வைர நாற்கர தொடர்வண்டிப் போக்குவரத்துத் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வைர நாற்கர தொடர்வண்டிப் போக்குவரத்துத் திட்டம் அல்லது வைர நாற்கர ரயில் திட்டம் (Diamond Quadrilateral project) என்பது தில்லி, கொல்கத்தா, சென்னை, மற்றும் மும்பை ஆகிய இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களை இணைக்கும் விரைவு தொடர்வண்டிப் போக்குவரத்து திட்டம் ஆகும். இத்திட்டத்தின்படி தில்லி - ஆக்ரா இடையே மணிக்கு 160-200 கி.மீ. வேகத்தில் செல்லும் தொடர்வண்டிப் போக்குவரத்து 2014 ஆம் ஆண்டு இறுதிக்குள் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. நான்கு பெருநகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தைக் குறைப்பதற்காக இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பெருநகரங்களை இணைக்க வைர நாற்கர ரயில் திட்டம் : பிரணாப் அறிவிப்பு". தினமணி. 10 சூன் 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "வைர நாற்கர திட்டம் மூலம் அதிவேக ரயில்கள் அறிமுகம்: குடியரசுத் தலைவர் உரையில் அறிவிப்பு". தி இந்து. 10 சூன் 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Govt announces quadrilateral rail project to connect metros". Business Today. 10 சூன் 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Modi's governance agenda: Diamond Quadrilateral of high speed trains". THE TIMES OF INDIA. 10 சூன் 2014 அன்று பார்க்கப்பட்டது.