வேலைவாய்ப்பு உறுதி திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேலைவாய்ப்பு உறுதி திட்டம் (Employment Assurance Scheme (EAS)) 1993 ஆம் ஆண்டு, அக்டோபா் 2 அன்று இந்திய அரசால் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. நாட்டிலுள்ள வளா்ச்சியால் பாதிக்கப்பட்ட பழங்குடியினா் வாழக்கூடிய பாலைவனங்கள், பழங்குடியிருப்புகள் மற்றும் மலைப்பகுதிகளாகிய 1778 பிற்பட்ட தொகுப்புகளில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் விரிவாக்கப்பட்டு 5488 தொகுப்புகள் பயனடைந்தன. வேலையில்லா கிராமப்புற மக்களுக்கு கூலி வேலையை ஏற்படுத்தி தந்தது. [1][2] 1999 ம் ஆண்டு இத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டது. இதன் செலவினை மத்திய மாநில அரசுக்கு இடையே 75:25 என பிாித்துக்கொள்ளப்பட்டது. 2001ல் ஜவகா் கிராம வேலைவாய்ப்புத்திட்டம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி திட்டம் இரண்டும் இணைக்கப்பட்டது.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]