வோய்தெக் (கரடி)
கார்ப்பரல் வோய்தெக் இராணுவ வீரக் கரடி | |
|---|---|
வோய்தெக்குடன் போலந்து சிப்பாய் | |
| சுதேசியப் பெயர் | Wojtek |
| பிறப்பு | 1942 அமாதான், ஈரான் |
| இறப்பு | 2 திசம்பர் 1963 (அகவை 21) எடின்பர்க் உயிரியல் காட்சிசாலை, ஸ்காட்லாந்து |
| சார்பு | போலந்து |
| சேவை/ | |
| சேவைக்காலம் | 1943–1945 |
| தரம் | கார்ப்பரல் |
| தொடரிலக்கம் | 253 |
| படைப்பிரிவு | 3522, 22வது பீரங்கி விநியோகப் பிரிவு, 2வது போலந்து படைப்பிரிவு |
| போர்கள்/யுத்தங்கள் | இரண்டாம் உலகப் போர் |
| நினைவிடங்கள் | வோய்தெக் நினைவு அறக்கட்டளை |
| இணையம் | thesoldierbear |
வோத்தெக் (Wojtek, 1942 - 2 திசம்பர் 1963) என்பது இரண்டாம் உலகப் போரின் போது போலந்தின் 2வது படைப்பிரிவின் [1] வீரர்களால் தத்தெடுக்கப்பட்ட ஒரு சிரிய பழுப்புக் கரடி [2] [3] ஆகும். அவர்களுடன் வோத்தெக் இத்தாலிக்குச் சென்று 22வது பீரங்கி விநியோக படைப்பிரிவில் பணியாற்றியது.
1944 ஆம் ஆண்டு, மோண்ட்டி கசீனோ சண்டையின் போது, வோய்தெக் தன் மனித தோழர்களைப் போலவே வெடிமருந்துப் பெட்டிகளை ஏந்திச் சென்றது. இது சாதாரண சிப்பாயிலிருந்து கார்போரலாக பதவி உயர்வு பெற்றது. மேலும் வருகை தந்த நேச நாட்டுத் தளபதிகள் மற்றும் தலைவர்களிடையே பிரபலமடைந்தது. [1] போருக்குப் பிறகு போலந்து இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, தனது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் ஸ்காட்லாந்தில் உள்ள எடிபர்க் உயிரியல் பூங்காவில் வாழ்ந்தது.
"வோய்தெக்" என்பது போலந்தில் பொதுவாக ஒரு பழைய ஸ்லாவிக் பெயரான " வோய்சீச் " என்பதன் சுருக்கமாகும் . [4]
வரலாறு
[தொகு]
தத்தெடுப்பு
[தொகு]1942 வசந்த காலத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட ஆண்டர்ஸ் இராணுவம், 1939 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் கிழக்கு போலந்தின் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான போலந்து பொதுமக்களுடன் சேர்ந்து சோவியத் ஒன்றியத்தை விட்டு ஈரானுக்குப் புறப்பட்டது. வேட்டைக்கார்களால் கொல்லப்பட்டு ஆதரவற்று இருந்த ஒரு கரடிக் குட்டியை ஒரு ஈரானியச் சிறுவன் ஈரானின் அமதான் நகருக்கு 1942 ஆம் ஆண்டு எடுத்துச் சென்றான். 1942 ஏப்ரல் 8 அன்று, பஹ்லவியிலிருந்து ஈரானின் தெகுரானுக்குப் பயணித்த, போலந்து வீரர்கள் கரடிக் குட்டியை விற்கவந்த அந்த ஈரானிய சிறுவனைச் சந்தித்தனர். போலந்து வீர்களுடன் பயணித்த அகதிகளில் ஒருவரான, ஜெனரல் போல்ஸ்லாவ் வியனியாவா-டுலுகோசோவ்ஸ்கியின் மருமகளான, 18 வயது இரினா (இன்கா) போகிவிச்சை, அந்தக் குட்டி ஈர்த்தது. லெப்டினன்ட் அனடோல் டார்னோவிஸ்கியை அந்தக் குட்டிக் கரடியை வாங்கவைத்தார். அது அடுத்த மூன்று மாதங்கள் தெகுரானுக்கு அருகில் அமைக்கபட்ட போலந்து அகதிகள் முகாமில், இரினாவின் பராமரிப்பில் இருந்தது. [5] அது வளர வளர இரினாவினால் பராமரிக்க முடியவில்லை. எனவே ஆகத்து மாதத்தில், கரடிக் குட்டியை 2வது போக்குவரத்து படைப்பிரிவுக்கு நன்கொடையாக வழங்கிவிட்டாள். அது பின்னர் 22வது பீரங்கி விநியோக படைப்பிரிவாக மாறியது. வீரர்களால் இதற்கு வோய்தெக் என்று பெயரிட்டனர்.
ஊட்டச்சத்தும் வளர்ச்சியும்
[தொகு]துவக்கத்தில் வோய்தெக்கிற்கு விழுங்குவதில் சிக்கல் இருந்தது, எனவே அதற்கு ஒரு பழைய வோட்கா போத்தலில் இருந்து கெட்டியாக்கபட்ட பால் ஊட்டப்பட்டது. பின்னர் அதற்கு பழம், பழப்பாகு, தேன், சர்க்கரைப்பாகு போன்றவை வழங்கப்பட்டன. மேலும் அதற்கு பிடித்தமான பானமாக மாறிய பீர் அவ்வப்போது வெகுமதியாக அளிக்கப்பட்டது. பின்னர் அது சிகரெட் புகைப்பதை (அல்லது சாப்பிடுவதை) விரும்பியது, அதே போல் காலையில் காபி குடிப்பதையும் விரும்பியது. இரவில் குளிராக இருந்தால் மற்ற வீரர்களுடன் சேர்ந்து தூங்கியது.[6] அது வீரர்களுடன் மல்யுத்தம் செய்வதை விடும்பியது. மேலும் வரவேற்கப்படும்போது வணக்கம் செலுத்தும்போது சல்யூட் அடிக்க கற்றுக் கொண்டது. அது வீரர்கள் மற்றும் பொதுமக்களை ஈர்ப்பதாக மாறியது. விரைவில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து படைப் பிரிவுகளுக்கும் அதிகாரப்பூர்வமற்ற சின்னமாக மாறியது. 22வது படைப் பிரிவுடன், அது ஈராக்கிற்கும், பின்னர் சிரியா, பாலஸ்தீனம், எகிப்து வழியாகவும் சென்றது. [3]
வோய்தெக் மற்ற வீரர்களைப் போலவே, பீர் குடித்து, புகைபிடித்து. மேலும் அவர்கள் செய்வதைப் பார்த்து தானும் தன் பின்னங்கால்களில் நின்று அவர்களுடன் அணிவகுத்துச் சென்றது. வோய்தெக்கை பார்த்துக் கொள்ள ஒரு பராமரிப்பாளர் நியமிக்கபட்டார். அந்தக் கரடிக் குட்டி போர்ப் பயணத்தின்போதே வளர்ந்தது. மேலும் மோண்ட்டி கசீனோ சண்டையின் போது, அதன் எடை 90 கிலோவாக (14 ஸ்டோன்; 200 பவுண்டுகள்) இருந்தது. [7]
படைவீரன் வோய்தெக்
[தொகு]
எகிப்திலிருந்து, போலந்து II படைப்பிரிவு, பிரித்தனின் எட்டாவது இராணுவத்துடன் இணைந்து போரிட மீண்டும் பணிக்கபட்டது. இது எல் அலமைன் போன்ற வட ஆப்பிரிக்கப் போர்கள் மற்றும் இத்தாலியப் போர்த்தொடர்களில் பிரபலமானது. போலந்து படை வீரர்கள் தங்கள் கூடணி நாடான பிரித்தானிய போர்க்கப்பலில் இத்தாலிக்கு செல்ல வேண்டிய இருந்தது. பிரித்தானிய போக்குவரத்துக் கப்பலில் செல்லப்பிராணிகளை ஏற்ற மாட்டோம் என்ற விதிமுறையைக் கூறி கரடியை உடன் அழைத்துச் செல்ல தடை கூறினர். இந்த்த் தடையைச் சமாளிக்க, வோய்தெக் அதிகாரப்பூர்வமாக போலந்து இராணுவத்தில் ஒரு இராணுவ வீரனாக சேர்க்கப்பட்டு 22வது பீரங்கி விநியோக படைப் பிரிவின் வீரர்களில் பட்டியலிடப்பட்டது. ஹென்றிக் சச்சரேவிச் மற்றும் லூ வோர்சோவ்ஸ்கி ஆகியோர் அதன் பராமரிப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். [ மேற்கோள் தேவை ]
தனக்கென சொந்தமாக சம்பளப் புத்தகம், பதவி, வரிசை எண் கொண்ட ஒரு சிப்பாயாக, இது மற்ற வீரர்களுடன் கூடாரங்களிலோ அல்லது சரக்குந்து மூலம் கொண்டு செல்லப்பட்ட ஒரு சிறப்பு மரப்பெட்டியிலோ வசித்து வந்தது. மோண்ட்டி கசீனோ சண்டையின் போது, வோய்தெக் 25-பவுண்டு பீரங்கி குண்டுகள் நிரம்பிய 100-பவுண்டு (45 கிலோ) எடையுள்ள பெட்டிகளைச் சுமந்து, தனது படைப்பிரிவுக்கு உதவியது. அது அந்தப் பெட்டிகளில் எதையும் கீழே போடவில்லை. இந்தக் கதை அதன் நம்பகத்தன்மை குறித்து விவாதங்களை உருவாக்கிய போதிலும், ஒரு பிரித்தானிய படைவீரர் கரடி ஒன்று வெடிமருந்துப் பெட்டிகளைச் சுமந்து செல்வதைக் கண்டதாக நினைவு கூர்ந்த ஒரு பதிவு உள்ளது. [9] அந்தக் கரடி வீரர்களைப் போலவே செய்தது: வீரர்கள் பெட்டிகளைத் தூக்குவதைக் கண்டதும், அது அவர்களைப் போலவே செய்தது. வோய்தெக் பொதுவாக நான்கு பேர் தூக்கக்குடிய பெட்டிகளை எடுத்துச் சென்றது. அவற்றை ஒரு சுமையுந்து மீதோ அல்லது பிற வெடிமருந்துப் பெட்டிகளின் மீதோ அடுக்கி வைத்தது. [10] போலந்து வெற்றிக்குப் பிறகு, படைப்பிரிவுக்கு வருகை தரும் நேச நாட்டுத் தளபதிகள், அரசியல்வாதிகள் போன்றோர் மத்தியில் வோய்தெக் பிரபலமாக ஆனது. இந்த சேவைக்காக அதற்கு கார்போரல் பதவி உயர்வு அளித்தது. வோய்தெக்கின் புகழை அங்கீகரிக்கும் விதமாக, பீரங்கி குண்டுகளை ஏந்திய கரடியின் படம் 22வது படைப்பிரிவின் அதிகாரப்பூர்வ சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. [7]
போருக்குப் பி்ன்பு
[தொகு]
1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, வோய்தெக் 22வது படைப்பிரிவின் வீரர்களுடன் இசுக்கொட்லாந்தின் பெர்விக்ஷயருக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் ஸ்காட்டிஷ் எல்லைகளில் உள்ள ஹட்டன் கிராமத்திற்கு அருகிலுள்ள சன்விக் பண்ணையில் உள்ள வின்ஃபீல்ட் விமான தளத்தில் நிறுத்தப்பட்டனர். வோய்தெக் விரைவில் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடையே பிரபலமடைந்தது. மேலும் போலந்து-ஸ்காட்டிஷ் சங்கம் அதை கௌரவ உறுப்பினராக்கியது.
1947 நவம்பர் 15 அன்று இராணுவத்தில் இருந்து பணி நீக்கம் செய்யபட்ட வோய்தெக் எடின்பர்க் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது. அங்கு அது எஞ்சிய தனது வாழ்நாள் முழுவதும் கழித்து. அங்கு பத்திரிகையாளர்களும், முன்னாள் போலந்து வீரர்களும் அடிக்கடி அவதைப் பார்வையிட்டனர். அவர்களில் சிலர் அது சாப்பிட சிகரெட்டுகளை வீசினர். அது இராணுவத்தில் இருந்தபோது செய்தது போல. போலந்து மொழியில் பேசப்பட்டதற்கு அது இன்னும் மகிழ்ச்சியுடன் செவிசாய்த்தது. மேலும் அதன் முன்னாள் படைப் பிரிவில் பலரை அடையாளம் கண்டது. ஊடக கவனம் வோய்தெக்கின் புகழில் பங்களித்தது. பிபிசி தொலைக்காட்சியின் குழந்தைகளுக்கான ப்ளூ பீட்டர் நிகழ்ச்சியில் இது அடிக்கடி விருந்தினராக இருந்தது. [11]
வோய்தெக் 1963 திசம்பர் 2 அன்று தன் 21 வயதில் இறந்தது. அப்போது 500 கிலோகிராம் (1,100 பவுண்டுகள்) எடையும், 1.8 மீட்டருக்கும் அதிகமான (5 அடி 11 அங்குலம்) உயரம் கொண்டதாக இருந்தது. [12]
நினைவுச்சின்னங்கள்
[தொகு]-
ஜோர்டான் பூங்காவில், கிராக்கோவ்
-
சகானில்
-
ஸ்கெசெசினில்
-
வார்சாவாவின் நோவே மியாஸ்டோ பகுதியில்
-
வார்சாவின் ஓசோட்டா மாவட்டத்தில், அதன் பெயரால் அழைக்கப்படும் ஒரு பாலர் பள்ளிக்கு அருகில்.
-
சோபோட்டில் வோய்தெக் கரடியின் சிலை திறப்பு விழா
-
In ஷிம்பார்க்கில்
-
இலண்டனில் உள்ள இம்பீரியல் போர் அருங்காட்சியகத்தில் உள்ள நினைவுப் பலகை
-
இலண்டனில் உள்ள சிகோர்ஸ்கி அருங்காட்சியகத்தில் உள்ள டேவிட் ஹார்டிங்கின் சிற்பம்.
-
எடின்பரோ, பிரின்சஸ் தெரு தோட்டங்களில்
-
இசுக்கொட்லாந்தில் உள்ள டன்ஸில்
-
க்ரிம்ஸ்பியில் உள்ள வீல்ஸ்பி காடுகளில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Pomnik legendarnego niedźwiedzia Wojtka stanął w Krakowie" [Statue of the legendary bear Wojtek unveiled in Krakow]. Telewizja Polska (in போலிஷ்). 19 May 2014. Retrieved 24 December 2015.
- ↑ Martin Williams (2017). From Warsaw to Rome: General Anders' Exiled Polish Army in the Second World War. Pen & Sword Military. ISBN 978-1-47389-488-4.
One of the most popular recollections of the Polish Army in the East is that of Wojtek, the Syrian Brown Bear who became the mascot of 22 General Transport Company.
- ↑ 3.0 3.1 Mansolas, Angelos (2017). Monte Cassino January-May 1944: The Legend of the Green Devils. Fonthill Media. ISBN 978-1-78155-602-3.
The most unusual soldier of the Battle of Monte Cassino, or any other battle for that matter, was a bear named 'Wojtek'. He was a Syrian brown bear found in Hamedan, Iran in April 1942 by the troops of the newly formed 2nd Polish Corps during their long journey out of the Siberian labour camps through Middle East en route to Egypt.
- ↑ "Meaning, Origin and History of the Name Wojciech". Behind the Name. 2014. Retrieved 15 August 2014.
- ↑ "Meaning, Origin and History of the Name Wojciech". Behind the Name. 2014. Retrieved 15 August 2014.
- ↑ "Smarter than the average bear .. by far". Edinburgh Evening News. 28 March 2007. Retrieved 15 August 2014.
- ↑ 7.0 7.1 "The Soldier Bear Who Went to War", BBC Outlook
- ↑ "Meaning, Origin and History of the Name Wojciech". Behind the Name. 2014. Retrieved 15 August 2014.
- ↑ "Meaning, Origin and History of the Name Wojciech". Behind the Name. 2014. Retrieved 15 August 2014.
- ↑ "Meaning, Origin and History of the Name Wojciech". Behind the Name. 2014. Retrieved 15 August 2014.
- ↑ "Meaning, Origin and History of the Name Wojciech". Behind the Name. 2014. Retrieved 15 August 2014.
- ↑ Mansolas, Angelos (2017). Monte Cassino January-May 1944: The Legend of the Green Devils. Fonthill Media. ISBN 978-1-78155-602-3.
At the time of his death, he weighed nearly 500 kilograms (1,100 lb) and over 1.8 metres (5'11 feet) tall.