வைரமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைரமணி
Vairamani

வைரமோணி
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்இடுக்கி
அரசு
 • வகைபஞ்சாயத்து
மொழிகள்
 • அலுவல்பூர்வம்மலையாளம்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண்685505
தொலைபேசிக் குறியீடு04869
வாகனப் பதிவுகே.எல்-37
அருகாமை நகரம்கட்டப்பனா
மக்களவை (இந்தியா) தொகுதிஇடுக்கி மாவட்டம்

வைரமணி (Vairamani) இந்தியாவின் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இருந்த ஒரு கிராமம் ஆகும். வைரமோணி என்றும் இதை அழைக்கிறார்கள். 1974 ஆம் ஆண்டு இடுக்கி அணையின் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் நிரம்பியதால் கிராமம் அப்போது தண்ணீரில் மூழ்கியது.

வரலாறு[தொகு]

.சே.பா. இராமசுவாமி ஐயர் காலத்தில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையால், சதுப்பு நிலங்களை குத்தகைக்கு விடுவதற்கான முடிவின் ஒரு பகுதியாக, மக்களுக்கு தலா 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இந்த கிராமங்களில் நெல் சாகுபடி செழிப்பாக இருந்தது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு இந்த கிராமம் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது. பின்னர் ஆட்சிக்கு வந்த பொதுவுடமைக் கட்சி அரசு, கேரள மாநிலம் உருவான பிறகு அந்த நிலத்தை குடும்பங்களுக்கு வழங்கியது. [1]

தொடுபுழாவிற்கும் கட்டப்பனாவிற்கும் இடையே உள்ள முக்கிய நகரமான வைரமணி, குதிரைக்குத்தி, மய்யண்ணா, கயனாட்டுப்பாறை, வெங்கனம், சுருளி, க்டவரா, முத்திகண்டம் மற்றும் நடக்கவயல் ஆகிய கிராமங்களின் வணிக மையமாக இருந்தது. [1] கிராமம் முற்றாக வெளியேற்றப்படுவதற்கு முன்னர் இங்கு 2000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன. [1] அணை கட்டுவதற்கு முன், வைரமணி வழியாக கட்டப்பனாவுக்கு வனப்பகுதி வழியாக மோட்டார் வாகனம் செல்லும் சாலை இருந்தது. [2] 1974 ஆம் ஆண்டில் இடுக்கி அணையின் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் நிரம்பியதால் கிராமம் தண்ணீரில் மூழ்கியது. [1] அங்குள்ள குடும்பங்கள் வண்ணப்புரம், சாலக்குடி, மஞ்சப்ரா, கொருதோடு, சேலச்சுவடு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். [1] ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. [1] நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த வைரமணியில் உள்ள புனித தாமசு தேவாலயம், புனித மேரி தேவாலயம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பின்னர் குளமாவுக்கு மாற்றப்பட்டது. [3]

தற்போதைய நிலை[தொகு]

கிராமத்தின் எச்சங்களான புனித தாமசு தேவாலயத்தின் மாடிகள், வீடுகள், கடைகள் என நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையானவற்றை கோடை காலத்தில் அணையின் நீர்மட்டம் 15 சதவீதத்துக்கும் கீழ் குறையும்போது காணலாம். [1] வைரமணி இப்போது இடுக்கி வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள இடுக்கி நீர்த்தேக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒரு தீவு ஆகும். [4] இந்த தீவு, மனித தலையீடு இல்லாமல், கோடை மாதங்களில் பல பறவைகளின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறி வருகிறது. [4] தற்போது வைரமணிக்கு செல்ல குளமாவில் இருந்து நீர்த்தேக்கம் வழியாக மூன்றரை மணி நேரம் படகில் பயணிக்க வேண்டியுள்ளது. [2]

குளமாவு வன நிலையம் வைரமணி வன நிலையம் என பதிவேடுகளில் குறிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைரமணி&oldid=3436542" இருந்து மீள்விக்கப்பட்டது