வேளாங்கண்ணி இரஜதகிரீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேளாங்கண்ணி இரஜதகிரீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் நாகப்பட்டினம்-வேதாரண்யம் சாலையில் நாகப்பட்டினத்திற்குத் தெற்கே அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி[தொகு]

பனி சூழந்த நிலையில் சூரிய வெளிச்சத்தில் வெள்ளியைப் போலப் பிரகாசிப்பதால் கயிலாயத்தை வெள்ளியங்கிரி என்றழைப்பர். வெள்ளியங்கிரிநாதரான சிவபெருமான் இங்கு இரஜதகிரீசுவரர் என்றழைக்கப்படுகிறார். இறைவி வேல்நெடுங்கண்ணி ஆவார்.[1]

சிறப்பு[தொகு]

சிக்கல் கோயிலில் முருகப்பெருமானுக்கு சக்தி வேலைத் தந்து அருளிய பெருமை வேல்நெடுங்கண்ணிக்குரியதாகும். இக்கோயிலில் ஆடி மாதம் தீமிதித் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014

வெளியிணைப்புகள்[தொகு]