வேலை (திரைப்படம்)
Appearance
வேலை | |
---|---|
இயக்கம் | ஜே. சுரேஷ் |
தயாரிப்பு | ஜே. வாசுதேவன் |
கதை | சுரேஷ் பாலகுமாரன் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | விக்னேஷ் இந்திரஜா நாசர் |
ஒளிப்பதிவு | சி விஜயஸ்ரீ |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | ஜே. வி. பிலிம்ஸ் |
விநியோகம் | தாரா கிரியேசன்ஸ் |
வெளியீடு | 26 பெர்ப்ரவரி 1998 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வேலை (Velai) என்பது 1998 ஆண்டைய இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். ஜே. சுரேஷ் இயக்கி இப்படத்தை பாலகுமாரனால் எழுதியிருந்தார். படத்தில் விக்னேஷ், இந்திரஜா, நாசர் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்தனர். ஜே. வாசுதேவன் தயாரித்த இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார். படமானது 1998 பிப்ரவரி 26 இல் வெளியானது.[1]
நடிகர்கள்
[தொகு]- விக்னேஷ் கணேசாக
- இந்திரஜா
- நாசர்
- ஹேம்நாத்
- லதீப்
- வடிவுக்கரசி
- பூலு ஆனந்த்
- சார்லி
- சாருஹாசன்
- ராகவி
- சொக்கலிங்க பாகவதர்
- மேஜர் சுந்தரராஜன்
- பொன்வண்ணன்
- சந்தான பாரதி
- தலைவாசல் விஜய்
இசை
[தொகு]யுவன் சங்கர் ராஜா தனது முதல் படமான அரவிந்தனுக்குப் பிறகு இரண்டாவதாக இப்படத்திற்கு இசை அமைத்தார். இதில் 5 பாடல்கள் இருந்தன. அறிவுமதி, பழனி பாரதி, ரவி பாரதி, ஆர். வி. உதயகுமார் ஆகியோர் பாடல் வரிகளை எழுதினர். தமிழ் நடிகர் விஜய், பிரேம்ஜி அமரனுடன் இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளார். அவர் இப்படத்தில் நடிக்கவில்லை என்றாலும் விக்னேசுக்கு பின்னணி குரலை வழங்கினார். இந்தத் திரைப்படத்தில் நடித்த நாசர் பின்னணிப் பாடகராக அறிமுகப்படுத்தப்பட்டார்.[2]
எண் | பாடல் | பாடகர் (கள்) | காலம் | பாடல் வரிகள் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
1 | 'அச்சுதா அச்சுதா' | யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன் | 4:40 | பழனி பாரதி | |
2 | 'ஓய்வெடு நிலவே' | ஹரிஹரன், பவதாரிணி | 4:47 | ஆர். வி. உதயகுமார் | |
3 | 'கன்னிப் பொண்ணு' | பாப் ஷாலினி | 4:23 | ரவி பாரதி | |
4 | 'காலத்துக்கேத்த ஒரு கானா' | விஜய், நாசர், பிரேம்ஜி அமரன் | 5:08 | ||
5 | 'குன்னூரு பூச்சாடி' | உதித் நாராயண், சுஜாதா மோகன் | 4:38 | அறிவுமதி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Filmography of Velai". cinesouth.com. Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2009-04-18.
- ↑ "Velai: Music Review Page". indolink.com. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-07-20.
வெளியிணைப்புகள்
[தொகு]- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் வேலை (திரைப்படம்)
- வேலைவாய்ப்பு பரிமாற்றம் ஆன்லைன் பதிவு பரணிடப்பட்டது 2019-08-23 at the வந்தவழி இயந்திரம்
- Velai பரணிடப்பட்டது 2012-02-14 at the வந்தவழி இயந்திரம் CineSouth மணிக்கு
- ராகத்தில் வேலாய் பாடல்கள்