வைசாலி இரமேசுபாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைசாலி இரமேசுபாபு
Vaishali Rameshbabu
Vaishali R.jpg
நாடுஇந்தியா
பிறப்பு2001 (அகவை 21–22)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பட்டம்பெண் கிராண்டு மாசுட்டர், 2018
பிடே தரவுகோள்2401 (திசம்பர் 2021) 2376
உச்சத் தரவுகோள்2411 (செப்டம்பர் 2019)

வைசாலி இரமேசுபாபு (Vaishali Rameshbabu) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க விளையாட்டு வீராங்கனையாவார். சென்னையைச் சேர்ந்த இவர் 2001 ஆம் ஆண்டு பிறந்தார்.

14 வயதுக்குட்பட்டோர் மற்றும் 12 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் உலக இளைஞர் சதுரங்க சாம்பியன் பட்டத்தை வைசாலி வென்றுள்ளார்[1]. 2016 ஆம் ஆண்டு முதல் இவர் பன்னாட்டு சதுரங்க மாசுட்டராக இருந்து வருகிறார், 2016 அக்டோபர் மாத தரவுகளின்படி வைசாலி 16 வயதுக்குட்பட்ட இந்திய சதுரங்க வீராங்கனைகளில் இரண்டாவது இவத்தில் இருக்கின்றார். இம்மாதத்தில் இவருடைய எலோ தரப்புள்ளிகள் 2300 ஆகும்.

2018 ஆம் ஆண்டு லாட்வியாவில் நடைபெற்ற நடைபெற்ற இரிகா தொழில்நுட்ப திறந்தநிலை சதுரங்கப் போட்டியில் இவர் பெண் கிராண்டு மாசுட்டர் பட்டத்தைப் பெறுவதற்கான தகுதியை அடைந்தார்[2]. இந்தியாவின் மிக இளவயது பன்னாட்டு சதுரங்க மாசுட்டர், நான்காவது இளம் கிராண்டு மாசுட்டர் போன்ற சிறப்புகளைப் பெற்றுள்ள சதுரங்க வீரர் பிரக்ஞானந்தா இவரது சகோதரர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rameshbabu Praggnanandhaaa celebrity xyz page". 29 December 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. "R. Vaishali becomes Grand Master". 29 December 2019 அன்று பார்க்கப்பட்டது.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைசாலி_இரமேசுபாபு&oldid=3434775" இருந்து மீள்விக்கப்பட்டது