வை. முத்துராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வை. முத்துராஜா (V. Muthuraja) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். புதுக்கோட்டையினைச் சார்ந்த முத்துராஜா மருத்துவர் ஆவார். இவர் சேலம் விநாயக மிசன் மருத்துவக் கல்லூரியில் 2001ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றார். இவர் 2021ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) வேட்பாளராகப் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

போட்டியிட்டத் தேர்தல்[தொகு]

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்குகள் % இரண்டாமிடம் கட்சி வாக்கு %
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 புதுக்கோட்டை திமுக வெற்றி 47.70 வி. ஆர். கார்த்திக் தொண்டைமான் அதிமுக 40.47

மேற்கோள்கள்[தொகு]

  1. "V.Muthuraja(DMK):Constituency- PUDUKKOTTAI(PUDUKKOTTAI) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-11-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வை._முத்துராஜா&oldid=3488875" இலிருந்து மீள்விக்கப்பட்டது