வ. கவுதமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வ. கவுதமன்

வ. கவுதமன் ஓர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். 1999 ஆம் ஆண்டு முரளி மற்றும் சிம்ரன் நடித்த "கனவே கலையாதே" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகிய இவர், 2010 ஆம் ஆண்டு "மகிழ்ச்சி" என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.[1] இடைப்பட்ட காலத்தில் மக்கள் தொலைக்காட்சிக்காக "சந்தனக்காடு" மற்றும் "ஆட்டோ சங்கர்" ஆகிய தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார்.[2]

சிறந்த தமிழ் உணர்வாளராகவும் அறியப்பட்ட இவர், தமிழர் பிரச்சினை தொடர்பான கோரிக்கைகளுக்கு குரல் கொடுப்பவர்.[3] விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வ._கவுதமன்&oldid=3602706" இருந்து மீள்விக்கப்பட்டது