வைணவ ஆசாரிய பரம்பரை (தென்கலைக்கு முன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடமொழியிலும் தென்மொழியிலும் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில் வைணவ ஆசாரிய பரம்பரை இறைவன் 'பெரிய பெருமாள்' என்பவரை ஆதியாகக் கொண்டு தொடங்குகிறது. இப்பகுதி 11ஆம் நூற்றாண்டில் தென்கலை-வைணவம் பிரிவதற்கு முன் உள்ள பரம்பரையைக் கூறுவது.

வேதாந்த தேசிகர் தம் முன்னோர் பரம்பரை வழியில் வடகலை வைணவப் பிரிவையும், பிள்ளை லோகாசாரியார் தம் முன்னோர் கால்வழியில் தென்கலை வைணவப் பிரிவையும் தோற்றுவித்தனர். இருவரும் சம காலத்தவர். திருமண் காப்பிட்டுக்கொள்ளும் முறையில் இவர்கள் வேறுபடுகின்றனர். தென்கலையார் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூல் வழியினர். வடகலையார் வேத வழியினர்.

இதன் அட்டவணை[தொகு]

ஆசாரியர் குறிப்பு
ஸ்ரீய பதியான பெரிய பெருமாள் இறைவன்
பெரிய பிராட்டியார் இறைவி
சேனை முதலிகள் இறைபடை
நம்மாழ்வார் மாணவர்கள் மதுரகவியாழ்வார், பராங்குதாசர்
நாதமுனிகள் 9ஆம் நூற்றாண்டு
உய்யக்கொண்டார் 10ஆம் நூற்றாண்டு
மணக்கால் நம்பி 10ஆம் நூற்றாண்டு
ஆளவந்தார் 10-11 நூற்றாண்டு, இவர் சூடர் 5 பேர். (1) திருக்கோட்டியூர் நம்பி, (2) திருமலையாண்டான், (3) பெரிய நம்பி. (4) பெரிய திருமலை நம்பி, (5) திருவரங்கப் பெருமாள் அரையர் (இந்த ஐவரிடமும் சீடரானவர் எம்பெருனார் என்னும் இராமானுசர்)
இராமானுசர் 1017-1137 இவரது சீடர் பலர் (1) எம்பார், (2) கூரத்தாழ்வார், (3) திருக்குறுக்கைப்பிரான் பிள்ளான், (4) முதலியாண்டான், (5) அருளாளப்பெருமான் எம்பெருமானார், (6) கிடாம்பியாச்சான், முதலானோர்

இவற்றையும் காண்க[தொகு]

கருவிநூல்[தொகு]

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, நூற்றாண்டு முறை, 9 முதல் 16, தொகுதி 14, பதிப்பு 2005