வைராவிகுளம் ஊராட்சி
| வைராவிகுளம் | |||||
| — ஊராட்சி — | |||||
| ஆள்கூறு | |||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | திருநெல்வேலி | ||||
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] | ||||
| முதலமைச்சர் | விஜய்[2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | ஆனந்த் மோகன், இ. ஆ. ப [3] | ||||
| சிற்றூராட்சி தலைவர் | திருமதி சி. பிச்சம்மாள் | ||||
| மக்களவைத் தொகுதி | திருநெல்வேலி | ||||
| மக்களவை உறுப்பினர் | |||||
| சட்டமன்றத் தொகுதி | அம்பாசமுத்திரம் | ||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||
| மக்கள் தொகை | 2,397 | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
|
குறியீடுகள்
| |||||
வைராவிகுளம் ஊராட்சி (Vairavikulam Gram Panchayat), தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 9 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2397 ஆகும். இவர்களில் பெண்கள் 1231 பேரும் ஆண்கள் 1166 பேரும் உள்ளனர். இந்த ஊராட்சி 2006-2007ஆம் ஆண்டு மத்திய அரசின் நிர்மல் கிராம் புரஸ்கார் விருது முழு சுகாதாரத்திற்காக பெற்றது. அன்றைய ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் கைகளால் விருதும் ரூபாய் இரண்டாம் லட்சத்திற்கான காசோலையும் பெற்று வந்தது அது சமயம் இந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக எஸ் பாபநாசம் அவர்கள் பதவியில் இருந்தார்கள். இந்த ஊராட்சியின் முதல் ஊராட்சி மன்றத் தலைவராக திரு கணபதி தேவர் என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் இரண்டாவதாக திரு ஆ.ராமையா தேவர் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார் 3 மற்றும் 4வது முறை பா. சுப்பிரமணியன் அவர்களும் 5 வது திரு மாயாண்டி தேவர்1984-89 என்பவரும் 6 வது திருமதி பிரேமா அருணாச்சலம் 1996-2001. 7 வது திருமதி பிச்சம்மாள் சிவசங்கர் நாராயணன்2001-2006 அவர்களும், 8 வது எஸ் பாபநாசம்2006-2011 அவர்களும் 9 எஸ் முத்துக்குமார்2011-2016. என்பவரும் 2021அகடோபர் முதல் சி .பிச்சம்மாள் ஊராட்சி தலைவராக பதவி வகித்துள்ளார் . 2010ஆம் ஆண்டு ஊராட்சி மன்றத்திற்கு புதிய ஊராட்சி மன்றக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது ஊராட்சி மன்றத்திற்கான நமக்கு நாமே திட்டத்தில் 2 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது 2007ஆம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வைராவிகுளம் ஊராட்சியில் நூலக கட்டிடம் சாலை மேம்பாடு ஊரணி மறுநிர்மாணம் மின்விளக்கு வசதிகள் விளையாட்டுத் திடல் அமைத்தல் என மொத்தம் ரூபாய் 20 லட்சத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது 2010ஆம் ஆண்டு இந்திரா காலனி பகுதியில் அன்றைய மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் திரு இரா ஆவுடையப்பன் அவர்களின் தொகுதி வளர்ச்சி நிதியில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது 2007ஆம் ஆண்டு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் எம்ஜிஆர் நகர் பகுதியில் புதிய நியாயவிலை கட்டிடம் கட்டப்பட்டது டாக்டர் கலைஞர் நகர் பகுதியில் ரூபாய் ஒன்பதரை லட்சம் செலவில் 10 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் தாமிரபரணி ஆற்றிலிருந்து புதிய குடிநீர் ஏற்றும் பைப்லைன் விஸ்தரிப்பு மற்றும் புதிய மின் மோட்டார் இணைப்பு வழங்கப்பட்டது தாமிரபரணி ஆற்றிலிருந்து 2007 ஆம் ஆண்டு முதல் முறையாக உறை கிணறு அமைக்கப்பட்டு வைராவிகுளம் ஊராட்சி முழுவதும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2022 மார்ச் 22 (உலக தண்ணீர் தினம் )அன்று வைராவிகுளம் ஊராட்சி பகுதியில் 100 சதவீத குடியிருப்புகளுக்கு அனைத்து குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கிராம சபை மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2025_26 ஊராட்சியில் கனிம வளத்துறை மானியமாக ரூபாய் 65 லட்சத்தில் சாலை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இரண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு ரூபாய் ஒரு கோடியே 64 லட்சத்தில் பணிகள் நிறைவு பெற்றுள்ளது ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு ரூபாய் 29 லட்சத்தில் புதிய வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 59 லட்சத்தில் ஆய்வக வசதியும் 20 லட்சத்தில் 2 செவிலியர் குடியிருப்புகளும் கட்டப்பட்டுள்ளது ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ஊராட்சிக்கு கூடுதல் கட்டட வசதி ரூபாய் 5 லட்சத்திலும் ரேஷன் கடை ரூபாய் 10 லட்சத்திலும் பள்ளி மாணவர்களுக்கான சமையல் அறை ரூபாய் 10 லட்சத்திலும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் குடிநீர் அபிவிருத்திக்காக ஜே ஜே எம் திட்டத்தின் கீழ் 85 லட்சத்தில் 3 மேல்நிலை நீர் தேக்க தொட்டியும் குடிநீர் பைப் லைன் விஸ்திரிப்பு செய்யப்பட்டுள்ளது மின் வளக்கு இல்லாத பகுதியை இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது
அடிப்படை வசதிகள்
[தொகு]தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
| அடிப்படை வசதிகள் | எண்ணிக்கை |
|---|---|
| குடிநீர் இணைப்புகள் | 1200 |
| சிறு மின்விசைக் குழாய்கள் | 6 |
| கைக்குழாய்கள் | nil |
| மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் | 12 |
| தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் | nil |
| உள்ளாட்சிக் கட்டடங்கள் | 13 |
| உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் | 1 |
| ஊரணிகள் அல்லது குளங்கள் | 2 |
| விளையாட்டு மையங்கள் | 1 |
| சந்தைகள் | nil |
| ஊராட்சி ஒன்றியச் சாலைகள் | 2 |
| ஊராட்சிச் சாலைகள் | 120 |
| பேருந்து நிறுத்தம் | |
| சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் | 5 |
சிற்றூர்கள்
[தொகு]இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின்(குக்கிராமம்)பட்டியல்[7]:
- ராஜீவ் நகர்
- எம்.ஜி.ஆர். நகர்
- பசும்பொன் நகர்
- சங்குமுத்து நகர்
- Dr . கலைஞர் நகர்
- காமராஜ் நகர்
- வைராவிகுளம்
- இந்திரா நகர்
- அண்ணா நகர்
சான்றுகள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "அம்பாசமுத்திரம் வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. Retrieved நவம்பர் 3, 2015.
{{cite web}}: Unknown parameter|=ignored (help) - 1 2 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.