வேலை நிலையம்
Jump to navigation
Jump to search
பணிநிலையம், தொழில்நுட்ப அல்லது அறிவியல் பயன்பாடுகளுக்கு வடிவமைக்கப்பட்ட சிறப்புக் கணினி ஆகும். ஒரு நபர் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இக்கணினி, பொதுவாக ஒரு பகுதி கணினி வலையமைப்பு மூலம் இணைக்கப்பட்டு பல பயனர் இயக்க முறைமைகளை கொண்டு இயக்குவல்லது. பெருமுகக் கணினி முனையிலிருந்து பிணையத்துடன் இணைக்கப்பட்ட ஒரு தனி நபர் கணினி வரை எல்லாவற்றையும் குறிப்பிடுவதற்கு பணிநிலையம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மிக பொதுவான வடிவம், சன் மைக்ரோசிஸ்டம்ஸ், சிலிக்கான் கிராபிக்ஸ் போன்ற பல தற்போதைய[1] மற்றும் செயலிழந்த நிறுவனங்களால் வழங்கப்படும் வன்பொருள் குழுவை குறிக்கிறது. அப்போலோ கம்ப்யூட்டர், டி.இ.சி, ஹெச்பி, நெக்ஸ்ட் மற்றும் ஐபிஎம் ஆகியவை 1990 களின் பிற்பகுதியில் முப்பரிமான வரைகலை தொழில்நுட்பப் புரட்சிக்கான கதவைத் திறந்தன.