வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| வேளச்சேரி | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 26 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சென்னை |
| மக்களவைத் தொகுதி | தென் சென்னை |
| நிறுவப்பட்டது | 2008 |
| மொத்த வாக்காளர்கள் | 2,17,208 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | த.வெ.க. |
| கூட்டணி | தவெக+ |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2026 |
வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி (Velachery Assembly constituency), சென்னை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். தொகுதி மறுசீரமைப்பில், வேளச்சேரி தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. இதன் தொகுதி எண் 26. இது, இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கும் பகுதிகள்
[தொகு]சென்னை மாநகராட்சியின் வார்டு எண் 151 முதல் 155 வரையுள்ள பகுதிகள்[1].
வாக்குச் சாவடி எண் 92-க்கு மறு தேர்தல்
[தொகு]2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது, இத்தொகுதியின் வாக்குச் சாவடி எண் 92-க்கான தேர்தல் முடிந்த பிறகு, வாக்குச் சாவடி தேர்தல் அலுவலர்கள் தன்னிச்சையாக வாக்களிக்கும் இயந்திரங்களை இருசக்கர வண்டிகளில் ஏற்றிச் சென்றதால் ஏற்பட்ட பதட்டத்தை அடுத்து, இந்த வாக்குச் சாவடிக்கு மட்டும் 17 ஏப்ரல் 2021 அன்று மறு தேர்தல் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.[2]
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 2011 | எம். கே. அசோக் | அதிமுக | 82,146 | 53.91 | ஜெயராமன் | பாமக | 50,425 | 33.10 |
| 2016 | வாகை சந்திரசேகர் | திமுக | 70,139 | 40.95 | நீலாங்கரை எம். சி. முனுசாமி | அதிமுக | 61,267 | 35.77 |
| 2021[3] | ஜே. எம். எச். அசன் மவுலானா | இ.தே.காங்கிரசு | 68,493 | 38.76 | எம். கே. அசோக் | அதிமுக | 64,141 | 36.30 |
| 2026 | ஆர். குமார் | தவெக | 80,430 | 43.52 | எம். கே. அசோக் | அதிமுக | 47,125 | 25.50 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2026
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| த.வெ.க. | ஆர். குமார் | 80,430 | 43.52 | New | |
| அ.இ.அ.தி.மு.க. | எம். கே. அசோக் | 47,125 | 25.50 | ▼11.16 | |
| காங்கிரசு | ஜே. எம். எச். அசன் மவுலானா | 45,928 | 24.85 | ▼14.30 | |
| நாதக | கீர்த்தனா | 7,697 | 4.16 | ▼3.94 | |
| நோட்டா | நோட்டா | 1,336 | 0.72 | ▼0.28 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 33,305 | 18.02 | |||
| பதிவான வாக்குகள் | 1,84,815 | 85.09 | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,17,208 | ▼97,329 | |||
| காங்கிரசு கட்சியிடமிருந்து த.வெ.க. பெற்றது | மாற்றம் | ||||
2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | ஜே. எம். எச். அசன் மவுலானா | 68,493 | 39.15 | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | எம். கே. அசோக் | 64,141 | 36.66 | +1.75 | |
| மநீம | சந்தோசு பாபு | 23,072 | 13.19 | புதியவர் | |
| நாதக | எம். கீர்த்தனா | 14,171 | 8.10 | +5.81 | |
| அ.ம.மு.க. | எம். சந்திரபோசு | 1,977 | 1.13 | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 1,742 | 1.00 | -1.41 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,352 | 2.49 | -2.57 | ||
| பதிவான வாக்குகள் | 174,972 | 55.63 | -2.71 | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 70 | 0.04 | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 314,537 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -0.82 | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | வாகை சந்திரசேகர் | 70,139 | 39.96 | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | சி. முனுசாமி | 61,267 | 34.91 | -19.01 | |
| பா.ஜ.க | பி. சிறீதரன் | 14,472 | 8.25 | +3.62 | |
| தேமுதிக | வி. என். இராஜன் | 9,654 | 5.50 | புதியவர் | |
| பாமக | வினோபா பூபதி | 6,809 | 3.88 | -29.22 | |
| நோட்டா | நோட்டா | 4,225 | 2.41 | புதியவர் | |
| நாதக | என். சந்திரசேகரன் | 4,011 | 2.29 | புதியவர் | |
| சுயேச்சை | இராஜா கிருஷ்ணமூர்த்தி | 2,477 | 1.41 | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 8,872 | 5.05 | -15.76 | ||
| பதிவான வாக்குகள் | 175,522 | 58.33 | -8.71 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 300,891 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -13.95 | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | எம். கே. அசோக் | 82,145 | 53.91 | புதியவர் | |
| பாமக | எம். ஜெயராமன் | 50,425 | 33.10 | புதியவர் | |
| சுயேச்சை | இ. சரத்பாபு | 7,472 | 4.90 | புதியவர் | |
| பா.ஜ.க | தமிழிசை சௌந்தரராஜன் | 7,048 | 4.63 | புதியவர் | |
| லோசக (இந்தியா) | செந்தில் குமார் ஆறுமுகம் | 1,225 | 0.80 | புதியவர் | |
| இஜக | கே. என். சேசாத்ரி | 1,036 | 0.68 | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 31,720 | 20.82 | |||
| பதிவான வாக்குகள் | 152,364 | 67.05 | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 227,249 | ||||
| அ.இ.அ.தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-01-08.
- ↑ தமிழ்நாடு தேர்தல் 2021: வேளச்சேரி தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் மறுதேர்தலுக்கு உத்தரவு
- ↑ வேளச்சேரி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ "Tamil Nadu Legislative Assembly election Result 2026 - Velachery". Election Commission of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 5 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260605142746/https://results.eci.gov.in/ResultAcGenMay2026/candidateswise-S2226.htm.
- ↑ "Velachery Constituency Election Results 2016 - 2026" (in en). The Times of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 5 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260605142748/https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/tamil-nadu/constituency-show/velachery.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.