வேலூர் முள் கத்திரிக்காய்
வேலூர் முள் கத்திரிக்காய் (Vellore Spiny brinjal) | |
---|---|
வேறு பெயர்கள் | இலவம்பாடி முள்ளு கத்திரிக்காய் |
குறிப்பு | தமிழகத்தில் பயிரிடப்படும் கத்திரிக்காய் வகை |
வகை | கத்தரி |
இடம் | வேலூர் |
நாடு | இந்தியா |
பதிவுசெய்யப்பட்டது | 22 பிப்ரவரி 2023 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | ipindia.gov.in |
வேலூர் முள் கத்திரிக்காய் (Vellore Spiny brinjal) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் வளர்க்கப்படும் ஒரு கத்திரிக்காய் வகை ஆகும்.[1] இது வேலூர் மாவட்டத்தில் உள்ள இலவம்பாடி கிராமத்திலிருந்து உருவான ஒரு வெப்பமண்டலக் காய்கறி பயிராகும். இது முதன்மையாக வேலூர் மாவட்டத்தில், குறிப்பாக அணைக்கட்டு, கணியம்பாடி, குடியாத்தம், கீழ்வைத்தியான் குப்பம், வேலூர், காட்பாடி, பேரணாம்பட்டு பகுதிகளில் பயிரிடப்படுகிறது.[2]
இதன் இந்திய புவிசார் குறியீட்டின் கீழ், இது "வேலூர் முள் கத்திரிக்காய்" என்று குறிப்பிடப்படுகிறது.[3]
பெயர்
[தொகு]வேலூர் முள் கத்திரிக்காய் வேலூரின் ஒரு மதிப்புமிக்க, பூர்வீகக் காய்கறி பயிராகும். மேலும் இது வேலூர் எனும் இப்பயிர் விளையும் இடத்தால் பெயரிடப்பட்டது. இந்தக் கத்திரிக்காய் வகைத் தனித்துவமான முட்கள் காரணமாக எளிதில் அடையாளம் காணக்கூடியதாக இருப்பதால் "முள் கத்தரி" என்று அழைக்கப்படுகிறது.
உள்ளூர் பெயர்
[தொகு]இது உள்ளூர் மாநில மொழியான, தமிழ் மொழியில் 'இலவம்பாடி முள் கத்திரி' என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பெயர் இதன் தோற்றக் கிராமமான இலவம்பாடியைக் குறிக்கிறது. மேலும் முள் என்பது நேரடியாக முட்களைக் குறிக்கின்றது.[4]
விளக்கம்
[தொகு]வேலூர் முள் கத்திரிக்காய் பற்றிய சில குறிப்புகள்:[5]
பண்புகள்
[தொகு]- இந்த வகை இளஞ்சிவப்பு நிறத்தில், வெள்ளைக் கோடுகளுடன், பச்சை நிறம் கலந்த பளபளப்பான ஊதா நிறத்துடன் முட்டை வடிவத்தைக் கொண்டுள்ளது. இது சில விதைகளுடன் மென்மையான, சதைப்பற்றுடன் கூடியது. கத்தரிக்காய் ஒவ்வொன்றும் சராசரியாக 40 கிராம் எடை கொண்டது.
சாகுபடி
[தொகு]- இந்த வகை முதன்மையாக வேலூர் மாவட்டத்தில் பயிரிடப்படுகிறது. சம்பா சாகுபடி, குறுவை, கோடை ஆகிய மூன்று பருவங்களில் சாகுபடி செய்ய ஏற்றது. இது வறட்சியினையும் அதிக வெப்பநிலையையும் தாங்கி வளரக்கூடியது.
சமையல் பயன்கள்
[தொகு]- இந்த வகையை அவித்தல், பார்பிக்யூயிங், பொரித்தல், வறுத்தல், ஆவியில் வேகவைத்தல், ஊறுகாய் செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் சமையல் செய்யலாம். பிரியாணிக்கு தல்சா, கத்திரிக்காய் சர்வா, சாம்பார், வத்தல் குழம்பு, பொரியல், மாலை நேரச் சிற்றுண்டி போன்ற துணை உணவுகள் செய்வதற்கும் ஏற்றது.
தனித்துவமான அம்சங்கள்
[தொகு]- கத்திரிக்காய் உண்ணும் பகுதியினைத் தவிர, தாவரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முட்கள் உள்ளன. எனவே செடியிலிருந்து காய் பறிக்கத் திறமையான விவசாயிகள் தேவை. முட்கள் நிறைந்த செடியாக இருந்தாலும், கத்திரிக்காய் மென்மையாகச் சதைப்பற்றுடன் உள்ளது.
புவிசார் குறியீடு
[தொகு]வேலூர் முள் கத்தரி, பிப்ரவரி 22, 2023 அன்று இந்திய அரசின் கீழ் உள்ள புவிசார் குறியீடுகள் பதிவேட்டில் புவிசார் குறியீடு தகுதி பெற்றது. இத்தகுதி 28 அக்டோபர் 2031 வரை செல்லுபடியாகும்.[6]
வேலூரைச் சேர்ந்த தென்னிந்தியப் பன்முக மாநில வேளாண் கூட்டுறவுச் சங்கம், வேலூர் முள் கத்திரிக்காயின் புவிசார் குறியீட்டுப் பதிவை முன்மொழிந்தது. அக்டோபர் 2021-இல் விண்ணப்பத்தைத் தாக்கல் செய்த பிறகு, சென்னையில் உள்ள புவியியல் குறியீட்டுப் பதிவேட்டால் 2023ஆம் ஆண்டில் கத்திரிக்காய்க்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதனால் "வேலூர் முள் கத்திரிக்காய்" என்ற பெயர் இப்பகுதியில் வளர்க்கப்படும் கத்திரிக்காய்க்கு மட்டுமே பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் இது தமிழ்நாட்டிலிருந்து புவிசார் குறியீடு பெற்ற முதல் கத்திரிக்காய் வகையாகவும், தமிழ்நாட்டிலிருந்து புவிசார் குறியீடு பெற்ற 46வது பொருளாகவும் ஆனது.[7]
புவியியல் குறியீடு கத்திரிக்காயைச் சட்டவிரோத விற்பனை, சந்தைப்படுத்தலிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் இதற்குச் சட்டப் பாதுகாப்பையும் தனித்துவமான அடையாளத்தையும் வழங்குகிறது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The local thorny brinjal becomes pricey" (in en-IN). The Hindu. 25 July 2016. https://www.thehindu.com/news/national/tamil-nadu/The-local-thorny-brinjal-becomes-pricey/article14509307.ece.
- ↑ "Soon, Vellore’s spiny brinjal to get GI tag" (in en). The New Indian Express. 21 July 2021. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/Jul/20/soon-vellores-spiny-brinjal-to-get-gi-tag-2332599.html.
- ↑ "Vellore Spiny Brinjal". Intellectual Property India. Retrieved 1 December 2024.
- ↑ "5 Tasty South Indian Brinjal Recipes". www.news18.com (in ஆங்கிலம்). Retrieved 1 December 2024.
- ↑ "Tamil Nadu's Ramnad Mundu Chillies, Vellore Spiny Brinjal Awarded GI Label | What It Means". https://www.news18.com/news/india/tamil-nadus-ramnad-mundu-chillies-ramnad-mundu-chillies-awarded-gi-label-what-this-means-717852.html.
- ↑ "Vellore Spiny brinjal". Intellectual Property India. Retrieved 1 December 2024.
- ↑ "Vellore Spiny Brinjal, Ramnad Mundu Chilli conferred GI tag in Tamil Nadu". The Times of India. 25 February 2023. https://timesofindia.indiatimes.com/city/chennai/vellore-spiny-brinjal-ramnad-mundu-chilli-conferred-geographical-indications-tag-in-tamil-nadu/articleshow/98220733.cms."Vellore Spiny Brinjal, Ramnad Mundu Chilli conferred GI tag in Tamil Nadu". The Times of India. 25 February 2023. Retrieved 1 December 2024.