ஷமிமா பிர்தௌஸ்
ஷமிமா பிர்தௌஸ் (Shamim Firdous)[1] (பிறப்பு 1966 சம்மு காசுமீர் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள கப்பா கதல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் 2014 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3][4] இவர் 2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்.[5]
இளமை வாழ்க்கை
[தொகு]பிர்தௌஸ் ஸ்ரீநகர் மாவட்டம், கப்பா கதல் நகரைச் சேர்ந்தவர். இவர் முகமது அனீஸ் என்பவரை மணந்தார். 1983-ல் காசுமீர் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை மற்றும் முதுநிலைச் சட்டப் பட்டங்களைப் பெற்றார்.[1]
அரசியல் வாழ்க்கை
[தொகு]2014 சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தலில், சம்மு காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பில் கப்பா கதல் சட்டப்பேரவைத் தொகுதியில் பிர்தௌஸ் வெற்றி பெற்றார். இவர் 4,955 வாக்குகளைப் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான பாரதிய ஜனதா கட்சியின் மோதி கௌல் என்பவரை 2,359 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2014 சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண் சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[2][6] இவர் முதன்முறையாக 2008 சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். 2014 சம்மு காசுமீர் கப்பா கதல் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார். மேலும் 2024 சட்டப்பேர்வைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் அசோக் குமார் பட்டை 9,538 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.[7][8]
தேர்தல் வெற்றிகள்
[தொகு]| தேர்தல் | தொகுதி | கட்சி | முடிவு | வாக்குகள் % | எதிர்க்கட்சி வேட்பாளர் | எதிர்கட்சி | எதிர்கட்சி பெற்ற வாக்கு % | Ref | ||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 2024 | கப்பா கதல் | JKNC | வெற்றி | 64.68% | அசோக் குமார் பட் | பாரதிய ஜனதா கட்சி | 15.08% | [9] | ||
| 2014 | கப்பா கதல் | JKNC | வெற்றி | 42.40% | மோதி கௌல் | பாரதிய ஜனதா கட்சி | 22.21% | [10] | ||
| 2008 | கப்பா கதல் | JKNC | வெற்றி | 41.14% | ஹிரா லால் சத்தா | பாரதிய ஜனதா கட்சி | 11.65% | [11] | ||
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Shamim Firdous(JKNC):Constituency- HABBAKADAL(SRINAGAR) - Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 2024-08-26.
- 1 2 Wani, Fayaz (2014-12-25). "PDP Gets More Seats, but BJP has Upper Hand in Vote Share". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-08-26.
- ↑ "List of candidates declared winner by ECI : J&K Assembly Elections 2014 Result". Statetimes (in அமெரிக்க ஆங்கிலம்). 2014-12-23. Retrieved 2024-08-26.
- ↑ "Jammu and Kashmir Assembly election winners list". India Today (in ஆங்கிலம்). 2014-12-23. Retrieved 2024-08-26.
- ↑ "Shagun, Shamima and Sakina: Three women elected to Jammu and Kashmir Assembly". 9 October 2024. https://www.hindustantimes.com/india-news/shagun-shameema-and-sakina-three-women-elected-to-jammu-and-kashmir-assembly-101728452076537.html.
- ↑ Wani, Fayaz (2014-12-23). "PDP Holds South, Wrests Srinagar from NC; BJP Goes Blank in Valley, Ladakh; 15 Ministers Including CM Taste Defeat". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-08-26.
- ↑ "Habbakadal Election Result 2024 LIVE Update: Shamim Firdous of NC Wins". News18 (in ஆங்கிலம்). Retrieved 2024-12-05.
- ↑ "Habbakadal Constituency Election Results 2024: Habbakadal Assembly Seat Details, MLA Candidates & Winner". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2024-12-05.
- ↑ Election Commission of India (8 October 2024). "J&K Assembly Election Results 2024 - Bandipora" இம் மூலத்தில் இருந்து 10 October 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241010072117/https://results.eci.gov.in/AcResultGenOct2024/candidateswise-U0815.htm.
- ↑ "Jammu & Kashmir 2014 - Jammu & Kashmir - Election Commission of India". eci.gov.in. Archived from the original on 2019-06-13.
- ↑ "Statistical Report on General Election, 2008 to the Legislative Assembly of Jammu and Kashmir" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 25 December 2024. Retrieved 25 December 2024.