உள்ளடக்கத்துக்குச் செல்

வைபவி சாண்டில்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைபவி சாண்டில்யா
2017இல் வைபவி சாண்டில்யா
பிறப்பு(1994-05-27)மே 27, 1994 [1][2]
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2015–தற்போது வரை

வைபவி சாண்டில்யா (Vaibhavi Shandilya) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், கன்னடம், மராத்தி மொழி படங்களில் பணியாற்றுகிறார். மராத்தி திரைப்படமான ஜானிவா (2015) படத்தில் அறிமுகமான இவர், ஏக் அல்பேலா (2015), சக்க போடு போடு ராஜா (2017), இருட்டு அறையில் முரட்டு குத்து (2018), கேப்மாரி (2019) உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தொழில்

[தொகு]

நடிகர் மகேஷ் மஞ்ச்ரேகரின் மகன் சத்யா அறிமுகமான படமும், சமூக நீதி குறித்த கதையைக் கொண்டதான மராத்தி திரைப்படமான ஜானிவா (2015) திரைப்படத்தில் வைபவி நடிகையாக அறிமுகமானார்.[3] பகவான் தாதாவின் வாழ்க்கை வரலாற்றான ஏக் அல்பேலாவில் வித்யா பாலன் உள்ளிட்ட நடிகர்களிடையே வைபவி நடித்தார், அதில் இவர் ஷாஹீன் என்ற முஸ்லீம் பெண்ணின் பாத்திரத்தை ஏற்றார்.[4][5]

2016 ஆம் ஆண்டில், வைபவி எகிப்திய அரபு திரைப்படமான கஹெம் ஃபெ எல் ஹெண்டில் "தக் தின்னா" என்ற பாடலில் நடனக் கலைஞராக தோன்றினார். இதற்கு பிரபல இந்திய நடன நடன இயக்குனர் விஷ்ணு தேவா நடனமமைத்தார். வைபவி சந்தானம் நடித்த சர்வார் சுந்தரம் மற்றும் சக்க போடு போடு ராஜா ஆகிய இரண்டு தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். பிந்தைய படம் 2017 இல் வெளியிடப்பட்டது. முந்தைய படம் 2018இல் வெளியாக இருந்தது.[6][7] வைபவி நடித்த ஒப்பந்தமான மூன்றாவது தமிழ் படமான கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் படத்தில் நடிக்க 2018 இல் ஒப்பந்தமானார்.

திரைப்படவியல்

[தொகு]
விசை
Films that have not yet been released இதுவரை வெளியிடப்படாத படங்களைக் குறிக்கிறது
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2015 ஏக் அல்பேலா ஷாஹீன் மராத்தி
2017 சக்க போடு போடு ராஜா யாழினி தமிழ்
2017 ராஜ் விஷ்ணு லாவண்யா கன்னடம்
2017 நெக்ஸ்ட் நுவ்வே ஸ்மிதா தெலுங்கு
2018 இருட்டு அறையில் முரட்டு குத்து தென்றல் தமிழ்
2019 கேப்மாரி ஜென்னி தமிழ்
2020 சர்வார் சுந்தரம் சஞ்சனா தமிழ்
2020 ஈசல் டி.பி.ஏ. தமிழ்
2020 பட்டக்கி டி.பி.ஏ. தமிழ்
2020 கலிபட்டா 2dagger டி.பி.ஏ. கன்னடம்

வலைத் தொடர்

[தொகு]
ஆண்டு தலைப்பு பாத்திரம் மொழி அலைவரிசை
2019 நிஷா நிஷா தமிழ் ஜீ5

குறிப்புகள்

[தொகு]

 

  1. https://www.youtube.com/watch?v=mcft1rsC6T4
  2. https://in.bookmyshow.com/person/vaibhavi-shandilya/1047074
  3. Janiva Movie Review {1.5/5}: Critic Review of Janiva by Times of India, பார்க்கப்பட்ட நாள் 2020-08-04
  4. "Movie review: Ekk Albela". filmfare.com. பார்க்கப்பட்ட நாள் 6 October 2017.
  5. "Vaibhavi Shandilya finds a prominent role in 'Ek Albela'". ZEE Talkies. Archived from the original on 12 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 6 October 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Santhanam next film is again with Vaibhavi Shandilya !". sify.com. Archived from the original on 20 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 October 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Vaibhavi to debut in Santhanam's next". The Hindu. 6 March 2016. பார்க்கப்பட்ட நாள் 6 October 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைபவி_சாண்டில்யா&oldid=4114444" இலிருந்து மீள்விக்கப்பட்டது