உள்ளடக்கத்துக்குச் செல்

ஶ்ரீ சந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாபா

ஶ்ரீ சந்த்

ஜி
ਸ੍ਰੀ ਚੰਦ
குரு நானக்கின் மகனான ஶ்ரீ சந்த் பக்தர்களுக்கு சாஸ்திரங்களைப் படித்து கூறும் காட்சி
உதாசி சீக்கியப் பிரிவின் தலைவர்
முன்னையவர்நிறுவனர்
பின்னவர்பாபா குர்தித்தா
சுய தரவுகள்
பிறப்பு
ஶ்ரீ சந்த் பேடி

8 செப்டம்பர் 1494[1][2][3][4]
சுல்தான்பூர் லோதி, கபூர்தலா மாவட்டம், பஞ்சாப், இந்தியா
இறப்பு13 சனவர் 1629 (வயது 134 ஆண்டுகள்)[2][5][1]
சமயம்சீக்கியம்
பெற்றோர்கள்
உட்குழுஉதாசி
Relativesஇலக்குமி தாஸ் (சகோதரர்)

ஶ்ரீ சந்த் (Sri Chand) (பிறப்பு:8 செப்டம்பர்1494 – 13 சனவர் 1629, குர்முகி: ਸ੍ਰੀ ਚੰਦ), சீக்கிய சமய சாதுக்களின் உதாசி எனும் பிரிவை தோற்றுவித்தவரும், குரு நானக்கின் மகனும் ஆவார்.[6][7]

இளமை

[தொகு]

சீக்கிய சமயத்தின் முதல் குருவான குரு நானக்க்கின் மூத்த மகனாக 8 செப்டம்பர் 1494 அன்று பஞ்சாபின் கபூர்தலா மாவட்டம், சுல்தான்பூர் லோதி நகரத்தில் பிறந்தவர் ஶ்ரீ சந்த்.[8]

குரு நானக்கின் சீடர்கள் மற்றும் சீக்கியத்துடனான தொடர்புகள்

[தொகு]

ஶ்ரீ சந்த்தின் தந்தையும், சீக்கிய சமயத்தின் முதல் குருவுமான குரு நானக்கின் மறைவிற்குப் பின் குரு அங்கத் தேவ்வை இரண்டாவது சீக்கிய குருவாக நியமிக்க ஶ்ரீ சந்த் எதிர்ப்பு காட்டினார்.[9]

குரு நானக்கின் மறைவிற்குப் பின் அவரது மகன்களான ஶ்ரீ சந்த் மற்றும் இலக்குமி தாஸ், கர்த்தார்பூரில் இருந்த குரு நானக்கின் சொத்துகளுக்கு சட்டபூர்வ வாரிசுகள் தாமே என உரிமை கோரினர்.[10]குரு அங்கது தேவ்விற்கு பின் வந்த குரு அமர் தாஸ், ஶ்ரீ சந்த் நிறுவிய உதாசி சீக்கியப் சம்பிரதாய சீக்கியர்களிடமிருந்து விலகி நிற்க சீக்கியர்களுக்கு கட்டளை இட்டார்.

குரு நானக்க்கின் மகன் ஸ்ரீ சந்த் என்பதால், ஸ்ரீ சந்த்தின் சமகால சீக்கிய குருக்களான குரு அமர் தாஸ், குரு ராம் தாஸ், குரு அர்ஜன் மற்றும் குரு அர்கோவிந்த் ஆகியோர் ஸ்ரீ சந்த்தை மிகவும் மதித்தனர்.[11][8]

1619ஆம் ஆண்டில், குவாலியர் கோட்டையின் சிறையில் இருந்த குரு அர்கோவிந்தை விடுவிக்க, முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரை சமாதானப்படுத்த ஸ்ரீ சந்த் தனது ஆன்மீக சக்தியையும், அதிகாரத்தையும் பயன்படுத்தினார்.

ஸ்ரீ சந்த் மறைவிற்குப் பின் குரு அர்கோவிந்த்தின் மூத்த மகன் பாபா குர்தித்தா உதாசிகளின் குருவாக பதவியேற்றார். பாபா குர்தித்தாவின் ஒன்றுவிட்ட சகோதர் குரு தேக் பகதூர் ஆவார். [12][8]

மறைவு

[தொகு]

பஞ்சாபில் உள்ள கிராத்பூர் நகரத்தில் 13 சனவரி 1629 அன்று ஸ்ரீ சந்த் வயது முதிர்வு காரணமாக மறைந்தார்.

தாக்கம்

[தொகு]

ஸ்ரீ சந்த், குரு கிரந்த் சாகிப்புடன், இந்து சமயத்தின் ஐந்து கடவுள்களான சூரியன், விஷ்ணு, சிவன், விநாயகர் மற்றும் சக்தியையும் வழிபட்டார்.[13]

இதனையும் காணக்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 The encyclopaedia of Sikhism. Harbans Singh. Patiala: Punjabi University. 1992–1998. p. 234. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8364-2883-8. இணையக் கணினி நூலக மைய எண் 29703420.{{cite book}}: CS1 maint: others (link)
  2. 2.0 2.1 Gandhi, Surjit Singh (2007). History of Sikh gurus retold. New Delhi: Atlantic Publishers & Distributors. p. 980. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-269-0859-2. இணையக் கணினி நூலக மைய எண் 190873070.
  3. Siṅgha, Kirapāla (2004). Janamsakhi tradition : an analytical study. Prithīpāla Siṅgha Kapūra (1st ed.). Amritsar: Singh Brothers. p. 53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7205-311-8. இணையக் கணினி நூலக மைய எண் 58631716.
  4. Singh Madra, Amandeep (2016). Sicques, Tigers or Thieves : Eyewitness Accounts of the Sikhs (1606-1810). P. Singh. New York: Palgrave Macmillan. p. 333. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-137-11998-8. இணையக் கணினி நூலக மைய எண் 1083462581.
  5. Singh Madra, Amandeep (2016). Sicques, Tigers or Thieves : Eyewitness Accounts of the Sikhs (1606-1810). P. Singh. New York: Palgrave Macmillan. p. 333. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-137-11998-8. இணையக் கணினி நூலக மைய எண் 1083462581.
  6. The encyclopaedia of Sikhism. Vol. 4. Harbans Singh. Patiala: Punjabi University. 1992–1998. pp. 377–379. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8364-2883-8. இணையக் கணினி நூலக மைய எண் 29703420. UDASI, an ascetical sect of the Sikhs founded by Sri Chand (1494-1629), the elder son of Guru Nanak.{{cite book}}: CS1 maint: others (link)
  7. "Baba Sri Chand - Gateway To Sikhism" (in அமெரிக்க ஆங்கிலம்). 2007-09-02. பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
  8. 8.0 8.1 8.2 Singh, Bhupinder (October–December 2019). "Genealogy of Guru Nanak". Abstracts of Sikh Studies (Institute of Sikh Studies, Chandigarh) 21 (4). https://sikhinstitute.org/oc_2019/colbhupindersingh.html. 
  9. Khalid, Haroon. "Intrigue, manipulation, deception: How Guru Arjan's brother put up a serious challenge against him". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-22. Whereas contesting claims to Guruhood remained a feature of all successions to the title, starting from Guru Nanak's successor – his son refused to acknowledge the appointment of Guru Angad Dev, Nanak's devotee, as the next Sikh Guru – the challenge given by Prithi Chand's movement was among the most formidable.
  10. Singh, Pashaura (2021-04-03). "Ideological basis in the formation of the Shiromani Gurdwara Prabandhak Committee and the Shiromani Akali Dal: exploring the concept of Guru-Panth" (in en). Sikh Formations 17 (1–2): 16–33. doi:10.1080/17448727.2021.1873656. பன்னாட்டுத் தர தொடர் எண்:1744-8727. https://www.tandfonline.com/doi/full/10.1080/17448727.2021.1873656. "The second Guru, Angad (1504–1552), established a new Sikh center at his native village Khadur because Guru Nanak’s sons made the legal claim as rightful heirs of their father’s properties at Kartarpur.". 
  11. Singh, Harbans. The Encyclopedia Of Sikhism - Volume IV S-Z (in English). p. 234.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  12. "Baba Gurditta - Gateway To Sikhism" (in அமெரிக்க ஆங்கிலம்). 2007-09-02. பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
  13. Sibal, Rajni Sekhri (2022). The Guru - Guru Nanak's Saakhis. StoryMirror Infotech Pvt Ltd. p. 146. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789392661099. Guru Nanak Dev was blessed with two sons. Srichand, the elder one was an ascetic and the founder of the 'Udasin' sect. Their central philosophy was a conjunction of the paths of devotion and knowledge. Srichand believed in the theory of karma and reincarnation and popularized the worship of five deities - Surya, the Sun god, who is the creator and the source of all life; Vishnu, the preserver and protector of the Universe and the god of compassion; Shiva, the destroyer of evil and the god of yoga, meditation and time; Ganesha, the god of new beginnings also brings wisdom and prosperity and Shakti, the primordial cosmic energy and the goddess of the dynamic forces that are present through the universe.

    Sri Chand also composed 'Arta Shri Guru Nanak Dev' made up of ten verses in honor of his father.

ஆதாரம்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஶ்ரீ_சந்த்&oldid=4051952" இலிருந்து மீள்விக்கப்பட்டது