வேளாளர் உட்பிரிவு சாதிகளின் பட்டியல்
வேளாளர் (வெள்ளாளர் மற்றும் காராளர் எனவும் அழைக்கப்படுகின்றனர்)[1][2] என்பவர்கள் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில், காணப்படும் இனக்குழுக்களாகும். இவர்கள் தமிழ்நாட்டின் ஆட்சி மற்றும் நில உரிமையாளர்களாக பதிவுச்சரித்திரத்தின் தொடக்கத்திலிருந்தே இருந்து வருகின்றனர். இவர்கள் வரலாற்று ரீதியாக இப்பகுதியின் விவசாய மற்றும் சமூக அமைப்பில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.[3][4][5][6]
பட்டங்கள்
[தொகு]வேளாளர் சமூகத்தினர் பயன்படுத்தும் பட்டங்களில் பிள்ளை, முதலியார், கவுண்டர் மற்றும் செட்டியார் ஆகியவை அடங்கும்.[7][a] இந்த பட்டங்கள் பிராந்திய, சமூக மற்றும் கலாச்சார காரணிகளின் அடிப்படையில் வேளாளர்களின் வெவ்வேறு உட்பிரிவுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை.[8][9][10]
பிள்ளை, முதலியார், கவுண்டர் மற்றும் செட்டியார் ஆகிய பட்டங்களை ஏற்றுக்கொண்ட அனைவரும் வேளாளர்கள் அல்லர். வேளாளர் கௌரவப் பட்டங்களை ஏற்றுக்கொள்வது விவசாயக் குழுக்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை; தொண்டை மண்டலத்தில், செங்குந்தர் நெசவாளர்கள் செங்குந்த-முதலி எனும் பட்டத்தை ஏற்றனர், இடையர் கால்நடை வளர்ப்பவர்கள் பிள்ளை என அடையாளப்படுத்திக் கொண்டனர், வன்னியர் குழுவினர் கவுண்டர் பட்டத்தை ஏற்றுக்கொண்டனர், மற்றும் பணக்கார பரவர் மீனவர்கள் செட்டி எனும் கௌரவப் பட்டத்தை ஏற்றனர்.[a]
இந்த நிகழ்வு சமஸ்கிருதமயமாக்கம் என அழைக்கப்படும் சமூக இயக்கத்தின் பரந்த செயல்முறையின் ஒரு பகுதியாகும். இது வேளாளர்களின் உயர்ந்த நில உரிமை மற்றும் தகுதி குறித்த பரவலான நம்பிக்கையை பிரதிபலித்தது. தமிழக விவசாய சமூகத்தில், வேளாளர் அடையாளம் பொருளாதார உரிமைகளை மட்டுமல்லாமல் சமூக தகுதிக்கு நியாயமான அங்கீகாரத்தையும் வழங்கியது.[11][b]
உட்பிரிவுகள்
[தொகு]வேளாளர் சமூகம் பாரம்பரியமாக நான்கு முதன்மை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது புவியியல் பிராந்தியங்கள் நாடு அல்லது மண்டலம் (நாடு) அடிப்படையிலும் சமயம் அடிப்படையிலும் அமைந்துள்ளது: தொண்டை நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு மற்றும் கொங்கு நாடு ஆகியவை.[12][13]
தொண்டைமண்டலம் பின்வரும் உட்பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது
- கொண்டைகட்டி வேளாளர்
- பூந்தமல்லி வேளாளர் (பூந்தமல்லி முதலியார் என்றும் அழைக்கப்படுகின்றனர்)
- தொண்டைமண்டல வேளாளர்
- துளுவ வேளாளர் (ஆற்காடு வேளாளர் அல்லது ஆற்காடு முதலியார் என்றும் அழைக்கப்படுகின்றனர்)
சோழமண்டலம் பின்வரும் உட்பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது
- ஆறுநாட்டு வேளாளர்
- சோழிய வேளாளர். இவர்கள் மேலும் மூன்று அல்லது நான்கு பிராந்தியப் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறார்கள்:
- கனக்கிளிநாட்டார்
- கொடிக்கால் வேளாளர்
- வெள்ளாஞ்செட்டி[14][15]
பாண்டியமண்டலம் பின்வரும் உட்பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது
- கார்காத்தார் வேளாளர் (கார்காத்தார் என்றும் அழைக்கப்படுகின்றனர்)
- நன்குடி வேளாளர் (கோட்டை வேளாளர் அல்லது கோட்டைப் பிள்ளைமார் என்றும் அழைக்கப்படுகின்றனர்)
- கொடிக்கால் வேளாளர் இவர்கள் பாண்டியமண்டலத்திலும் காணப்படுகின்றனர்
- பாண்டிய வேளாளர் இவர்கள் திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் பரவலாக வசித்து வருகின்றனர். பிள்ளை பட்டம் பயன்படுத்துகின்றனர்.
- நாஞ்சில் நாட்டு வேளாளர் (நஞ்சில் முதலி என்றும் அழைக்கப்படுகின்றனர்). நாஞ்சில் நாடு என்பது இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திற்கான ஒரு வரலாற்றுப் பெயராகும்.
கொங்குமண்டலம் பின்வரும் உட்பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது
- கொங்கு வேளாளர் இவர்கள் "கூட்டம்" என்று அழைக்கப்படும் பல குலங்களாக (சின்னங்களைக் கொண்ட) பிரிக்கப்பட்டுள்ளனர்.[16]
- சேரகுல வேளாளர் (பிள்ளை பட்டம் பயன்படுத்துகின்றனர்)
- பால வேளாளர் (கவுண்டர் பட்டம் பயன்படுத்தும் வேளாளர் பிரிவு. காணாடு கோணாடு போரில் கார்காத்த வேளாளர்களிடம் தோல்வியுற்றதும் இவர்கள் கொங்கு பகுதிக்கு குடியேறினர்)
சமயம் சார்ந்து கீழ்க்கண்ட உட்பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
- சைவ வெள்ளாளர் (தக்ஷிணத்து சைவ வேளாளர்கள் பிள்ளை பட்டம் பயன்படுத்துகின்றனர்)
- ஜைன வெள்ளாளர் (சமண மதத்தை பின்பற்றும் வேளாளர் பிரிவு. )
இலங்கை வேளாளர் என்பவர்கள் இலங்கை நாட்டின் யாழ்ப்பாணத் தீபகற்பம் மற்றும் அருகிலுள்ள வன்னிப் பகுதிகளில் காணப்படும் வேளாளர்களாகும்.
வேளாளர் பெயரைத் தழுவல்
[தொகு]சமீபத்திய காலங்களில், நில உரிமை மற்றும் உயர் சமூக தகுதியுடன் தொடர்புடையதால் பல்வேறு சமூகங்கள் "வேளாளர்" என்ற பெயரைத் தழுவியுள்ளன.[b][c] எடுத்துக்காட்டாக, பள்ளர் சமூகத்தினர் (பட்டியல் சாதியினர் என வகைப்படுத்தப்பட்டவர்கள்) "தேவேந்திரகுல வேளாளர்" என்ற பட்டத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். மேலும் மேளக்காரர்கள், தற்போது உயர் சமூக தகுதிக்காக இசை வேளாளர் என்ற பெயரைப் பயன்படுத்துகின்றனர். எனினும் இந்த சமூகங்கள் பாரம்பரிய வேளாளர் உட்பிரிவுகளில் அடங்குவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.[18][19][20]
குறிப்புகள்
[தொகு]- 1 2 வரலாற்று ரீதியாக, பதினெட்டாம் நூற்றாண்டில் செட்டி என்பது வணிக இனக்குழுக்களுடன் தொடர்புடையதாக இருந்தது. மேலும் முந்தைய நூற்றாண்டுகளில் இது வேளாளர்களின் (வேளாஞ்செட்டி) ஒரு துணைப்பிரிவாக இருந்தது.[8]
- 1 2 சூசன் பேலியின் கூற்றுப்படி, பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் கூட, "வேளாளர் சேர்ப்பு மற்ற தென்னிந்திய இனக்குழுக்களைப் போலவே தெளிவற்றதும் உறுதியற்றதுமாக இருந்தது"; வேளாளர் அடையாளம் ஒரு கீர்த்தி மூலமாக இருந்தது மற்றும் "தங்களுக்கு வேளாளர் தகுதியைக் கோரும் எண்ணற்ற குழுக்கள் இருந்தன."
- ↑ "வேளாளர்" என்பது தமிழ்நாட்டில் உயர் நிலை பெற்ற பல பார்ப்பணரல்லாத இனக்குழுக்களுக்கான பொதுவான சொல்லாகும்[17]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ M. D. Raghavan (1971). Tamil Culture in Ceylon: A General Introduction. Kalai Nilayam. p. 136.
- ↑ R. C. Majumdar, ed. (1974). The History and Culture of the Indian People: The Mughal Empire. Bharatiya Vidya Bhavan. p. 1609. Retrieved 6 February 2025.
- ↑ Iravatham Mahadevan. "Meluhha and Agastya: Alpha and Omega of the Indus Script" (PDF). p. 16. Archived from the original (PDF) on 7 June 2011. Retrieved 2011-06-07.
The Ventar-Velir-Velalar groups constituted the ruling and land-owning classes in the Tamil country since the beginning of recorded history
- ↑ André Wink (2002). Al-Hind: Early medieval India and the expansion of Islam, 7th-11th centuries. Brill Academic Publishers. p. 321. ISBN 9004092498.
Not only were the Vellalas the landowning communities of South India,...
- ↑ John Wilson (1899). Indian Caste. Thacker, Spink & Co. p. 1608. Retrieved 6 February 2025 – via Internet Archive.
- ↑ Gough, Kathleen (2008). Rural Society in Southeast India (in ஆங்கிலம்). Cambridge University Press. p. 29. ISBN 9780521040198.
- ↑ Castes And Tribes Of Southern India Vol.7 by Thurston, Edgar.(1909). p. [367].
- 1 2 Meanings of Agriculture: Essays in South Asian History and Economics. Oxford University Press. 1991. p. 348.
- ↑ Robb, Peter (1996). *Meanings of Agriculture: Essays in South Asian History and Economics*. Oxford University Press, p. 348.
- ↑ John Wilson (1899). Indian Caste. Thacker, Spink & Co. p. 1608.
- ↑ The Meanings of Agriculture: Essays in South Asian History and Economics. Oxford University Press. 1997. p. 349.
- ↑ நாட்டுப்புறப் பாடல்கள். Patipputtur̲ai, Maturai Kāmarācar Palkalaikkal̲akam. 1982.
- ↑ Castes And Tribes Of Southern India Vol.7 by Thurston, Edgar.(1909). p. [374].
- ↑ Castes And Tribes Of Southern India Vol.7 by Thurston, Edgar.(1909). p. [375].
- ↑ André Béteille (2012). Caste, Class and Power: Changing Patterns of Stratification in a Tanjore Village. Oxford University Press. p. 86.
- ↑ S. Gunasekaran (2017), ப. 41
- ↑ Peterson, I.V. (2014). Poems to Siva: The Hymns of the Tamil Saints. Princeton Library of Asian Translations. Princeton University Press. p. 355. ISBN 978-1-4008-6006-7. Retrieved 2023-03-29.
- ↑ Wyatt, A. (2009). Party System Change in South India: Political Entrepreneurs, Patterns and Processes. Routledge Advances in South Asian Studies. Taylor & Francis. p. 140. ISBN 978-1-135-18202-1. Retrieved 2023-03-28.
- ↑ Bannerji, Himani; Mojab, Shahrzad; Whitehead, Judith (2001). Of Property and Propriety: The Role of Gender and Class in Imperialism and Nationalism (in ஆங்கிலம்). University of Toronto Press. p. 162. ISBN 9780802081926.
- ↑ Soneji, Davesh (2012-01-15). Unfinished Gestures: Devadasis, Memory, and Modernity in South India (in ஆங்கிலம்). University of Chicago Press. pp. 143–144. ISBN 978-0-226-76809-0.