-12-25 at the வந்தவழி இயந்திரம்