வைசிய வாணி
வைசிய வாணி (Vaishya Vani) என்பது இந்து சமயத்தின் வர்ணம் ஒன்றான வைசியர்களின் துணை சாதி ஆகும். குசராத்து மாநிலம் மற்றும் தாமன் & தியூ பிரதேசத்தில், இவர்கள் ‘வைணவ வாணிக்’ என்றும் அழைக்கப்படுகின்றன. தெற்கு கன்னட மாவட்டத்தின் கார்வார் மற்றும் வடக்கு கன்னட மாவட்டத்தின் அன்கோலா போன்ற பகுதிகளில் இவர்கள் ‘கன்னட வைசியர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். இதில் கன்னடம் என்பது பகுதியைக் குறிக்கிறது. கன்னட மொழி அல்ல. ஏனெனில் இவர்களின் தாய்மொழி கொங்கணி. குசராத்து, கருநாடகம் மற்றும் மகாராட்டிரம் போன்ற மாநிலங்களில் தங்களுக்குள் கொங்கணியைப் பேசிக் கொள்கின்றனர்.[1]
வரலாறு
[தொகு]கோவாவின் கதம்பர்களின் காலத்தில், இவர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த பனாஜிகர்கள் (வணிகர்கள்) என்று அழைக்கப்பட்டனர். சவோய் வெரெம், நார்வே, காண்டேபர், கவாலே, பந்தோரா மற்றும் தாலிகிராம் ஆகிய இடங்களிலிருந்து கிபி 1358 ஆம் ஆண்டைச் சேர்ந்த செப்புத் தகடுகளில் பனாஜிகர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இப்போது இவர்கள் ‘வைசிய வாணி’, ‘இலிங்காயத் வாணி’, ‘இந்து வாணி’ அல்லது ‘வாணி’ போன்ற பல்வேறு பெயர்களில் அறியப்படுகின்றனர்.[2][3]
சமூக நிலை
[தொகு]மகாராட்டிராவில் 2008 ஆம் ஆண்டில் வைசிய வாணிகளுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தகுதி வழங்கப்பட்டது. பின்னர் அது 2011 இல் நீக்கப்பட்டது.[4] தற்போது, துணை சாதியைச் சேர்ந்த சில பிரிவுகள் வரலாற்றுக் கருத்துக்களின் அடிப்படையில் அந்தத் தகுதியைப் பெறலாம். இருப்பினும், மகாராட்டிர மாநிலத்தின் மத்திய பட்டியலில் இந்த துணை சாதி பட்டியலிடப்படவில்லை.[5]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mitragotri, Vithal Raghavendra (1999). "Kannada Vaishya Vanik".
- ↑ Tulpule, S.G. Pracina Mqrathi koriva lekha. pp. 271–276.
- ↑ Mitragotri, Vithal Raghavendra (1999). A socio-cultural history of Goa from the Bhojas to the Vijayanagara. Institute Menezes Braganza. pp. 68–69.
- ↑ "HC strikes down GR to include two sub-castes in OBCs". Hindustan Times (in ஆங்கிலம்). 2010-10-02. பார்க்கப்பட்ட நாள் 2023-07-19.
- ↑ "National Commission for Backward Classes". www.ncbc.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-19.