வைணவ குருபரம்பரை வரலாறுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வைணவ குருமார்களின் வரலாற்றைத் தொகுத்துக் கூறும் நூல்கள் சில தோன்றின. அவை உரைநடையிலும், செய்யுள் வடிவிலும் உள்ளன. இவை வெவ்வேறு காலங்களில் தோன்றியவை. எனினும் அவற்றில் தொகுக்கப்பட்டிருக்கும் செய்திகளை அளவிட்டுக்கொள்வது வைணவ வளர்ச்சிப் பாதையை அறிய உதவும்.[1]

நூல்கள்[தொகு]

வைணவ குருமார்களின் வரலாறுகளைச் [2] செய்யுள் வடிவில் எடுத்துரைக்கும் பழமையான நூல்கள் ஒன்பது.[3]

நூல் நூலாசிரியர் நூற்றாண்டு குறிப்பு நடை
அரிசமய தீபம் சடகோப தாசர் [4] 17 இடைப்பகுதி 12 ஆழ்வார் மற்றும் நாதமுனிகள், யமுனாசாரியார், இராமானுசர் வரலாறுகள் 14 சருக்கங்களில் 1400 பாடல்
இராமானுச சரிதை பாகை சீதாராம தாசர் - திருவரங்கப் பெருமாளரையர் இராமானுசருக்கு அருளிச்செய்ததாகத் தோற்றுவாய் செய்துகொண்டு இராமானுசர் வரலாற்றை எடுத்துரைக்கிறது 756 பாடல்
இராமானுசார்ய திவ்விய சரிதை பிள்ளை லோகஞ்சீயர் இடைச்செருகல்கள் உள்ளன வடமொழி, தெலுங்கு, கிரந்த எழுத்துக்களில் மேற்கோள்கள் தரப்பட்டுள்ள நூல் மணிப்பிரவாள உரையடை
குருபரம்பராப் பிரபாவம் வடிவழகிய நம்பி தாசர் 11 ஆழ்வார்கள், நாதமுனி, ஆளவந்தார் வரலாறுகள் 2965 பாடல்கள்
குருபரம்பரைப் புராணம் ஊறை விசயராகவன் - ஆழ்வார்களுடன் நாதமுனிகள் முதலானோர் வரலாறு 4361 பாடல்
திவ்வியசூரி சரிதம் வங்கிபுரம் சனிவாசாசாரி 19 ஆழ்வார்கள், நாதமுனி, ஆளவந்தார், எம்பெருமானார், வேதாந்த தேசிகர் - வரலாறு 2824 பாடல்
பரமயோகி விலாசம் - - விளங்கவில்லை -
பெரிய திருவடி அடைவு கந்தாடையப்பன் 15 கருடவாகன பண்டிதர் செய்த வடமொழி நூலைத் தழுவியது -
யதீந்திரப்ரவண ப்ரபாவம் பிள்ளை லோகஞ்சீயர் 15 பிற்பகுதி - உரைநடை, மணிப்பிரவாளம்

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 298. 
  2. வைபவங்களை
  3. நூல்கள் அகரகரிசையில் அடுக்கப்பட்டுள்ளன
  4. தஞ்சை மாவட்டம் கீழையூர்

[[பகுப்பு: