வேளாண்மைக் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வேளாண்மைக் கொள்கை (Agricultural policy) உள்நாட்டு வேளாண்மையைப் பற்றியும் அயல்நாட்டு வேளாண்மைப் பொருள்களை இறக்குமதி செய்தல் பற்றியுமான சட்டங்களின் தொகுதியாக விவரிக்கப்படுகிறது.அரசுகள் உள்நாட்டு வேளாண் விளைபொருள் சந்தையில் குறிப்பிட்ட விளைவுகளை உருவாக்க கொள்கைகளைக் கடைபிடிக்கின்றன. எனவே, வேளாண் கொள்கைகள் பயிரிடல், கால்நடை, கானியல், வேளாண் விளைபொருள்களைக் கையாளலும் சந்தைப்படுத்தலும் சார்ந்த செயல்பாடுகளை மேம்படுத்த பின்பற்றும் வழிமுறைகளாகும் என 2017 இல் அக்ரோவே முன்வைக்கிறார்.[1] வேளாண் கொள்கைகளுக்கு குறிப்பிட்ட முன் இலக்குகளும் நோக்கங்களும் உண்டு. இவை தனி ஒருவராலோ அரசாலோ குறிப்பிட்ட விளைவுகளை அடைய உ ருவாக்கும் வழிமுறையாகும். இது தனியரின் நலத்துக்காகவும் சமூக நலத்துக்காகவும் ஒட்டுமொத்த நாட்டுப் பொருளியல் முன்னேற்றத்துக்காகவும் அமையலாம்.[1] வேளாண் கொள்கைகள் வேளாண்மை விளச்சல் சார்ந்த முதன்மை, துணை, மூன்றாம்நிலை செயல்முறைகளைக் கருத்தில் கொள்கின்றன.[1] இதனால் ஏற்படும் விளைவுகள், நிலையான விலை, உறுதிப்படுத்திய பொருள் வழங்கல், விளைபொருள் தரம், விளைபொருள் தேர்வு, சரியான நிலப் பயன்பாடு அல்லது தொடர்ந்த வேலைக்கான உறுதிப்பாடு போன்றவை அமையலாம்.

வேளாண்மைக் கொளகை சார்ந்த சிக்கல்கள்[தொகு]

வேளாண் கொள்கையின் ஆழமான சிக்கல்களின் வகைகளை அறிய உதவும் ஆத்திரேலிய வேளாண்வளப் பொருளியல் வாரியத்தின் " ஆத்திரேலிய, நியூசிலாந்து வேளாண் பொருளியல்" எனும் கட்டுரையில் தொழிலகமுறை வேளாண்மையில் தாம் சந்திக்கும் முதன்மையான அறைகூவல்களாகவும் சிக்கல்களாகவும் பின்வரும் காரணிகளைக் கூறுகிறது:

 • சந்தைப்படுத்தல் அறைகூவல்களும் நுகர்வோர் சுவை வேறுபாடுகளும்
 • பன்னாட்டு தொழில்வணிகச் சூழல்
 • உயிரியல் காப்புறுதி
 • அகக் கட்டமைப்பு
 • மேலாண்மைத் திறமைகளும் தொழிலாளர் கிடைப்பும்
 • ஒருங்கிணைப்பு
 • நீர்வளங்கள்
 • வளங்களை அணுகும் சிக்கல்கள்

சந்தைப்படுத்தல் அறைகூவல்களும் நுகர்வோர் சுவை வேறுபாடுகளும்[தொகு]

உலகளாவிய சந்தைப்படுத்தல் அறைகூவல்கள் பல்வேறு காரணிகளால் சிக்கலடைந்துள்ளன. பன்முகப்பட்ட நுகர்வோர் நயப்பு வேறுபாடுகளும் சந்தைப்படுத்தலில் தம் விளைவைக் கணிசமாகச் செலுத்துகின்றன.

பன்னாட்டு தொழில்வணிகச் சூழல்[தொகு]

பன்னாட்டுத் தொழில்வணிக்கச் சூழலை உலகச் சந்தை நிலைமைகள், தொழில்வணிகத்துக்கான தடையரண்கள், தொற்றுத் தனிப்படுத்தலும் தொழிநுட்பமும் சார்ந்த அரண்கள், உலகளாவிய போட்டியில் அமையும் போட்டித்திறமும் சந்தைசார் நல்லெண்ணமும், உயிரியல் காப்புறுதிக்கான மேலாண்மை, இறக்குமதிகளைத் தாக்கும் சிக்கல்கள், ஏற்றுமதி சார்ந்த நோய்ப்பரப்புநிலை ஆகியவை மட்டுபடுத்துகின்றன.

உயிரியல் காப்புறுதி[தொகு]

உயிரியல் காப்புறுதி யை தீங்குயிர்கொல்லிகளும் மாட்டு கடற்பஞ்சு மூளை நோய் அல்லது பித்துறு மாட்டுநோய், பரவைக் காய்ச்சல், கால்-வாய்த் தொற்றுநோய், கிச்சிலி இலைப்பிளவு நோய், கரும்புப் புழுதி நோய் போன்ற நோய்களும் கட்டுபடுத்துகின்றன.

அகக் கட்டமைப்பு[தொகு]

போக்குவரத்து, துறைமுகங்கள், தொலைத்தொடர்பு ஏந்துகள், ஆற்றல்வளம், பாசன ஏற்பாடுகள் போன்ற அகக் கட்டமைப்புகள் வேளான் தொழில் வணிகத்தைக் கட்டுபடுத்துகின்றன.

மேலாண்மைத் திறமைகளும் தொழிலாளர் கிடைப்பும்[தொகு]

வேளாண் தொழில் திட்டமிடலிலும் பெருகிவரும் சந்தை விழிப்புணர்வும் கூடுதலான தேவைகளை உருவாக்கியிருப்பதாலும், கணினி, புவியிருப்பு காட்டும் அமைப்புகள், சிறந்த உழவியல் மேலாண்மை ஆகிய புதிய தொழில்நுட்பங்களைக் கையாளவேண்டியிருப்பதாலும் தர்கால பண்ணை மேலாளர்கள் மேலும் திறம்பட பணியாற்ற வேண்டும். எடுத்துகட்டுகளாக, திறமையான தொழிலாளர்கலுக்கான பயிற்சி, தொழிலக வேளை அறுபடாமல் நிகழ, வேலைசார்ந்த உச்சத் தேவைகளைக் கருதி, அதர்கேற்ற தொழிலாளர் வழங்கலைப் பெறும் அமைப்புகளை உருவாக்கல், புதிய தொலைத்தொடர்புக் கருவிகளைப் பயன்கொள்ளல், சந்தை வாய்ப்புகளை ஆய்வு செய்தல், நுகர்வோர் தேவைகளை முன்கணித்தல், நிதி மேலாண்மை உட்பட்ட தொழில்வணிக மேலாண்மையைத் திட்டமிடல், புதிய அண்மைப் பண்ணை நுட்பங்களைஆய்தல்லிடர் மேலாண்மைத் திறமைகள் ஆகியவற்றைக் கூறலாம்.

ஒருங்கிணைப்பு[தொகு]

இன்று வேளாண்மை ஆராய்ச்சியிலும் புத்துருவாக்கத்திலும் மிகவும் தொடர்பொருத்தமான தேசிய செயல்நெறிமுறை நிகழ்ச்சிநிரல் தேவைப்படுகிறது; அரசின் ஆராய்ச்சி முதலீடுகள் வேளாண் வேலை சார்ந்த வளர்ச்சி நிகழ்ச்சிநிரலை உருவாக்கும் தனியார்த்துறை ஆராய்ச்சியாளரோடு முனைப்பாக ஈடுபட்டு செயலாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது; தொழில்துறைகளுக்கிடையிலான ஆராய்ச்சிச் செயல்பாடுகளில் கூடுதல் ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது; எதிர்காலத்தில் மனிதவள முதலீடு செய்யும்போது திறமை வாய்ந்த ஆராய்ச்சியாளர் குழுவுக்கும் சேர்ந்து கூடுதல் முதலீடு செய்யவேண்டும்.

தொழில்நுட்பம்[தொகு]

தொழில்நுட்ப ஆராய்ச்சி, தகவமைப்பு, விளைச்சல்திறம், மரபியலாகத் திருத்திய பயிர்கள், முதலீடுகள் ஆகிய வளர்தொழில்நுட்பங்கள் வேளாண் கொள்கையில் பலசிக்கல்களை உருவாக்குகின்றன.

நீர்வளங்கள்[தொகு]

அணுகுரிமை, நீர்வணிகம், சுற்றுச்சூழல் நலங்களுக்கான நீர் ஒதுக்கீடு, நுகர்வுப் பயன்பாட்டுக்கான நீரை சுற்றுச்சூழலுக்கு மறு ஒதுக்கீடு செய்தல், நீர் வாயிலைத் தேடி ஒதுக்கிடு செய்யும் நீர்வளக் கணக்குகாட்டல் போன்றவை நீர்வளங்களை வேளாண்மைக்குப் பயன்படுத்தலில் சிக்கலை உருவாக்குகின்றன.

வளங்களை அணுகும் சிக்கல்கள்[தொகு]

கள இயற்கை வள மேலாண்மை, உயிரியல் பன்மைக் காப்பும் மேம்படுத்தலும், வேளாண் விளைச்சல்சார் வளங்களின் நீடிப்புதிறமும் நில உரிமையாளர் பொறுப்புகளும் வேளாண் வளங்களை அணுகும் சிக்கல்களை உருவாக்குகின்றன.[2]

வறுமை ஒழிப்பு[தொகு]

உலகளாவிய நிலையில் ஊரகப் பகுதிகளில் வாழும் 75% ஏழை எளிய மக்களுக்கு உணவளிக்கும் மிகப் பெரிய தொழிலாக வேளாண்மையே விளங்குகிறது. எனவே, வளரும் நாடுளில் வேளாண் வளர்ச்சியை பேணுதலே வேளான்கொள்கையின்முதன்மையான குறிக்கோளாகும். மேலும், அண்மையில் கடல்கடந்தநிலை வளர்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள இயற்கைவளக் கண்ணோட்ட ஆய்வுக் கட்டுரை ஏழை மக்கள் வேளான்வேலையைச் செய்யும் வாய்ப்புகளை மேம்படுத்த, ஊரகப் பகுதிகளில் நல்லதொரு அகக் கட்டமைப்பும், கல்வியும் விளைவுமிக்க தகவல் பரிமாற்றமும் கட்டாயத் தேவைகளாகும் எனக் கூறுகிறது.[3]

உயிரியல் காப்புறுதி[தொகு]

தொழிலகமுறை வேளாண்மை சந்திக்கும் உயிரியல் காப்புறுதி அக்கறைகளைப் பின்வருமாறு விளக்கலாம்.

 • விலங்குகளுக்கு ஊசிபோடுவதால் ஏற்படும் H5N1 நச்சுயிரியின் பீடிப்பில் இருந்து மாந்தரையும் கோ ழிகளையும் காத்தல்
 • செலவைக் குறைக்க தனித்தனியாக மாடுகளுக்குத் தீவனம் தருவதால் உருவாகும் மாட்டு கடற்பஞ்சு மூளைநோய்த் தாக்கத்தில் இருந்து மாந்தரையும் மாடுகளையும் காத்தல்
 • உலக முழுவதும் வேகமாகப் பரவிவரும் கால்-வாய்த் தொற்று, கிச்சிலி வெடிப்புநோய் ஆகியவற்றைக் கட்டுபடுத்த இயலாமையால் தொழிலக ஈட்டத்துக்கு உருவாகிவரும் அச்சுறுத்தல்

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 Akarowhe (2018). Retooling Agricultural Policies and Programmes for Sustainable Development in Nigeria Current Investigations in Agriculture and Current Research 2(1):165-168 doi: 10.32474/CIACR.2018.02.000129 https://lupinepublishers.com/agriculture-journal/pdf/CIACR.MS.ID.000129.pdf.
 2. {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் archiveurl = , archivedate = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."Agricultural Economies of Australia and New Zealand - drivers of change". Australian Bureau of Agricultural and Resource Economics (2006). மூல முகவரியிலிருந்து September 30, 2007 அன்று பரணிடப்பட்டது.
 3. "Making agriculture work for the poor" (PDF). Overseas Development Institute (2007). மூல முகவரியிலிருந்து 2 டிசம்பர் 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 11 November 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேளாண்மைக்_கொள்கை&oldid=3289710" இருந்து மீள்விக்கப்பட்டது