உள்ளடக்கத்துக்குச் செல்

வைகுந்தநாத கோயில், தேரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீதேவி (இடது), வைகுந்தநாத (மையம்), பூதேவி (வலது) மற்றும் உற்சவ மூர்த்தி (முன்)

ஸ்ரீ வைகுந்தநாத சுவாமி கோயில் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தேரணி கிராமத்தில் அமைந்துள்ளது. இது 500 ஆண்டுகள் பழமையான வைணவ கோயில் ஆகும். இந்த கோயில் வைகுந்தநாதர் என்று அழைக்கப்படும் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. [1] இக்கோயிலானது 16 ஆம் நூற்றாண்டில் கொசசுதலை ஆற்றங்கரையில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் நகரி நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்திலும் திருப்பதி நகரத்திலிருந்து 50 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

வரலாறு

[தொகு]

இக்கோயில் 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் பகுதியாக இருந்த கார்வேட்டிநகரத்தின் அரச பகுதியில் பண்டிதரான சுதர்சனாச்சாரியால் கட்டப்பட்டது. பக்தர்கள் அதிகமாக வராத காரணத்தினால், ஒரு காலப்பகுதியில் பராமரிப்பின்றி காணப்பட்டது. பக்தர்களின் நன்கொடைகளின் உதவியால் இந்த கோயில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. [1]

முதன்மைத் தெய்வங்கள்

[தொகு]

இந்த கோயில் வைகுந்தநாத சுவாமி என்று குறிப்பிடப்படும் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கர்பகிரகத்தின் இருபுறமும் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் வைகுந்தநாத சுவாமி பக்தர்களுக்கு அருள் பாவிக்கின்றார்.

மேலும் காண்க

[தொகு]
  • தேரணி
  • திருப்பதியில் உள்ள இந்து கோவில்கள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Ancient temple springs back to life". The Hindu. Retrieved 10 February 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைகுந்தநாத_கோயில்,_தேரணி&oldid=3080645" இலிருந்து மீள்விக்கப்பட்டது