வைக்கம் சரஸ்வதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வைக்கம் சரஸ்வதி
Vaikom Saraswathi.jpg
பிறப்புவைக்கம், இந்தியா
பணிகருநாடக இசைப் பாடகி
அறியப்படுவதுகருநாடக இசைப் பாடகி, பின்னணிப் பாடகி
உறவினர்கள்ராஜன் (சகோதரர், மலையாள பின்னணிப் பாடகர்)[1]

வைக்கம் சரஸ்வதி (Vaikom Saraswathi) தென்னிந்திய கருநாடக இசைப் பாடகியும், திரைப்படப் பின்னணிப் பாடகியும் ஆவார்.[2] இவர் பாடிய பல கருநாடக இசைப் பாடல்கள் இசைத்தட்டுகளில் வெளிவந்துள்ளன.[2] இந்திய வானொலிகளில் 1940கள், 50களில் இவரது கச்சேரிகள் ஒலிபரப்பப்பட்டுள்ளன.[3]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

வைக்கம் சரசுவதியின் தந்தை காலட்சேபதிலகம் என அழைக்கப்பட்ட கவாய் விசுவநாத பாகவதர் ஆவார்.[4] கதாகாலட்சேபம் செய்து கொண்டே இசையுலகில் நுழைந்தவர் சரசுவதி. ஜி. என். பாலசுப்பிரமணியத்தின் மாணவி.[4]

தமிழில் பின்னணிப் பாடல் முறை வரத்தொடங்கிய 1947-ஆம் ஆண்டில், கே. வி. மகாதேவன் வைக்கம் சரஸ்வதியை தன அமராவதி திரைப்படத்திலே பின்னணிப் பாடகியாக அறிமுகம் செய்தார்.[2] நடிகை பி. எஸ். சரோஜாவிற்காக கண்டேனடி, உன் திருவருள், அழகை ஆகிய பாடல்களை இத்திரைப்படத்தில் இவர் பாடினார்.[5] 1948 இல் வெளிவந்த ஜம்பம் திரைப்படத்தில் வாரும் இந்த வேளை, சேதி என்ன ஆகிய பாடல்களையும் இவர் பாடினார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Yachakan (1951)". மூல முகவரியிலிருந்து 5 செப்டம்பர் 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 5 செப்டம்பர் 2019.
  2. 2.0 2.1 2.2 கலைமாமணி வாமனன் (29-04-2018). "‘திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் 1918–2018’ – 9". தினமலர். மூல முகவரியிலிருந்து 5 செப்டம்பர் 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 5-09-2019.
  3. "The Indian Listener". மூல முகவரியிலிருந்து 5 செப்டம்பர் 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 5 செப்டம்பர் 2019.
  4. 4.0 4.1 கானதாசன் (1948-10-31). "வித்வத் மண்டலம்". ஹனுமான்: 40. 
  5. 5.0 5.1 "வைக்கம் சரஸ்வதி". பேசும் படம். சனவரி 1949. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைக்கம்_சரஸ்வதி&oldid=3309712" இருந்து மீள்விக்கப்பட்டது