வை. பொன்னம்பலனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் மறவர் வை. பொன்னம்பலனார் (சனவரி 30, 1904 - டிசம்பர் 2, 1972) ஆசிரியப் பணி மூலம் தமிழுக்குத் தொண்டு செய்தவர். பொன்னம்பலனார் உடையார் பாளையம் வட்டம் கீழமாளிகை என்னும் ஊரில் பிறந்தார். பெற்றோர் வைத்தியலிங்கம், பர்வதம்மாள். இவருடன் பிறந்தவர்கள் நால்வர். இவாின் இயற்பெயர் கனகசபை. தனித்தமிழ் பற்றின் காரணமாக பொன்னம்பலம் என மாற்றிக் கொண்டார்.

கல்வி[தொகு]

திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இவரது கல்வி ஆரம்பிக்கப்பட்டது. அடுத்து திருவையாறு அரசர் கல்லூரியில் சேர்ந்து தமிழ் பயி்ன்றார். 1931-ல் புலவர் பட்டம் பெற்றார். தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளாரின் மகன் திருநாவுக்கரசரின் நட்பால் மறைமலை அடிகளாாின் தொடர்பு ஏற்பட்டது.

ஆசிாியப்பணி[தொகு]

புலவர் பட்டம் பெற்ற பொன்னம்பலனார் 1932-ல் சேலம் மாவட்டம் வேலூரில் உள்ள கந்தசாமி கண்டர் அறக்கட்டளையைச் சார்ந்த உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிாியராகச் சேர்ந்தார். அப்பள்ளியில் 1947 வரை தமிழாசிாியராகப் பணியாற்றினார். சேலம் நகராண்மை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிாியராகப் பணியாற்றி போதுதான் தமிழ்த்தேசியத்தந்தை பெருஞ்சித்திரனார் மாணவராக இருந்தார். பாவாணரின் தொடர்பும், பாரதிதாசனின் தொடர்பும் இவருக்கு ஏற்பட்டது. பின்னர் 1951-ல் திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி மாவட்ட மன்ற உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிாியராகப் பணியேற்றார். 1954 செந்துறை உயர்நிலைப்பள்ளியிலும், 1957-ல் இருந்து 1960 வரை அரவக்குறிச்சி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். பின்னர் பொன்பரப்பி உயர்நிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டு இறுதியாக 1968-ல் தோகைமலைப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

பெற்ற பட்டம்[தொகு]

1957 பொன்னம்பலனாாின் துணிவைப்பாராட்டி தந்தை பொியாரின் கரங்களால் தமிழ் மறவர் என்னும் பட்டத்தை வழங்க ஆவண செய்தது. இவ்விழாவில் பாவாணரும், பாவேந்தரும் முன்னிலை வகித்தனர். அன்றிலிருந்து தமிழ் மறவர் என்றால் பொன்னம்பலனாரைக் குறிக்கும் பட்டமாக அமைந்தது.

இறப்பு[தொகு]

புரட்சிக் கொள்கைகளும், துணிவும் மிக்க பொன்னம்பலனார் 1972-ல் உடல்நலக் குறைவால் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவம் பலனளிக்காமல் 2.12.1973-ல் அன்று தன் இன்னுயிரை நீத்தார்.

சான்று[தொகு]

  • ஆய்வுக் கோவை 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=வை._பொன்னம்பலனார்&oldid=2612820" இருந்து மீள்விக்கப்பட்டது