வே தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வே தீவு
வே தீவின் வரைபடம்
உயர்ந்த இடம்
உயரம்617 m (2,024 அடி)[1]
பட்டியல்கள்ரிபு
ஆள்கூறு5°49′N 95°17′E / 5.82°N 95.28°E / 5.82; 95.28
புவியியல்
அமைவிடம்சுமத்திரா, இந்தோனேசியா என்பவற்றிற்கு வடமேற்கில்
நிலவியல்
மலையின் வகைசுழல்வடிவ எரிமலை
கடைசி வெடிப்புபிளஸ்டோசின் யுகம்

வே தீவு (Weh island) (இந்தோனேசியா : புலாவ் வே) என்பது என்பது சுமத்ராவில் வடமேற்கில் அமைந்துள்ள செயற்படும் எரிமலைத் தீவாகும். பண்டா அச்சே நிலப்பரப்பில் இருந்து 45 நிமிடங்களில் வேகமான கப்பல் பயணத்திலும் அல்லது படகின் மூலம் 2 மணி பயணத்திலும் இந்த தீவை சென்றடையலாம்.[2] பிளிஸ்டோசின் யுகத்தில் கடைசி எரிமலை வெடிப்புக்கு பின் கடலால் பிரிக்கப்பட்டது.[3] இத்தீவு அந்தமான் கடலில் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் வடக்குத் திசையில் இதன் மிகப் பெரிய நகரமான சபாங் காணப்படுகிறது.

இந்த தீவு அதன் சுற்று சூழல் அமைப்பினால் பரவலாக அறியப்படுகின்றது. இந்தோனேசிய அரசாங்கம் தீவைச் சூழவுள்ள 60 சதுர கிலோமீட்டர் (23 சதுர மைல்) பரப்பளவை உள்நாட்டு மற்றும் கடலை வனவிலங்கு பாதுகாப்புப் பகுதியாக அறிவித்துள்ளது. பெரியவாய் சுறா எனப்படும் அரிய வகை சுறா இங்கு காணப்படுகிறது. அழி வாய்ப்பு கூடிய தத்தாப்ரினஸ் வல்ஹல்லே எனப்படும் தேரை இனம் இங்கு வாழ்கிறது. இத்தீவு பவளப்பாறைகள் மற்றும் பல்வேறு வகையான மீன்களுக்கு பெயர் பெற்றது.

புவியியல்[தொகு]

வே தீவு சுமத்ராவின் வடக்கு முனையிலிருந்து 15 கிலோமீற்றர் (9 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இது 156.3 கிமீ 2 (60.3 சதுர மைல்) பரப்பளவை கொண்ட மலைப்பாங்கான தீவாகும். வே தீவின் உயர்ந்த சிகரமான ஆவிப்பிளப்பு எரிமலை 617 மீற்றர் (2,024 அடி) உயரமுடையது.[2] பிளிஸ்டோசின் யுகத்தில் கடைசியாக நிகழ்ந்த எரிமலை வெடிப்பினால் மலை ஓரளவு இடிந்து விழுந்து கடலால் நிரப்பப்பட்டு ஒரு தனி தீவை உருவாக்கியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சபாங் நகரத்திற்கு அருகில் 9 மீற்றர் (30 அடி) ஆழத்தில் கடற்பரப்பில் இருந்து நீருக்கடியில் ஆவித்துளைகள் வெளிப்படுகின்றன.[4] பலோஹன் துறைமுகத்திலிருந்து மேற்கே  ஒரு மணி நேர பயணத்தில் அடையக் கூடிய கபாங் கடற்கரையில் (கபாங் என்பது ஒரு வகையான மரத்தின் பெயர்) நீருக்கடியில் ஆவித்துளைகள் வெளிப்படுகின்றன. மேலும் தீவின் காட்டுப்பகுதியில் எரிமலைக் கூம்பு காணப்படுகின்றது.

வே தீவைச் சூழ கிளா, ரூபியா, சியுலாகோ மற்றும் ரோண்டோ ஆகிய நான்கு தீவுகள் காணப்படுகின்றன. ரூபியா தீவு பவளப்பாறைகளை பார்வையிட ஏற்ற இடமாக அறியப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவிற்கு பயணம் செய்வது கடல் வழியாக மட்டுமே சாத்தியமாக இருந்த போதிலும் ஹஜ் யாத்திரை காலத்தில் இந்தோனேசிய முஸ்லீம்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட இடமாக ரூபியா பயன்படுத்தப்பட்டது.[5]

சனத்தொகை[தொகு]

வே தீவு ஆச்சே மாகாணத்தின் ஒரு பகுதியாகும். 1993 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி 24,700 மக்கள் வசிக்கின்றனர்.[6] சனத்தொகையில் பெரும்பான்மையானவர்கள் அச்செனிசுகள் மற்றும் மீதமுள்ளவர்கள் மினாங்க்க்பாவ், ஜாவானீஸ், படக் மற்றும் சீனர்கள் ஆவார்கள்.[7] தீவின் முதல் குடியேற்றம் எப்பொழுது நிகழ்ந்ததென்று தெரியவில்லை. அச்சே மாகாணத்தின் பகுதியாக இருப்பதால் ஷரியா சட்டம் பிரத்தியேகமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஜாவானீஸ், படக் மற்றும் சீனர்களில் சில கிறிஸ்தவ மக்களும், பௌத்த மக்களும் வாழ்கின்றனர். 2004 ஆம் ஆண்டு திசம்பர் 26 அன்று ஏற்பட்ட சுனாமியில் இந்தோனேசியாவில் மட்டும் குறைந்தது 130,000 மக்கள் பலியானர்கள்.[8] வே தீவில் இதன் விளைவு ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும் பலியான மக்களின் எண்ணிக்கை சரிவர கணக்கிடப்படவில்லை.[9]

பொருளாதாரம்[தொகு]

வே தீவின் பொருளாதாரத்தில் விவசாயம் ஆதிக்கம் செலுத்துகின்றது. கராம்பு மற்றும் தேங்காய் பிரதான விவசாயப் பொருட்களாகும்.[7] சிறிய அளவில் மீன்வளத்துறை செல்வாக்கு செலுத்துகின்றது. மீனவர்கள் வெடிப் பொருட்களையும், சயனைட் மீன் பிடித்தலையும்  அதிகளவில் பயன்படுத்துவதால் இந்தப்பகுதி 1982 ஆம் ஆண்டு முதல், இந்தோனேசிய அரசாங்கத்தால் வனவிலங்கு பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு பகுதியில் உள்நாட்டில் 34 சதுர கிலோமீற்றரும் (13 சதுர மைல்), கடற்பகுதியில் 26 சதுர கிலோமீற்றரும் (10 சதுர மைல்) உள்ளடங்கும்.[6]

சபாங் பன்னாட்டு படகுத் திரளணி[தொகு]

2011 ஆம் ஆண்டில் செப்டம்பர் 13 முதல் 25 வரை சபாங் பன்னாட்டு படகுத் திரளணி நடைபெற்றது. இதில் ஆத்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, செருமனி, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் ஆங்காங் நாட்டினர் பங்கு கொண்டார்கள்.[10]

சான்றுகள்[தொகு]

  1. "Pulau Weh". Global Volcanism Program. சிமித்சோனிய நிறுவனம். பார்க்கப்பட்ட நாள் 2006-11-16.
  2. 2.0 2.1 Mediatama, Grahanusa (2012-04-11). "Pesona surga nan indah di ujung barat Indonesia". kontan.co.id (in இந்தோனேஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-02.
  3. "Global Volcanism Program | Pulau Weh". volcano.si.edu. பார்க்கப்பட்ட நாள் 2019-11-02.
  4. ""Pulau Weh Volcano, Indonesia"". Archived from the original on 2006-08-20.
  5. ""Weh Island, a piece of land from heaven"". Archived from the original on 2007-09-03.
  6. 6.0 6.1 G.R., Gerald R.; Werner,T.B. (2002). "Coral Reef Fish Assessment in the 'Coral Triangle' of Southeastern Asia". Environmental Biology of Fishes. 65 (2): 209–214. doi:10.1023/A:1020093012502.
  7. 7.0 7.1 "The people of Weh Island". Archived from the original on 2006-11-28.
  8. "The Human Toll". www.tsunamispecialenvoy.org. பார்க்கப்பட்ட நாள் 2019-11-02. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  9. "Tsunami Relief News - Waves of Mercy Says Goodbye to Pulau Weh". web.archive.org. 2006-10-04. Archived from the original on 2006-10-04. பார்க்கப்பட்ட நாள் 2019-11-02.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  10. "Ministry to organize Sabang international regatta to attract tourist". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வே_தீவு&oldid=3572503" இலிருந்து மீள்விக்கப்பட்டது