வேளாண் ஆராய்ச்சி நிலையம், பரமக்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேளாண் ஆராய்ச்சி நிலையம், பரமக்குடி என்பது தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு வேளாண் ஆராய்ச்சி நிலையமாகும்.

இந்த ஆராய்ச்சி நிலையமானது மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், “வைகை” ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது,. தமிழாநாடு வேளாண் துறையின் கீழ், 1952 ஆம் ஆண்டில் இந்நிலையம் “ஆராய்ச்சி நிலையமாக” நிறுவப்பட்டது. பின்பு 1952-1958 ஆம் ஆண்டு இந்நிலையம் “நெல் ஆராய்ச்சி துணை மையம்” ஆக செயல்பட்டது. பிறகு 1958-1978 ஆம் ஆண்டுகளில் “மாநில விதைப்பண்ணை”யாக மாற்றப்பட்டு, 1978-1981 ஆம் ஆண்டில் “பலபயிர் ஆராய்ச்சி துணை நிலையமாக” பெயர் மாற்றப்பட்டு செயல்பட்டது. 1981 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் “வேளாண் ஆராய்ச்சி நிலையமாக” செயல்பட்டு வருகிறது.

தோக்கம்[தொகு]

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் நிலவும் வறண்ட மற்றும் அரை வறண்ட நிலைகளுக்கு ஏற்ற அதிக மகசூல் ஈட்டும் மிகவும் குறுகிய கால மற்றும் வறட்சியைத் தாங்கும் ஆற்றல் கொண்ட இரகங்களை உற்பத்தி செய்வது, மானாவாரி நெல்லுக்கு ஏற்ற மேம்பட்ட உழவியல் தொழில் நுட்பங்களை உருவாக்குவது, மிகவும் மோசமான வானிலை சூழ்நிலைகளில் நெற்பயிருக்கு மாறாக அதிகலாபம் தரும் மற்ற பயிர்களை கண்டுபிடித்தல்.

தற்போதைய ஆராய்ச்சி செயல்முறைகள்

அதிக மகசூல் ஈட்டும் மற்றும் வறட்சியைத் தாங்கும் திறன் கொண்ட நெல் வகைகளை இனப்பெருக்கம் செய்தல். வறண்ட மற்றும் பகுதி வறண்ட நிலைகளுக்கு ஏற்ற நெல்லுக்கான களை மற்றும் அழுத்த மேலாண்மை முறைகளை கண்டுபிடித்தல் வறண்ட மற்றும் பகுதி வறண்ட நிலைகளுக்கு ஏற்ற நெல்லுக்கான உகந்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை கண்டுபிடிக்கின்றன.[1]

வெளியிட்டுள்ள இரகங்கள்
  • பிகேஎம்-1
  • பிகேஎம் 2
  • பிகேஎம் 3

மேற்கோள்கள்[தொகு]