வோல்டா ஏரி
வோல்டா ஏரி | |
---|---|
அமைவிடம் | மேற்கு கிழக்கு |
ஆள்கூறுகள் | 6°30′N 0°0′E / 6.500°N 0.000°Eஆள்கூறுகள்: 6°30′N 0°0′E / 6.500°N 0.000°E |
வகை | நீர்த்தேக்கம் |
முதன்மை வரத்து | வெள்ளை வோல்டா ஆறு கருப்பு வோல்டா ஆறு |
முதன்மை வெளியேற்றம் | வோல்டா ஆறு |
வடிநிலப் பரப்பு | 385,180 km2 (148,720 sq mi) |
வடிநில நாடுகள் | கானா |
மேற்பரப்பளவு | 8,502 km2 (3,283 sq mi) |
சராசரி ஆழம் | 18.8 m (62 ft) |
அதிகபட்ச ஆழம் | 75 m (246 ft) |
நீர்க் கனவளவு | 148 km3 (32.6 × 1012 gallons) |
கரை நீளம்1 | 4,800 கிலோமீட்டர்கள் (2,980 mi) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 85 m (279 ft) |
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று. |
வோல்டா ஏரி (Lake Volta) பரப்பளவில் உலகின் மிகப்பெரிய ஏரி ஆகும். கொள்ளளவு அடிப்படையில் இது உலகில் நான்காவது மிகப்பெரிய ஏரி ஆகும். இந்த ஏரி முழுவதும் கானா நாட்டில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 8,502 கிமீ² (3,275 சதுர மைல்கள்). வோல்டா ஏரி தீர்க்கரேகை நடுக்கோட்டில் அமைந்துள்ளது. நிலநடுக் கோட்டின் வடக்கில் ஆறு டிகிரி அகலாங்கில் இந்த ஏரி அமைந்துள்ளது. ஏரியின் வடக்கு பகுதி எப்பை நகரத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது. மேலும் இதன் தென்முனை அகோசொம்போ அணையில் முடிகிறது.