வைட்டிலா - 8
| வைட்டிலா - 8 VTL 8 |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| IR 47310-94- 4-3-1 X CSR 10 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 115 - 120 நாட்கள் |
| மகசூல் |
| எக்டேருக்கு 40 - 42 குவிண்டால் |
| வெளியீடு |
| 2010[1] |
| வெளியீட்டு நிறுவனம் |
| நெல் ஆராய்ச்சி நிலையம் (RRS), வைட்டிலா |
| மாநிலம் |
| கேரளம் |
| நாடு |
வைட்டிலா - 8 (VTL 8) எனப்படும் இந்த நெல் வகை, IR 47310-94- 4-3-1 மற்றும் CSR 10 இடையேயான, கலப்பினப்படுத்தப்பட்ட கேரளாவின் ஒரு புதிய கலப்பின நெல் இரகமாகும்.[2] தென்னிந்தியாவின் கேரள மாநில எர்ணாகுளம் மாவட்டம், வைட்டிலா பகுதியில் அமைந்துள்ள "நெல் ஆராய்ச்சி நிலையம்" (RRS), 2010 ஆம் ஆண்டு[2][3] இந்த நெல் இரகத்தை வெளியிடபட்டதாக அறியப்படுகிறது.[4]
பின்னணி
[தொகு]நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 115 - 120 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது. மேலும் இந்நெல் இரகத்தின் அரிசி, நடுத்தர மற்றும் தடித்த சிவப்பு நிறமாகும். கேரள கடலோர உப்பு சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏற்றது என கூறப்படுகிறது.[5] மேலும் வேறொரு மூலத்தின்படி இதன் அரிசி, வெள்ளை என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.[6] நீர்ப்பாசனம் செய்யப்பட்ட பகுதிகளில் எக்டேருக்கு சராசரியாக 40 - 42 குவிண்டால் விளைச்சல் தருவதாக கருதப்படும் இந்நெல் இரகம், பூச்சிகள் மற்றும் நோய்களின் வரம்பு மற்றப் பயிர்களின் அளவை விட குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ List of Notified Varieties - Page 23
- ↑ 2.0 2.1 2.2 "Indian Rice Varietal Information - 1271 Records". rice-garud.icar-web.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-13.
- ↑ Varieties Released - (List upto 2019)
- ↑ Rice Research Station, Vyttila
- ↑ "Rice Variety information Pokkali lands". farmextensionmanager.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-13.
- ↑ "KAU Agri-infotech portal". www.celkau.in (ஆங்கிலம்) - 2019. Retrieved 2025-10-13.