வ குவாட்டர் கட்டிங்
வ குவாட்டர் கட்டிங் | |
---|---|
இயக்கம் | புஷ்கர்-காயத்ரி |
தயாரிப்பு | சசிகாந்த் சிவாஜி |
கதை | புஷ்கர்-காயத்ரி |
இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
நடிப்பு | சிவா லேகா வாசிங்டன் எஸ். பி. பி. சரண் |
ஒளிப்பதிவு | நீரவ் ஷா |
படத்தொகுப்பு | ஆண்டோனி ]] |
கலையகம் | ஒய் நாட் ஸ்டுடியோ |
விநியோகம் | கிளவுட் நைன் மூவீஸ் |
வெளியீடு | 5 நவம்பர் 2010 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹2 கோடி (US$2,50,000) |
மொத்த வருவாய் | ₹15 கோடி (US$1.9 மில்லியன்) |
வ குவாட்டர் கட்டிங் ,(V: QUARTER CUTTING) 1/4 (ஒன்றின் கீழ் நான்கு) 2010 ம் ஆண்டு தமிழ் மொழியில் வெளிவந்த நியோ-நார் (neo-noir) வகையைச் சேர்ந்த நகைச்சுவைத் திரைப்படமாகும். புஷ்கர்-காயத்ரி என்ற இருவரும் இப்படத்தை இயக்கியுள்ளனர். இதில் சிவா, எஸ். பி. பி. சரண் மற்றும் லேகா வாசிங்டன் ஆகியோர் முக்கிய கதாபாதிரங்களில் தோன்றி நடித்துள்ளனர். இவர்களுடன் கல்யாண், ஜான் விஜய் மற்றும் அபிநயஸ்ரீ போன்றோர் உடன் நடித்துள்ளனர். இப்படம் சவுதி அரேபியா செல்லும் முன்னர் ஒருவன் மதுவிற்காக ஒரு இரவு நேரத்தில் அலைவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
இப்படம் மார்த்தாண்டத்தின் உதவியுடன் சுரா என்கிற சுந்தர்ராஜன் என்பவன் சென்னையில் மதுபானத்திற்கு அலையும் கதையைச் சொல்கிறது.[1] இப்படம் ஒய் நாட் ஸ்டுடியோவின் சசிகாந்த் சிவாஜி தயாரிப்பில், தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவீஸ் சார்பில், ஜி. வி. பிரகாஷ் குமார் இசையில் வெளிவந்தது. இதன் ஒளிப்பதிவை நீரவ் ஷா மேற்கொண்டார். 2010 ன் ஆரம்பத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 2010 நவம்பர் 5 தீபாவளியன்று வெளிவந்து பல்வேறு விமர்சனங்களை பெற்றது.
கதைச்சுருக்கம்
[தொகு]சுந்தர்ராஜன் என்கிற சூரா (சிவா) சௌதி அரேபியா செல்லும் வழியில் கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு வருகிறான். அவன் மார்த்தாண்டத்தின் (எஸ். பி. பி. சரண்), சகோதரியை விரைவில் திருமணம் செய்து கொள்ளும் ஒரு கால்நடை மருத்துவர் ஆவான். அவனை சௌதிக்கு அனுப்பும் முகவர் அங்கே மதுபானமெல்லாம் அருந்த முடியாது என்று சுராவிடம் தெரிவிக்கிறார். அதன் பிறகு, அவனும் மார்த்தாண்டமும் சேர்ந்து கடைசியாக மது அருந்த ஒரு மது கடைக்குச் செல்கிறார்கள். அது தேர்தலுக்கு முதல் நாளென்பதால், மதுபானம் கிடைப்பதில்லை. எனவே சென்னையில் மதுபானம் கிடைக்கும் பல்வேறு இடங்களுக்கு தனது பயணத்தை தொடங்குகிறார்கள். வாக்குகளுக்கு மதுபானம் தருமிடம், நட்சத்திர ஹோட்டல், ஆங்கிலோ-இந்திய இளைஞர்கள் குழு, மீன்கள் விற்கும் சந்தை, சூதாட்டம், குல்ஃபி கடை, விபச்சார விடுதி போன்ற இடங்களிலெலாம் மதுவைத் தேடி அலைகின்றனர். அவர்களது பயணத்தின்போது, சரஸ்வதி என்கிற சரோவை (லேகா வாஷிங்டன்) சந்திக்கிறார்கள். அவளது பெற்றோர் அவளைத் திட்டியதற்காக தற்கொலை செய்ய முடிவெடுக்கிறாள். கிங் மற்றும் பிரின்ஸ் என்ற ஜான் விஜய் அப்பா மற்றும் மகன் இருவரும் ஒன்று சேர்ந்து ஒரு சூதாட்ட மையத்தை நடத்தி வருகிறார்கள். முடிவில், மார்த்தாண்டம் குழுவும், சரோவும் எவ்வாறு தங்களது முயற்சியில் வெற்றி பெற்று, சவுதிக்கு செல்வதுப் பற்றியும் மீதமுள்ள கதையை இயக்குனர் முடிக்கிறார்.
நடிகர்கள்
[தொகு]- சுரா என்கிற சுந்தர்ராஜனாக சிவா
- சுராவின் மைத்துன் மார்த்தாண்டமாக எஸ். பி. பி. சரண்
- சரோ என்கிற சரோஜாவாக லேகா வாசிங்டன்
- கிங் மற்றும் பிச்சை என்கிற பிரின்ஸ் ஆக ஜான் விஜய்
- மற்றும் பலர்
ஈஸ்டர் முட்டைகள்
[தொகு]இந்த படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று இந்த படத்தில் ஈஸ்டர் முட்டைகள் போன்ற படைப்பாக்கமாகும் - ஒவ்வொரு காட்சிக்கும் பின்னணியில் சித்தரிக்கப்பட்ட கலை மற்றும் ஓவியங்கள் காட்சிக்குரிய ஒற்றுமைகளை சித்தரிக்கின்றன.
தயாரிப்பு
[தொகு]வளர்ச்சி
[தொகு]நான் தமிழ்படம் நடித்தபோது ஒய் நாட் ஸ்டூடியோவின் சசிகாந்த் "வ: குவாட்டர் கட்டிங்" கதையுடன் என்னை அணுகினார். நான் படித்துப் பார்த்து அது பிடித்ததனால் நடிக்க ஒப்புதல் அளித்தேன். மேலும் துரை தயாநிதி மற்றும் 'கிளவுட் நைன்' விவேக் ரத்னவேலு ஆகியோரும் அவர்களின் தயாரிப்பின் கீழ் இதை படமாக்க முடிவு செய்து என்னை அணுகினார். புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் ஒரு நல்ல அனுபவம் இது. படப்பிடிப்பின் போது, அவர்கள் சரியாக ஓய்வெடுக்கக்கூட விடவில்லை. இரவு 9 மணிக்கு எனது உணவை சாப்பிடுவேன் என்று கனவு கண்டேன். அவர்கள் வந்து, 'மச்சி, இன்று எந்த ஓய்வும் இல்லை, சீக்கிரம் சாப்பிட்டு விடுங்கள்' என்று சொல்வார்கள். நான் பல படங்களில் பணியாற்றியிருக்கிறேன் அங்கெல்லாம் ஓய்வு நேரம் என்று ஒன்று இருந்தது, ஆனால் இங்கே, அவர்கள் ஓய்வினை அறிவிக்க மாட்டார்கள். எல்லாவற்றையும் விடவும், படப்பிடிப்பு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நடந்ததால் எனது உடலியக்கமே மாறிவிட்டது. ஆனாலும் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகிய இருவரும் படத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டு பணியாற்றினார்கள். அனைத்து காட்சிகளையும் படமெடுப்பதிலிருந்து தொழில்நுட்ப ரீதியாக அவர்கள் மிகத் திறமையானவர்களாக உள்ளனர் என நான் நினைக்கிறேன்-நடிகர் சிவா, தனது பேட்டியில் இவ்வாறு கூறுயுள்ளார்.[2]
ஒய் நாட் ஸ்டூடியோவின் சசிகாந்த் சிவாஜி, 2009 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனது அடுத்த தயாரிப்புக்காக 2010 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படமான தமிழ் படம் படப்பிடிப்பின் போதே இப்படத்தின் விவாதங்களைத் தொடங்கினார். சென்னையின் அடிமட்டத்தை சுற்றி நடக்கும் ஒரு கதையில் கணவர்-மனைவி பணிபுரிந்தனர், அவர்களது முதல் அறிமுகமான ஓரம் போ வெற்றிகரமாக ஓடியது. அவர்களது அடுத்த படம் 'ஓரம் போ' படத்திற்கு மாறுபட்டதாக இருக்க வேண்டுமென அவர்கள் விரும்பினர். இது சென்னையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
இந்த திரைப்படம் "வ: குவாட்டர் கட்டிங்" என்ற பெயரில் வெளியிடப்பட்டது. ஆனால் ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் காரணமாக, தமிழக அரசின் பொழுதுபோக்கு வரி விலக்கு விதிகளின்படி படைப்புகளின் தலைப்புகள் தமிழில் மட்டுமே இருந்தால் மட்டுமே வரிவிலக்கு கிடைக்கும் என்பதால், படத்தின் தலைப்பு 'வ' என்று மாற்றப்பட்டது இது ஒன்றின் கீழ் நான்கு (1/4) என்ற அர்த்தம் தரும் சொல்லாகும்.[3]
படமாக்கம்
[தொகு]இதன் படப்பிடிப்பு 2010 இல் தொடங்கியது. அடுத்தடுத்த வாரங்களில் சென்னை முழுவதும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது. படத்தின் முக்கிய பகுதிகளான பழைய சென்னை மற்றும் மெரினா கடற்கரை ஆகிய இடங்களில் பரவலாக படமாக்கப்பட்டது.
வெளியீடு
[தொகு]இந்த படத்தின் செயற்கைக்கோள் உரிமைகலைஞர் தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டன. இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு இந்த படத்திற்கு "யு / ஏ" சான்றிதழை வழங்கியது.
ஒலிப்பதிவு
[தொகு]Va | ||||
---|---|---|---|---|
soundtrack
| ||||
வெளியீடு | 4 செப்டம்பர் 2010 | |||
ஒலிப்பதிவு | Y Not Studio | |||
இசைப் பாணி | Feature film soundtrack | |||
நீளம் | 19:20 | |||
இசைத்தட்டு நிறுவனம் | Think Music | |||
இசைத் தயாரிப்பாளர் | ஜி. வி. பிரகாஷ் குமார் | |||
ஜி. வி. பிரகாஷ் குமார் காலவரிசை | ||||
|
இதன் ஒலிப்பதிவை இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் மேற்கொண்டுள்ளார்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.thehindu.com/features/cinema/Cut-and-dried/article15685542.ece
- ↑ http://www.videos.behindwoods.com/videos-q1-09/actor-actress-interview/shiva.html
- ↑ "Va: Cutting of the Quarter! Why?". Behindwoods. பார்க்கப்பட்ட நாள் 18 February 2012.