வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (சுருக்கமாக:அட்மா திட்டம்) (Agricultural Technology Management Agency) (சுருக்கமாக: ATMA), இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் நிதியுதவியால் 2005-06 ஆம் ஆண்டு முதல் செயல்படும் திட்டமாகும். இதன் நோக்கம் வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறைகளில் உள்ள தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பது ஆகும். மேலும், அட்மா திட்டத்தின் வாயிலாக இதர துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம். அட்மா திட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பட்டுவளர்ச்சித்துறை, மீன் வளர்ப்புத்துறை, வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகிய துறைகள் ஒன்றிணைந்து அவ்வப்போது விவசாயிகளுக்கு பயிற்சி, கண்டுனர்தல் சுற்றுலா, செயல்விளக்கங்கள், பண்ணைப்பள்ளி மற்றும் வெளிமாநில சுற்றுலாக்களின் மூலம் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் கற்றுதரப்படுகிறது. இத்திட்டத்தில் அனைத்து வகை விவசாயிகளும் பயன்பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.[1] இத்திட்டம் அந்தந்த மாநில அரசுகளின் வேளாண்மைத் துறையால் நிர்வகிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இத்திட்டம் 2012ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
முகமையின் நோக்கம்
[தொகு]வேளாண்மை ஆராய்ச்சி - விரிவாக்கம் - விவசாயிகளின் இணைப்புகளை வலுப்படுத்துதல்: மாவட்டம், ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சி மட்டத்தில் குழுக்களை அமைத்தல். அரசு சாரா நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுடன் புதிய கூட்டாண்மைகளை உருவாக்குதல்.[2]
முக்கிய அம்சங்கள்
[தொகு]மாவட்ட அளவில் விவசாயி ஆலோசனைக் குழுவை உருவாக்குதல். விவசாயிகளை ஒழுங்கமைக்க அரசு சாரா நிறுவனங்களைப் பயன்படுத்துதல். தொழில்நுட்ப பரிமாற்றத்தில் தனியார் துறை ஈடுபாட்டை ஊக்குவித்தல். மாவட்டத்தில் ஆராய்ச்சி அலகுகள் மூலம் சரிபார்ப்பு மற்றும் சுத்திகரிப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்தல்.
- ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சி மட்டத்தில் திட்டமிடல் நடைமுறை:
வேளாண்மைத் தகவல் தொழில்நுட்பத்தின் அதிகரித்த பயன்பாட்டை ஊக்குவித்தல். இம்முகமையின் ஊழியர்களின் திறனை அதிகரிக்க பயிற்சி வழங்குதல். புதிய பொது-தனியார் கூட்டாண்மைகளை உருவாக்குதல். விவசாயிகளின் ஆர்வக் குழுவை உருவாக்குதல் மற்றும் வலுப்படுத்துதல்
நிதி
[தொகு]இந்தத் திட்டம் இந்திய அரசால் ஆதரிக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு இந்திய அரசு 60% நிதியும், மாநில அரசுகள் 40% நிதியும் வழங்குகிறது. தமிழ்நாட்டில் இத்திட்டம் 2012ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
திட்டப் பணியாளர்கள்
[தொகு]வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பட்டயப் படிப்பு முடித்தவர்கள், ஊராட்சி ஒன்றியப் பகுதியில் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் எனும் பணியிடத்தில் பணிபுரிபவர்களுக்கு ரூபாய் 15 ஆயிரம் தொகுப்பூதியம் மற்றும் இளநிலை வேளாண்மை பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு, தொழில்நுட்ப மேலாளர்கள் எனும் பணியிடத்தில் மாதம் ரூபாய் 25 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. [3]
வெளி இணைப்புகள்
[தொகு]- Schemes for Welfare of Farmers
- ATMA GUIDELINES, 2018 under Krishonnati Yojana GUIDELINES FOR SUPPORT TO STATE EXTENSION PROGRAMMES FOREXTENSION REFORMS (ATMA) SCHEME, 2018